Category: இன்றைய வசனம்

ஆண்டவர் நம்மை எல்லா இன்னல்களினின்றும் விடுவிப்பார்.தி.பா.54 : 7

இன்றும் நாம் நமது முழு இதயத்தோடும்,முழு உள்ளத்தோடும்,கடவுளாகிய ஆண்டவர் விதிக்கும் அவருடைய நியமங்களை கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்தோமானால் நம்மை எல்லா இன்னல்களின்றும் விடுவிக்க வல்லவராய் இருக்கிறார்.அவர் உருவாக்கிய எல்லா மக்களினங்களிலும், புகழிலும், பெயரிலும், மாட்சியிலும், நம்மையே உயர்த்தி தூய  மக்களினமாக வாழவைத்து வழிநடத்தி செல்வார். நம்மை ஆசீர்வதித்து வாழவைக்கவே ஆண்டவர் மானிடராக இவ்வுலகத்திற்கு வந்தார். நமக்காகவே முள் முடி சூட்டப்பட்டார். நமது பாவத்துக்காகவே சிலுவையில் அறையப்பட்டார். நம்மேல் கொண்டுள்ள தமது பேரன்பினால் உயிரையே நமக்கு கொடுத்துள்ளார்.அப்படியிருக்க மீதமுள்ள காரியங்களை கொடுக்காமல் இருப்பாரா? யோனத்தானும்,தாவீதும் நல்ல நண்பர்களாய் இருந்தார்கள்.யோனத்தான் தாவீதை தன் உயிரெனக் கருதி அவர்மீது அன்பு கொண்டிருந்தார் யோனத்தானுக்கு தெரியும்,தனது தந்தையான சவுலின் ஆட்சியை ஆண்டவர் தாவீதுக்கு கொடுக்க போகிறதை அறிந்திருந்தும் அவர் தாவீதை உயிரென நேசித்ததினால் தன் தந்தை தாவீதை கொல்ல முயற்சி எடுக்கும் பொழுதெல்லாம் யோனத்தான் தாவீதுக்காக பரிந்து பேசி அவரை கொல்லாதபடிக்கு தமது தந்தையிடம் இருந்து காப்பாற்றி அனுப்பி வைக்கிறார். ஏனென்றால் தாவீதின்மேல் உள்ள அன்பின் பெயரால் அவருக்கு ஆணையிட்டு காப்பாற்றுகிறார்....

கடவுளாகிய ஆண்டவர் உன்னை உயர்த்துவார். இ.சட்டம்.28:1

அன்பானவர்களே! நமக்கு ஆண்டவர் விதிக்கும் அவருடைய கட்டளைகள் அனைத்தையும் கடைப்பிடித்தால் அப்போது உலகிலுள்ள மக்களினங்கள் அனைத்திற்கும் மேலாக கடவுளாகிய ஆண்டவர் நம்மை உயர்த்துவேன் என்று வாக்கு அருளியிருக்கிறார். அவர் அருளிய வாக்கை கடைப்பிடிப்பதில் ஒரு கஷ்டமும் இல்லையே! அப்படியிருக்க நாம் ஏன் அவர் விதிக்கும் கட்டளைக்கு கீழ்படிந்து செவிகொடுக்கக் கூடாது? ஏன் அதை கடைப்பிடிப்பதில் கருத்தாயிருக்கக் கூடாது? ஒவ்வொருவரும் யோசித்து அதன் வழியே நடப்போம். உலகப்பிரமாண காரியங்களில் நாம் ஈடுபட்டு இருக்கும் பொழுது நம் மேலதிகாரிக்கு எவ்வளவாய் பயந்து காரியங்களை செய்கிறோம். நமது ஆண்டவரோ வானத்தையும், பூமியையும், காற்றையும், கடலையும், உலகில் உள்ள யாவையையும் உண்டாக்கிய கடவுள். அப்படியிருக்க நாம் அவருக்கு எவ்வளவாய் பயந்து பயபக்தியோடு நடக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் யோசித்து அதன்படியே செயல்படுவோம். நாம் அவ்வாறு நடந்தோமானால் அப்பொழுது நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மை உயர்த்தி நாம் செல்லும் இடமெங்கும் நம்மை ஆசீர்வதித்து காத்துக்கொள்வார்.கருவின் கனியையும், நிலத்தின் பயனையும் கால்நடைகளின் ஈற்றுகளையும், மாடுகளின் கன்றுகளையும், ஆடுகளின் குட்டிகளையும், நம் வீட்டில் உள்ள பொருளாதாரத்தையும் காத்து...

இறையாட்சி பேச்சில் அல்ல,செயல்பாட்டில்தான் இருக்கிறது.1 கொரிந் தியர் 4:20.

நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்கு தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது. நீங்களே அக்கோவில் என்று வேதத்தில் வாசிக்கிறோம். நாம் கடவுளை பின்பற்றி அவரின் வார்த்தைகளை கைக்கொண்டு நடப்போமானால் நம்முடைய செயல்பாட்டை வெறும் பேச்சில் அல்லாது அதை செயல்பாட்டில் காண்பிக்கிறவர்களாய் வாழ வேண்டும். ஆண்டவர் கட்டளையிடும் அனைத்து காரியங்களையும் கடைப்பிடித்து உண்மையாய் நடந்தால் நம்மை ஆசீர்வதித்து உயர்த்துவார். நாம் நம்மையே ஏமாற்றிக்கொள்ளாதபடிக்கு நமது மன விருப்பங்களின் படி செய்து இதுதான் கடவுள் விரும்பும் காரியம் என்று பாவ வாழ்க்கையில் ஈடுபட்டால் நம் செயல்பாட்டில் குறை உள்ளவர்களாய் ஆவோம் நமக்கு நாமே தீர்ப்பளித்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில் வேதத்தில் நாம் வாசிப்பது படி எனக்கு எதிராகக் குற்றம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும், நான் குற்றமற்றவனாகி விடமாட்டேன். எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் ஆண்டவர் ஒருவரே.எனவே, குறித்த காலம் வருமுன், அதாவது ஆண்டவரின் வருகைக்குமுன் யாருக்கும் தீர்ப்பளிக்க வேண்டாம்.அவரே இருளில் மறைந்திருப்பவற்றை வெட்ட வெளிச்சமாக்குவார்: உள்ளங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது...

கர்த்தர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களை காப்பார்.

இயேசுகிறிஸ்துவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப் பட்டவர்களாயுமிருக்கிற ஒவ்வொருவரின் பாதங்களையும் ஆண்டவர் காத்துக்கொள்வார். யார் அந்த பரிசுத்தவான்கள் என்றால் அவருக்கு கீழ்படிந்து பயந்து, அவரின் சித்தத்தை செயல்படுத்தும் ஒவ்வொருவரும் பரிசுத்தவான்களே ஆவார்கள். அவரால் பெயர் சொல்லி அழைக்கப்பட்டு அவரின் இரத்தத்தால் தூய்மையாக்கப்பட்டு அவருடைய நற்செய்தியை அறிவிப்பாளர்களாகவும் அவரின் நல்வாழ்வைப் பலப்படுத்தும் நலம்தரும் செய்தியை உரைத்து, அவர் தரும் விடுதலையை எல்லாம் மக்களும் பெற்றுக்கொள்ளும் வண்ணம் பறைசாற்றி நம் கடவுள் ஒருவரே அரசாளுகின்றார் என்று எடுத்துரைத்து வருபவர்களின் பாதங்களை ஆண்டவர் அழகாக ஒரு தீங்கும் அவர்களை தொடாதபடிக்கு அவர்களுடைய பாதங்களை காப்பார். ஏசாயா 52:7 :நாகூம் 1:15 மற்றும் உரோமையர் 10:15.ஆகிய வசனங்களில் வாசிக்கலாம். அப்பேற்பட்ட பரிசுத்தவான்கள் உலகத்தை நியாந்தீர்ப்பார்களென்று நாம் அறிந்து கொள்ள வேண்டும். நமக்கு ஒரு வழக்கு ஏதாவது உண்டானால் நாம் அவர்களிடம் சென்று நமது வழக்கை தீர்த்துக் கொள்ளலாம் என்று 1 கொரிந்தியர் 6:1,2,3 ஆகிய வசனங்கள் கூருகிறது. அவர்கள் தேவதூதர்களையும் நியாந்தீர்ப்பார்கள் . ஆண்டவர் இந்த உரிமையை நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கிறார். ஏனெனில் அவருடைய இரத்தத்தால்...

ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோம்..1 யோவான் 3:11

ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில், அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்துக்கொள்ளவில்லை. ஏனெனில் கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் கடவுள் மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதினால் அல்ல. மாறாக அவர் நம்மீது அன்புக்கொண்டு தம் மகனை நம் பாவங்களுக்காக அவர் இரத்தத்தை சிலுவையில் சிந்தி நம்மை மீட்கும்படி இந்த உலகிற்கு அனுப்பி இரத்ததினால் நம்மை சம்பாதிக்கும்படி செய்து இவ்வாறு தமது அன்பை வெளிப்படுத்தினார். அன்பானவர்களே! கடவுள் இவ்வாறு நம்மீது அன்புக்கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர் மீது அன்புக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோமென்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார். அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும். அன்பின் ஊற்றே கடவுள்தான். அன்பு செலுத்துவோரே கடவுளுக்கு நெருக்கமானவர்கள் ஆவார்கள். ஜெபம் அன்பே...