ஆண்டவர் நம்மை எல்லா இன்னல்களினின்றும் விடுவிப்பார்.தி.பா.54 : 7
இன்றும் நாம் நமது முழு இதயத்தோடும்,முழு உள்ளத்தோடும்,கடவுளாகிய ஆண்டவர் விதிக்கும் அவருடைய நியமங்களை கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்தோமானால் நம்மை எல்லா இன்னல்களின்றும் விடுவிக்க வல்லவராய் இருக்கிறார்.அவர் உருவாக்கிய எல்லா மக்களினங்களிலும், புகழிலும், பெயரிலும், மாட்சியிலும், நம்மையே உயர்த்தி தூய மக்களினமாக வாழவைத்து வழிநடத்தி செல்வார். நம்மை ஆசீர்வதித்து வாழவைக்கவே ஆண்டவர் மானிடராக இவ்வுலகத்திற்கு வந்தார். நமக்காகவே முள் முடி சூட்டப்பட்டார். நமது பாவத்துக்காகவே சிலுவையில் அறையப்பட்டார். நம்மேல் கொண்டுள்ள தமது பேரன்பினால் உயிரையே நமக்கு கொடுத்துள்ளார்.அப்படியிருக்க மீதமுள்ள காரியங்களை கொடுக்காமல் இருப்பாரா? யோனத்தானும்,தாவீதும் நல்ல நண்பர்களாய் இருந்தார்கள்.யோனத்தான் தாவீதை தன் உயிரெனக் கருதி அவர்மீது அன்பு கொண்டிருந்தார் யோனத்தானுக்கு தெரியும்,தனது தந்தையான சவுலின் ஆட்சியை ஆண்டவர் தாவீதுக்கு கொடுக்க போகிறதை அறிந்திருந்தும் அவர் தாவீதை உயிரென நேசித்ததினால் தன் தந்தை தாவீதை கொல்ல முயற்சி எடுக்கும் பொழுதெல்லாம் யோனத்தான் தாவீதுக்காக பரிந்து பேசி அவரை கொல்லாதபடிக்கு தமது தந்தையிடம் இருந்து காப்பாற்றி அனுப்பி வைக்கிறார். ஏனென்றால் தாவீதின்மேல் உள்ள அன்பின் பெயரால் அவருக்கு ஆணையிட்டு காப்பாற்றுகிறார்....