என் நெறிகேட்டையும், பாவத்தையும் போக்கினீர்
தவறான வாழ்க்கை, செய்யக்கூடாத தவறுகளை கடவுள் போக்கினார் என்று ஆசிரியர் கூறுகிறார். கடவுள் நீதியுள்ளவர் என்று சொல்கிறோமே? நீதியுள்ளவர் என்றால் ஒரு மனிதர் செய்த தவறுகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டாமா? எப்படி செய்த தவறுகளை போக்க முடியும்? கடவுள் எந்த ஒரு ஆன்மாவும் தவறான வழிக்குச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறவர் கிடையாது. ஒவ்வொரு ஆன்மாவும் மீட்கப்பட வேண்டும் என்று சிரத்தை எடுக்கிறவர். அதனுடைய ஒரு அடையாளம் தான், மற்றவர்களின் குற்றங்களைப் போக்குவது. கடவுளிடம் நமது தீய செயல்களை ஒளிவு மறைவின்றி, உண்மையான மனவருத்தத்தோடு வெளிப்படுத்துகிறபோது, மனமிரங்கி மன்னிக்கக்கூடியவராக இருக்கிறார். தாவீது அரசர் செய்த தவறு அனைவருக்குமே தெரியும். ஒரு அரசராக இருக்கிறவர், தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி செய்யக்கூடாது தவறைச்செய்கிறார். யாரும் அறியவில்லை என்கிற மமதையோடு இருக்கிறார். ஆனால், அவர் செய்த தவறை கடவுள் அறிவார் என்று இறைவாக்கினரால் உணர்த்தப்பட்டபோது, தன்னுடைய தவறு வெளிப்பட்டுவிட்டதே என்று அவர் கோபப்படவில்லை. மாறாக, தன்னுடைய...