Category: இன்றைய வசனம்

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 100:4

நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! ~திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 100:4

1 குறிப்பேடு 16:34

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு! ~1 குறிப்பேடு 16:34

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 145:14

தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார். திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 145:14

விடுதலைப் பயணம் 4:15

உனக்குப் பதிலாக மக்களிடம் அவன் பேசுவதால், அவன் உனக்கு வாயாக இருப்பான். நீயோ அவனுக்குக் கடவுள் போல் இருப்பாய். ~விடுதலைப் பயணம் 4:15

யோவான்14:18

நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன். ~யோவான்14:18