பெயர் சொல்லி அழைத்து அறிந்திருக்கிற தேவன்.
கர்த்தருக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். இந்த உலகத்தில் பிறந்து வாழும் நம் ஒவ்வொருவரையும் கடவுள் அறிந்திருக்கிறார். நமது தேவைகளையும் அறிந்திருக்கிறார். அவரின் சித்தப்படி கேட்போமானால் நிச்சயம் அதை தர காத்திருக்கிறார். இதோ என் உள்ளங்கைகளில் வரைந்து [பொறித்து]வைத்துள்ளேன். உன் சுவர்கள் எப்பொழுதும் என் கண்முன் நிற்கின்றன. எசாயா 49:16 என்று வாசிக்கிறோம். நம் ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு அவரின் நோக்கத்தை நிறைவேற்ற நம் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னே நம்மை பெயர் சொல்லி அறிந்திருக்கிறார். உதரத்திலிருந்து உங்களைத் தாங்குபவர் நான், கருவிலிருந்தே உங்களை சுமப்பவர் நான். உங்கள் முதுமை வரைக்கும் நான் அப்படியே இருப்பேன்: நான் நரை வயதுவரைக்கும் உங்களைத் தாங்குவேன், சுமப்பேன். உங்களை உருவாக்கிய நானே உங்களைத் விடுவிப்பேன். ஏசாயா 46: 3,4. அதுமட்டுமா? தேர்ந்தெடுக்கப்பட்ட நம்மை இயேசுவின் சாயலாய் மாறவேண்டும் என்று முன்குறித்து வைத்திருக்கிறார். அவர் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார். தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையவ ராக்கி இருக்கிறார். தமக்கு ஏற்புடையோரை தம் மாட்சியில் பங்கு பெறச்...