கடவுள் நமக்கு விதித்த வழிகளில் நடப்போம்.இ.ச ; 5 – 33
இந்த நாளிலும் நம் ஆண்டவராகிய கடவுள் நமக்கு முன்னே சென்று குன்றுகளை சமப்படுத்தவும்,செப்புக்கதவுகளை,உடைத்து இருப்புத்தாழ்ப்பாள்களை தகர்த்து இருளில் மறைத்து வைத்த கருவூலங்களை யும்,புதையல்களையும்,தர காத்திருக்கிறார்.ஏனெனில் நம்மை பெயர் சொல்லி அழைத்த ஆண்டவர் அவரே என்று நாம் அறியும்படிக்கு இதை செய்கிறார். எசாயா 45:2,3. ஆகையால் நாம் அதை பெற்றுக்கொள்ள நம்மை தகுதிப்படுத்த வேண்டுமாய் விரும்புகிறார். நாம் அவர் விதித்த வழிகளில் நடந்தால் நிச்சயம் அவைகளை எல்லாம் பெற்றுக்கொள்வோம் என்பதில் சிறிதேனும் சந்தேகம் இல்லை. ஒளியை உண்டாக்கி, இருளை படைத்து நல்வாழ்வை அமைத்து கொடுப்பவர் அவரே. உலகை உருவாக்கி அதின்மேல் மனிதரை படைத்து, வானத்தை விரித்தவரும் அவரே. அவரின்றி கடவுள இல்லை. நீதியுள்ளவரும்,மீட்பு அளிப்பவரும் அவரே, முழங்கால் அனைத்தும் அவர்முன் மண்டியிட செய்கிறவரும் அவரே. இத்தனை வல்லமை உள்ள தேவனின் திருவுளத்தை அறிந்து அவருக்கு பிரியமாய் நடந்து இந்த தவக்காலத்திலும் அவரின் பிள்ளைகள் என்ற நற்பெயரை பெற்றுக்கொள்வோம்.அப்பொழுது நாம் நினைப்பதற்கு மேலான ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளலாம்....