Category: இன்றைய வசனம்

ஆண்டவரின் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்

ஆண்டவரின் திருச்சட்டம் நமக்கு அனைத்து காரியங்களையும் போதித்து வழிநடத்துகிறது. அதனால்தான் அதின் வழியில் நடப்போர் பேறுபெற்றோர் ஆகிறார்கள். அவரின் திருச்சட்டம் நமக்கு கடினமான காரியத்தை சொல்லவில்லை. அது முழுதும் அன்பின் வழியாகவும், ஒழுக்கத்தின் வழியாகவும் உள்ளது. ஆண்டவரின் ஒழுங்குமுறைகளை கடைப்பிடித்து அநீதி செய்யாமல் அவரின் கட்டளைகளை எல்லாம் கடைப்பிடித்து நடந்தோமானால் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார். ஆபிரகாம் ஆண்டவரில் முழுதும் நம்பிக்கை வைத்து தமது விசுவாசத்தை காத்துக்கொண்டார். யாக்கோபு ஆண்டவருக்கு பொருத்தனை செய்தபடி தனக்கு கிடைத்த எல்லாவற்றிலும் தசமபாகம் ஆண்டவருக்கு அளித்து தமது நீதியை நிலைநாட்டினார். யோசேப்பு தான் வாலிபவயதிலும் பொல்லாப்புக்கு விலகி ஆண்டவருக்கு பயந்து நடந்தார். மோசே பார்வோன் அரண்மனையில் வளர்ந்தாலும் அந்நிய தெய்வமான எகிப்தின் சிலை வழிப்பாட்டுக்கு விலகி தமது மக்களோடு சேர்ந்து பாடுகள் அனுபவித்தாலும் ஆண்டவரின் ஒவ்வொரு வார்த்தைக்கும் கீழ்படிந்து அவரின் சிநேகதரானார். எஸ்தர் தன்னுடைய இன மக்கள் அழிந்து போகாதவாறு மூன்று நாள் பகலும், இரவும் உபவாசம் இருந்து தம் மக்களை மீட்க தமது உயிரை பணயம்...

ஆண்டவரின் கிருபை என்றும் உள்ளது

கடவுளைத் துதியுங்கள்.அவர் கிருபை என்றும் உள்ளது என்று தாவீது சங்கீதம் 107:1ல் சொன்னதுபோல நாமும் சொல்வோம். ஏனெனில் அவர் கிருபை இல்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. இஸ்ரயேல் மக்கள் வனாந்தரத்தில் கடந்து வந்தபொழுது ஆண்டவரின் மகிமையை கண்கூடாக கண்டு அவருக்கு விரோதமாக பாவம் செய்தார்கள். ஆனாலும் அவர்கள் மறுபடியும் ஆண்டவரை நோக்கி கூப்பிடும் பொழுது அன்பே உருவான தேவன் அவர்கள் கூப்பிடுதலுக்கு செவிக்கொடுத்து அவர்களின் எல்லா இக்கட்டுகளில் இருந்தும் காப்பாற்றினார். கானான் நாட்டை காணும் முன் ஆண்டவருக்கு விரோதமாக முறுமுறுத்து பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா தொய்ந்ததாகவும் அலைந்து திரிந்தார்கள். தங்கள் ஆபத்திலே ஆண்டவரை நோக்கி கூப்பிட்டார்கள். அப்பொழுதெல்லாம் ஆண்டவர் அவர்கள் ஆத்துமாவை  திருப்தியாக்கி, நன்மையினால் நிரப்பினார். அவருடைய கிருபையின் நிமித்தமும், அவர் மனுஷர் மேல் வைத்த பிரியத்தின் நிமித்தமும் அப்படி செய்தார். அந்தகாரத்திலுள்ள மரண இருளிலுமிருந்து அவர்களை வெளிப்படப்பண்ணி வெண்கலக் கதவுகளை உடைத்து இருப்புத்தாழ்ப்பாள்களை முறித்து, தமது வசனத்தை அனுப்பி அவர்களைக்குணமாக்கி, எல்லா அழிவுக்கும் விலக்கி காத்தார். ஏனெனில் அவரின் கிருபையின் நிமித்தமும், மனுஷர் மேல்...

