Category: இன்றைய வசனம்

எபிரேயருக்கு எழுதிய திருமுகம் 10:23

நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர். எனவே நாம் எதிர்நோக்கியிருப்பதைப்பற்றித் தயக்கமின்றி அறிக்கையிடுவதில் நிலையாய் இருப்போமாக. ~ எபிரேயருக்கு எழுதிய திருமுகம் 10:23

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 62:11

‘ஆற்றல் கடவுளுக்கே உரியது!’ என்று அவர் ஒருமுறை மொழிய, நான் இருமுறை கேட்டேன். ~திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 62:11

நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 16:3

உன் செயல்களை ஆண்டவரிடம் ஒப்படை; அவற்றை வெற்றியுடன் நிறைவேற்றுவாய். ~ நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 16:3

பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 8:6

ஊனியல் மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது சாவே; ஆவிக்குரிய மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது வாழ்வும் அமைதியும் ஆகும். ~ பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 8:6

1 கொரிந்தியர் 13

அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும். ~1 கொரிந்தியர் 13:7