Category: இன்றைய வசனம்

மனுக்குலத்துக்கே அரசனாகிய இயேசுகிறிஸ்து சாரோனின் ரோஜா.

கர்த்தருக்குள் அன்பான சகோதரர்,சகோதரிகளுக்கு, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். சுமார் 800 வருஷங்களுக்கு முன்பே ஏசாயா தீர்க்கதரசி இவ்வாறு எழுதி வைத்துள்ளார். நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை. நாம் விருப்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை. அவர் இகழப்பட்டார். மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்.வேதனையுற்ற மனிதராய் இருந்தார். காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார். அவர் இழிவு படுத்தப்பட்டார். அவரை நாம் மதிக்கவில்லை.நம் துன்பங்களை சுமந்துக்கொண்டார்.நமக்காக சிறுமை படுத்தப்பட்டார்.அவரே நம் குற்றங்களுக்காக காயமடைந்தார்.நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்.நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்.அவருடைய காயங்களால் நாம் குணமடைகிறோம்.நாம் ஆடுகளைப்போல் வழி தவறி அலைந்தோம்,ஆனால் கடவுளோ நம் அனைவரின் தீச்செயல்களுக்காக அவரை காயப்படுத்தினார்.அடிப்பதற்கு இழுத்து செல்லும் ஆட்டைப்போலவும்,ரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போல் தமது வாயை திறவாமல் நம்முடைய பாவங்கள்,சாபங்கள்,அக்கிரமங்கள்,யாவையும் சுமந்தார். சாரோனின் ரோஜாவாய்,பள்ளத்தாக்கின் லீலிபுஷ்பமுமாயிருந்த அவர்,வாழ்நாள் முழுதும் சாவு பற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டுக் கிடந்த நம்மை விடுவிக்க அடிமையின்...

இயேசு கிறிஸ்து நமக்காக சாவை ருசித்து ஏற்றுக்கொண்டார்.

ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்தில் மனுக்குல மைந்தனாய் நமக்காக வந்து நம்முடைய பாவங்களை போக்கி நம்மை மீட்டு தமது தந்தையிடம் அழைத்து செல்ல தம்மையே ஜீவ பலியாக இந்த நாளில் ஒப்புக்கொடுத்து நம்மை மீட்டெடுத்த நாள். நமக்கு முன் மாதிரியான வாழ்வை வாழ்ந்து காண்பித்த அவரின் வாழ்க்கையை பாடமாக வைத்து நாமும் அவரின் பாதையில் நடப்போமாக. நேற்றைய தினத்தில் பாஸ்கா திருவிருந்தில் தமது சீடர்களோடு கலந்துக்கொண்டு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி அதைப்பிட்டுச் சீடருக்கு கொடுத்து இதைபெற்று உண்ணுங்கள்: இது எனது உடல், என்றார். பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்கு கொடுத்து இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள். ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்: பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில் தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்: அதுவரை குடிக்க மாட்டேன் என நான் உங்களுக்கு சொல்கிறேன், என்றார். அதன்பின்னர் இயேசு தமது சீடர்களோடு கெத்சமனி என்னும் இடத்திற்கு போய் அங்கே...

நமக்காக பஸ்காவை ஆயத்தப்படுத்தினார்

கர்த்தருக்குள் அன்பான சகோதரர், சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். நம்முடைய ஆண்டவர் நம்முடைய பாவங்களுக்காக மரிக்க தம்மை ஒப்புக்கொடுத்து பாஸ்கா விருந்தை ஏற்பாடு செய்கிறார்.பாஸ்கா என்றால் கடந்து செல்லுதல் என்று அர்த்தம். அதாவது நம்முடைய பாவங்களை சிலுவையில் சுமந்து தமது உயிரை நமக்கு அர்ப்பணித்து நம்மை விட்டு கடந்து தமது தந்தையிடம் பரலோகம் செல்கிறார். நமது வீட்டுக்கு ஒரு நண்பர் வந்தாரானால் அவர் நம்மை விட்டு செல்லுமுன் நாம் அவரை உபசரித்து அனுப்புவோம். அதுபோல்தான் ஆண்டவரும் ஒரு நண்பராய் வந்து நம்மையெல்லாம் உபசரித்து நம்மை எல்லா தீமைகளிலிருந்தும் மீட்டு இவ்வுலகத்தை விட்டு கடந்து சென்றுள்ளார். இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் 430 வருஷம் அடிமைகளாய் இருந்து மாதங்களில் தலையாயது மாதமான முதல் மாதத்தில் எகிப்தை விட்டு புறப்பட ஆண்டவர் ஆயத்தப்படுத்தின மாதம். எகிப்தை விட்டு இஸ்ரயேல் மக்கள் கானான் தேசத்துக்கு ஆண்டவர் அவர்களை அத்தேசத்திலிருந்து கடந்து செல்ல உதவுகிறார். கசப்பை உண்ட தமது மக்களுக்கு இனிப்பை அருளிய நாள். அதனால்தான் அந்த நாளில்...