”இயேசு, ‘எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை’ என்றார்” (மத்தேயு 9:16)

இயேசு மனித வரலாற்றில் ஒரு மாபெரும் புதுமை கொணர்ந்தார். பழைய முறைகள் மறைந்துபோக புதிய முறைகள் உதயம் ஆயின. கடவுளை வழிபடுவதில் நோன்பு ஒரு முக்கிய இடம் வகித்தது. ஆனால் இயேசுவோ விருந்துகளில் மனமுவந்து பங்கேற்றார். யூத சமய வழக்குகளைப் பின்பற்றாத மக்களைப் ”பாவிகள்” என அழைத்தனர் அக்காலத்துப் பரிசேயர்கள். ஆனால் இயேசு அந்தப் ”பாவிகளோடு” சேர்ந்து உணவருந்தினார்; தீட்டுப்பட்டோர் எனக் கருதப்பட்ட மக்களோடு உறவாடிப் பழகினார். இவ்வாறு புதுமைகள் பல கொணர்ந்த இயேசு தம்மை மணமகனுக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார். திருமண விழாவின்போது சிறப்பான விதத்தில் விருந்து கொண்டாடுவர். அங்கே நோன்புக்கு இடமில்லை. எனவே, இயேசு மக்கள் நடுவே மகிழ்ச்சி கொணர்ந்தார்; அவர்கள் நட்புறவில் நிலைத்துநின்று அன்புப் பிணைப்புகளால் இணைந்திட வழிவகுத்தார். பழையதையும் புதியதையும் ஒன்றுசேர்த்தால் குழப்பம்தான் உருவாகும் என இயேசு இரு உவமைகள் வழியாக எடுத்துரைக்கிறார். பழைய ஆடையில் ஒட்டுப்போட புதிய துணியைப் பயன்படுத்துவதில்லை எனவும், புதிய திராட்சை இரசத்தைப்...

மறைபொருள்களை வெளிப்படுத்துபவர் நம் கடவுள் ஒருவரே!!!

இந்த செய்தியை வாசிக்கும் நீங்கள் ஒரு கிறிஸ்துவராகவோ அல்லது வேறு எந்த இடத்தில் இருந்தாலும் யோசித்து செயல்பட உங்களை அன்போடு அழைக்கிறேன்.இது எங்கோ ஒரு இடத்தில் யாருக்கும் தெரியாத நடந்த சம்பவம் கிடையாது.இது வரலாற்று உண்மை.நீங்கள் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தீர்களானால் இதன் உண்மையை புரிந்துக் கொள்ளலாம். கி.மு 605 – 536 ஆகிய நிறைந்த வருஷங்களில் பாபிலோனில் அரசாண்ட நேபுகாத்நேசர் என்னும் மன்னன் யூதா நாடாகிய எருசலேம் என்னும் நாட்டை பிடித்து அங்குள்ள மக்களை சிறைபிடித்து,கைதிகளாக பாபிலோனுக்கு கொண்டு சென்று அங்கு அவர்களை 70 வருஷம் அடிமைப் படுத்தி வைத்திருந்தது வரலாற்று உண்மை.அவன் சிறைப்பிடிக்க காரணம் யூதா மக்களின் பாவத்தினால் கடவுள் அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.ஆனாலும் இரக்கம் நிறைந்த கடவுள் அவர்களை 70 வருஷம் கழித்து அவர்கள் நாட்டுக்கு திரும்பும் படி கிருபை அளித்தார். அவருடைய பிள்ளைகளை ஏதோ கோபத்தில் கொஞ்ச வருஷம் கைவிட்டாலும் அவரின் பேரன்பினால் மறுபடியும் அவர்களை...

வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை.சாலமோனின் ஞானம் 1 : 13

கடவுள் இந்த உலகத்தில் ஆதாமையும்,ஏவாளையும்,தமது சாயலாக படைத்து அவர்களை நோக்கி இந்த பூமியில் உள்ள எல்லாவற்றையும் நீங்கள் ஆண்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லி அவர்களை ஆசீர்வதித்தார். ஆனாலும் நன்மை, தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை மாத்திரம் புசிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டார். அப்படி புசிக்கும் நாளில் சாகவே சாவீர்கள் என்று சொல்லியிருந்தார். ஆனால் அவர்களோ ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்படியாமல் அந்த பழத்தை சாப்பிட்டதனால் சாவை சந்தித்தனர். ஆனாலும் நாம் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதையே ஆண்டவர் விரும்புகிறார். ஆண்டவரின் ஆவி இந்த உலகை நிரப்பியுள்ளது. அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அந்த ஆவி ஒவ்வொரு சொல்லையும் அறிகின்றது. நேர்மையற்றதைப் பேசுவோர் மறைந்திருக்க முடியாது.தண்டனை வேளையில் நீதியின்று தப்ப முடியாது. ஆகையால் இயேசு இந்த உலகில் மானிட அவதாரம் எடுத்து நாம் யாவரும் வாழ்ந்திருக்கும்படி அவர் நம்முடைய பாவங்களையும்,அக்கிரமங்களையும் சிலுவையில் சுமந்து தமது உயிரை நமக்காக கொடுத்து நம்மை மீட்டுள்ளார். அவரை நம்புவோர் உண்மையை அறிந்து கொள்வர். அவரின் அன்பில் நம்பிக்கை கொள்வோர் என்றென்றும் அவரோடு நிலைத்திருப்பர். அருளும்,இரக்கமும்,அவர் தேர்ந்து கொண்டோர் மீது இருக்கும். இறைபற்றில்லாதவர்கள் தங்கள்...