திக்கற்றவர்களுக்கும்,அனாதைக்கும்,நீரே துணை. தி.பாடல்கள் 10 : 14
கடவுளாகிய ஆண்டவர் தாயின் கருவிலே தெரிந்துக்கொண்டு நம் பிறப்பை அறிந்தவராக இருக்கிறார். அவரின் நீதி வானம் வரைக்கும் எட்டுகிறது. அவர் மாபெரும் செயல்களை செய்கிறார்.அவருக்கு நிகரானவர் யார்? நாம் இன்னல்களையும், தீங்குகளையும்,காணும்படி செய்தாலும் பாதாளத்திலிருந்து தூக்கி விடுவித்து மீண்டும் உயிர் அளிப்பவர் அவரே! திக்கற்ற பிள்ளைகளுக்கு தந்தையாகவும்,காப்பாளராகவும், இருப்பவர் அவரே! தனித்திருப்போருக்கு உறைவிடமானவரும் அவரே! ஒரு அழகிய கிராமம் ஒன்றில் மலர்விழி தனது தாய், தந்தையுடன் ஒரே செல்லப்பிள்ளையாக வசித்து வந்தாள். கஷ்டம்,கவலை என்றால் என்ன என்று தெரியாமல் அவள் பெற்றோர் அவளை கண்ணின் மணியைப்போல் காத்து அவள் கேட்கும் யாவற்றையும் வாங்கிக்கொடுத்து அவளை மிகவும் நேசித்து வளர்த்து வந்தனர். எப்போதும் போல அன்றும் அந்த கிராமத்தில் உள்ள அவள் படித்த பள்ளிக்கு காலை கிளம்பி போய்விட்டாள்.அவள் 6 ம் வகுப்பு படித்து வந்தாள். அவள் போன சிறிது நேரத்தில் அவள் தந்தைக்கு நெஞ்சு வலி வந்தது. உடனே அருகில் உள்ள ஒரு நகரத்துக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கே மருவத்துவர் பரிசோதித்து பார்த்துவிட்டு அவர்...