ஏழைகளின் விண்ணப்பத்திற்கு ஆண்டவர் செவிசாய்க்கின்றார்
திருப்பாடல் 69: 32 – 34, 35 – 36 திருப்பாடல் வார்த்தைகளை எண்ணி ஆராய்ந்து பார்க்கிறபோது, துன்பப்படுகிற மனிதனின் வேதனையும், இழப்பும், கடவுளை விட்டால் தனக்கு வேறு ஆதரவு யாரும் இல்லை என்பதையும் இங்கே நாம் புரிந்து கொள்ளலாம். இங்கே தன்னை ஏழையாக ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். விவிலியத்தைப் பொறுத்தவரையில் ஏழைகள் என்று சொல்லப்படுகிறவர்கள், பொருளாதாரத்தின் அடிப்படையில் பின்தங்கியவர்களை அல்ல. மாறாக, கடவுள் மீது தங்களுடைய முழுமையான நம்பிக்கை வைக்கிறவர்களை விவிலியம் ஏழை என்று சுட்டிக்காட்டுகிறது. அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் எண்ணிக்கையில் பலராக மத்திய கிழக்குப் பகுதியில் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டது. அவர்களின் நியாயத்தை கேட்பார் யாருமில்லை. அடிமைத்தனம் என்பது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தது. அவர்களுக்கு பரிந்து பேசுகிறவர்கள் எவருமே இல்லை. இப்படிப்பட்ட நிலையில் இறைவன், தன்னை இவர்களுக்கானவராக அடையாளப்படுத்துகிறார், வெளிப்படுத்துகிறார். இது அடிமைநிலையில் இருந்த மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அந்த ஆன்மீகத்தை அறிந்த கொண்ட மனிதரின் உள்ளக்கேவலாக...