கடவுள் தமது வார்த்தையை அனுப்பி நம்மை மீட்பார்.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஒவ்வொரு சகோதரர், சகோதரிகளுக்கு என் அன்பின் நல்வாழ்த்துக்கள். ஆண்டவராகிய இயேசு மார்ச் மாதம் முழுதும் நம்மோடு கூடவே இருந்த நம்மை எல்லாத் தீங்கிற்கும் விலக்கி காத்து ஒரு சேதமும் நம்மை தாக்காதபடிக்கு காத்து வந்திருக்கிறார். அவருக்கு நமது நன்றியை நம் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து தெரிவித்து,அவர் பாதம் பணிவோம். இதுபோல் வருகிற ஏப்ரலிலும் நம்மை காத்து வழிநடத்த வேண்டுமாய் அவரிடத்தில் கெஞ்சி மன்றாடுவோம்.ஏனெனில் நாம் ஒவ்வொரு நாளும் இந்த உலகில் வாழ்வது ஆண்டவரின் கிருபையே.நாம் செய்தி தாளில் வாசித்து பார்ப்போமானால் ஒருநாளில் எவ்வளவு விபத்து நடக்கிறது என்று நாம் யாவரும் அறிந்த ஓன்று. ஆனாலும் நமக்கு எந்த தீங்கும் ஏற்படாதபடிக்கு காத்து வந்த தேவனை மனதார ஸ்தோத்தரித்து நன்றிபலி ஏறெடுப்போம். நான் இன்று உயிரோடு இருப்பது ஆண்டவரின் மேலான கிருபையே. கடந்த மார்ச் 18ம் தேதி நான் என் கணவருடன் பைக்கில் சென்று கொன்று இருந்தேன். ஒரு நிமிஷத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாத அளவு ஒரு பெரிய விபத்து நேரிட இருந்தது....

கடவுளின் ஆட்சியையும்,அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுவோம். மத்தேயு 6:33.

கர்த்தருக்குள் அன்பான சகோதரர்,சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். நாம் நமது கடவுளின் ஆட்சியை தேடுவோமானால் அவரும் நம்முடைய சுகவாழ்வுக்கு கட்டளையிடுவார். ஒவ்வொருநாளும் காலையில் எழுந்து முதலாவது அவரை தேடி நம் தேவைகளை அவரிடம் ஒப்புக்கொடுத்தால் அவர் நம்மை நாம் நடக்க வேண்டிய வழியில் வழிநடத்துவார். நம்முடைய தேவைகள் யாவையும் சந்திப்பார்.இப்படிச் செய்வதால் நாமும் விண்ணகத் தந்தையின் மக்களாக ஆவோம். நாம் வேண்டுவது யாவையும் நமக்கு சேர்த்துக்கொடுக்கப்படும். நமக்குள்ளதை பிறர்க்கு பகிர்ந்து கொடுப்போம்.நம்மால் ஆனா உதவிகளை பிறர்க்கு செய்வோம். இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் அவர் ஒவ்வொருவரையும் தேடிச் சென்று அன்பு செய்து உதவிகளையும் செய்தார். நாமும்  அவ்வாறு நடப்போம். நாம் உயிர் வாழ எதை உண்பது எதை குடிப்பது? என்று கவலைப்படத்தேவையில்லை. உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் உயர்ந்தது அல்லவா? வானத்து பறவைகளை பாருங்கள். அவை விதைப்பதும் இல்லை, அறுப்பதும் இல்லை, களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை.நமது தந்தை அவற்றுக்கு உணவு அளிக்கிறார். அவற்றைவிட நாம் மேலானவர்கள் அல்லவா!நமது...