Category: இன்றைய வசனம்

ஞானிகளை வெட்கப்படுத்த தேவன் மடமைகளை தெரிந்துக்கொண்டார்

சிலுவை பற்றியச்செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையாக தோன்றலாம். ஆனால் மீட்பு பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமையை காணச் செய்யும். ஏனெனில் ” ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன் . அறிஞர்களின் அறிவை வெறுமையாக்குவேன், என்று மறைநூலில் எழுதியுள்ளது. நாங்கள் ஞானிகள்;ஆண்டவரின் சட்டம் எங்களோடு உள்ளது’ என நீங்கள் எவ்வாறு கூறமுடியும்? மறை நூல் அறிஞரின் பொய் எழுதும் எழுதுகோல் பொய்யையே எழுதிற்று. ஞானிகள் வெட்கமடைவர்; திகிலுற்றுப் பிடிபடுவர்; ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் வாக்கைப் புறக்கணித்தார்கள்; இதுதான் அவர்களின் ஞானமா? என்று எரேமியா 8 : 8,9,ஆகிய வசனங்களில் வாசிக்கலாம். ஞானிகள் தன் ஞானத்தைக் குறித்துப் பெருமை பாராட்டவேண்டாம். வலியவர் தம் வலிமையைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம். செல்வர்கள் தம் செல்வத்தைக் குறித்தும் பெருமை பாராட்டவேண்டாம். பெருமை பாராட்ட விரும்புவோர் இயேசுகிறிஸ்துவை அறிந்து அவரே நம்முடைய ஆண்டவர் என்றும், அவரே நமக்காக நம்முடைய பாவத்துக்காக சிலுவை சுமந்து அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு தமது இரத்தத்தையும், தண்ணீரையும் கொடுத்து நம்மேல் உள்ள அளவிட முடியாத பேரன்பால் நீதியோடும், நேர்மையோடும் செயலாற்றி நம்முடைய வாழ்விற்காக அவர் தமது...

பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும். 1 யோவான் 4 : 18

கடவுள் நம்மீது அன்பு வைத்தது போல நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புக்கூற கடனாளிகளாயிருக்கிறோம். ஏனெனில் கடவுளை நாம் கண்டதில்லை. ஆனால் நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புக்கூர்ந்தால் கடவுள் நமக்குள் வந்து வாசம் செய்து நம்மில் நிலைத்தும் இருப்பார். அப்பொழுது அவருடைய அன்பு நமக்குள் கிரியை செய்து அது பூரணமாகும். அதை அறிந்துக்கொள்ளவே கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் அவரின் ஆவியை நமக்கு தந்திருக்கிறார். அந்த ஆவியின் மூலம் நாம் அவரில் நிலைத்திருப்பதை அறிந்துக்கொள்ள முடியும். கடவுள் நம்மேல் வைத்த அன்பை நாம் அறிந்து விசுவாசித்தால் அவர் அன்பாகவே இருக்கிறார், என்பதை உணர்ந்து நாம் அவரிலும், அவர் நம்மிலும் நிலைத்திருக்க முடியும். அவ்வாறு நிலைத்திருந்தோமானால் நியாயத்தீர்ப்பு நாளைக் கண்டு நாம் மனம் கலங்காமல் தைரியத்துடன் அவர் முன் நிற்கலாம். ஏனெனில், அன்பிலே பயமில்லை: பூரண அன்பு பயத்தைப் புறம்பேதள்ளும். பயமானது வேதனையுள்ளது. பயப்படுகிறவன் அன்பிலே பூரணப்பட்டவன் ஆகமுடியாது. கடவுள் முந்தி நம்மீது அன்புக்கூர்ந்து அந்த அன்பின் மகிமையையும்,வல்லமையையும், நமக்கு வெளிப்படுத்திக் காண்பித்துள்ளார். ஆகையால் நாம் கடவுளிடம் அன்புக்கூருகிறோம் என்று சொல்வோமானால்...

ஆண்டவர் நல்லவர், நன்மையே செய்பவர். தி.பா. 119:68.

