ஆண்டவரின்மேல் உன் கவலையை போட்டுவிடு.தி.பாடல்கள்.55:22
கடவுள் நம்முடைய மன்றாட்டுக்கு செவிசாய்த்து,நாம் முறையிடும் வேளையில் நம்மை மறைத்துக்கொள்கிறார். நம் விண்ணப்பத்தைக்கேட்டு நம்முடைய கவலைகளை, பாரங்களை அவர் ஏற்றுக்கொள்கிறார். கடுந்துயரம் நம் உள்ளத்தை பிளந்தாலும் சாவின் திகில் நம்மை கவ்விக் கொண்டாலும், அச்சமும், நடுக்கமும் நம்மை பற்றிக்கொண்டாலும் நாம் மனம் கலங்க தேவையில்லை. பிசாசு நம் உள்ளத்தை வஞ்சித்து நம்மை ஏமாற்றி நாம் சோர்ந்து போகும் வண்ணமாக சில முயற்சிகளை கையாளப்பார்ப்பான். நாம் அவனுக்கு எதிர்த்து நின்றால் அவன் நம்மைவிட்டு ஓடிடுவான். நாம் சோர்ந்து போனால் இதுதான் சமயம் என்று நம்மை ஒழிக்கப்பார்ப்பான். ஆகையால் நம் கவலைகளை ஆண்டவரின்மேல் போட்டுவிட்டால் அவர் நம்மை எல்லாத் தீங்கிற்கும் விலக்கி காத்துக்கொள்வார். அதற்காகத்தான் நாம் தினந்தோறும் ஆண்டவரின் வார்த்தைகளை வாசித்து தியானிக்கும்பொழுது அவ்வார்த்தை நம்மை ஒவ்வொருநாளும் மெருகேற்றி நாம் வழிதப்பி போகாதபடிக்கு நமக்கு போதித்து அறிவுரை வழங்கும். யாரையும் தெடிசெல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஆண்டவரின் வார்த்தை நமக்கு நல்ல வழிக்காட்டியாய் இருக்கும்.அதனால் தான் இயேசுவும் வழியும், உண்மையும், வாழ்வும் நானே என்று யோவான் 14 : 6 ல்...