வானத்தையும்,பூமியையும்,படைத்த ஆண்டவர் ஒவ்வொருநாளும் நம்மோடு கூடவே இருந்து நமது விருப்பங்கள் யாவற்றையும் தந்து நன்மை செய்பவராகவே இந்த உலகம் முழுவதையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார். அவருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது. அவர் தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்.அவருடைய கண்கள் மனுபுத்திரரை காண்கிறது. அவருடைய கண்ணின் இமைகள் நம்மை சோதித்து அறிகிறது. நாம் பாவம் செய்யாதபடிக்கு நம்முடைய மனசாட்சியாய் இருந்து செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார். நம் இதயத்தில் அன்பை விதைத்து அதை முளைக்கச் செய்து அதற்கு தினந்தோறும் தண்ணீர் பாய்ச்சி அதை செழிக்க வைக்கவே நினைக்கிறார். ஆனால் நாமோ அதை சரியாக பராமரிக்காமல் விட்டுவிடுகிறோம். ஒரு ஊரில் ஒரு கணவனும், மனைவியும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். ஒருநாள் அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு அப்படியே அவர்கள் உள்ளத்தில் பதிந்து அது மனதுக்குள் வேறுன்ற ஆரம்பித்தது அதை முளையிலேயே கிள்ளி எரிந்துவிடாமல் விட்டுவிட்டதால் அது மனக்கசப்பாய் மாறியது.அவர்களுக்குள் இருந்த அன்பு நாளடைவில் குறைய ஆரம்பித்தது. அதனால் அவர்கள் இருவரும் பிரிந்து வாழ விரும்பி பிரிந்துவிட்டனர். இவ்வாறு சில வருஷங்கள் போனது.அவர்கள் உடலால் பிரிந்தாலும் உள்ளத்தால் பிரியவில்லை. ஒருவரை...

அன்பு தணிந்து போகாமல் மன உறுதியுடன் இருந்து மீட்பு பெறுவோம். மத்தேயு 24:12.

ஆண்டவர் இந்த உலகத்தில் வாழ்ந்த நாட்களில் கடைசி காலத்தின் செயல் பாடுகளை நமக்கு அறிவிக்கும் பொழுது இவைகளை சொன்னார். ஆண்டவரின் வருகைக்கும் உலக முடிவுக்கும் அறிகுறி என்ன? என்று கேட்ட தமது சீடர்களிடம் இயேசு கூறியது,நெறிதவறி செய்யாதபடிக்கு பார்த்துக்கொள்ள வேண்டும். நானே மெசியா என்று சொல்லிப் பலரை நெறிதவறச் செய்வர். போர் முழக்கங்களையும், போர்களைப்பற்றிய செய்திகளையும் கேட்கப் போகிறீர்கள். ஆனால் திடுக்கிடாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். இவை நடக்கும்,முடிவாகா, நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பல இடங்களில் பஞ்சமும், நில நடுக்கங்களும் ஏற்படும். இவை அனைத்தும் பேறுகால வேதனைகளின் தொடக்கமே உங்களை துன்புறுத்தி கொல்வதற்கென ஒப்புவிப்பார். இயேசுவின் பெயரை பொருட்டு எல்லா மக்கள் இனத்தவரும் உங்களை வெறுப்பார். அப்பொழுது பலரின் நம்பிக்கை இழந்து விடும். ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுப்பர். ஒருவரை ஒருவர் வெறுப்பர். பல போலி இறைவாக்கினர் தோன்றி பலரை நெறிதவறி அலையச் செய்வர். நெறிகேடு பெருகுவதால் பலருடைய அன்பு தணிந்து போகும். ஆனால் இறுதிவரை மன உறுதியோடு இருப்பவரே மீட்பு பெறுவார் என்று மத்தேயு 24:4 to...

இந்நாள் நல்ல செய்தியின் நாள். 2 அரசர்கள் 7:9

ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு அவரின் வார்த்தைக்கு பயந்து கீழ்படிந்து நடக்கும் ஒவ்வொருவருக்கும் இந்நாளின் செய்தி நல்ல செய்தியாக இருக்கும் என்பதில் ஏதாவது ஐயம் உண்டோ! ஒருநாள் சமாரிய நகர வாயிலில் எலிசா ஆண்டவரின் வாக்கை கூறி ஆண்டவர் கூருவது இதுவே: ” ஒரு மரக்கால் கோதுமைமாவு ஒரு வெள்ளிக் காசுக்கும்,இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு வெள்ளிக்காசுக்கும்,விற்கப்படும் என்று கூறினார். அப்பொழுது அரசனின் உதவியாளன் அவரிடம், இதோ பாரும்! எலிசாவே ஆண்டவர் வானத்தின் கதவுகளைத் திறந்து விட்டாலும் இத்தகைய காரியம் நடக்குமா? என்று கேட்கிறான்.அதற்கு எலிசா இதை உன் கண்களால் காண்பாய். ஆனால் அதில் நீ எதையும் உண்ணமாட்டாய்,என்று சொன்னார். 2 அரசர்கள் 7:1,2 ஆகிய வசனத்தில் வாசிக்கலாம். ஆம்,ஆண்டவரின் வார்த்தை ஒருபோதும் மாறாது. அது சொன்னால் சொன்னதே!அது வெறுமையாய் திரும்பி வரவே வராது. எலிசா சொன்னதுபோல ஒருமரக்கால் கோதுமைமாவு ஒரு வெள்ளிக்காசுக்கும்,இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு வெள்ளிக்காசுக்கும், விற்கப்பட்டது. அந்த அரசனின் அதிகாரி தன் கண்களால் காண நேரிட்டது. ஆனால் எலிசா சொன்னது போல...