Category: இன்றைய சிந்தனை

பரிபூரண ஆசீர்வாதம்

அன்பார்ந்த இறை மக்களே! உங்கள் ஒவ்வொருவருக்கும் நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். நாம் ஒவ்வொருவரும் மிகவும் விரும்பும் காரியம் ஆசீர்வாதம். அதிலும் பரிபூரண ஆசீர்வாதம் கிடைத்தால் கூடுதல் சந்தோஷமே ஆனால் அந்த பரிபூரண ஆசீர்வாதத்தை எப்படி பெற்றுக்கொள்வது என்று யோசிப்போம். நீதிமொழிகள் 28:20 ல் இதைக்குறித்து வாசிக்கிறோம். நேர்மையாக அதாவது உண்மையாக நடப்பவர்களுக்குதான் கிடைக்கும் நீங்கள் நினைக்கலாம், உலகத்தில் எவ்வளவோ பேர்கள் அநியாயம் செய்து எல்லா ஆசீர்வாதங்களுடன் வாழவில்லையா? நீங்கள் கேட்பது சரியே. ஆனால் அவர்களின் வாழ்க்கையை உற்று பார்த்தீர் களானால் அவர்கள் எப்படி சீக்கிரமாய் பெற்றுக்கொண்டார்களோ அப்படியே சீக்கிரம் காணாமல் போய்விடும். நீதிமொழிகள் 20:21. இஸ்ரயேல் மக்களுக்கு கடவுள் சவுல் என்ற அரசரை நியமித்தார். காணாமல் போன கழுதையை தேடிச்சென்ற அவரை சாமுவேல் என்ற இறைவாக்கினர் ஆண்டவரின் திருவுளசித்தப்படி சவுலை திருநிலைப்படுத்தி இஸ்ரயேல் மக்களுக்கு அரசராக நியமித்தார். சவுல் அரசராக பொறுப்பெடுத்து அந்நாட்டை ஆட்சி செய்த பொழுது நிறைய தடவைகளில் ஆண்டவரின் வார்த்தை மீறி செயல்படுவதாக 1 சாமுவேல் புத்தகத்தில் வாசிக்கிறோம். அதனால்...

நற்கருணை ஆண்டவர் நம் இயேசு.

அன்பானவர்களே! நம்முடைய நற்கருணையின் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். நம்முடைய ஆண்டவர் பாலகனாய் இந்த உலகத்தில் தோன்றி நம் எல்லோருக்காகவும், ஏன் இந்த உலகத்தில்  பிறக்கும் ஒவ்வொரு மனுஷனுக்காகவும்,அவருடைய தோளில் சிலுவையை சுமந்து நம் ஒவ்வொருவருடைய பாவத்துக்காகவும் சிலுவையில் அடிக்கப்பட்டு கடைசி சொட்டு இரத்தம் வரைக்கும் நமக்காக சிந்தி அவரின் உயிரை கொடுத்து நம்மை மீட்டுள்ளார் என்பது யாவரும் அறிந்ததே.எசாயா 53ம் அதிகாரத்தை முழுதும் வாசித்து பார்த்தால் நன்கு புரியும். பிரியமானவர்களே! இப்படிப்பட்ட ஆண்டவரை நாம் தெய்வமாக கொண்டுள்ளது எத்தனை விசேஷித்தவர்கள் நாம்.அவருடைய உடலை அப்பமாகவும்,அதாவது நற்கருணையாகவும்,அவர் இரத்தத்தை திராட்சரசமாகவும் பருகும் நாம் அவரின் எண்ணங்களின்படி வாழ்கிறோமா? என்று யோசித்து பார்ப்போம். இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஒரே இரத்தத்தால் கழுவப்பட்ட நமக்குள் எத்தனை பிரிவினைகள், எத்தனை ஜாதிகள்?. அவர் உடல் என்ன ஜாதியோ, நாம் எல்லாரும் அந்த ஜாதியே! அவரின் இரத்தம் என்ன மதமோ, நாம் எல்லோரும் அந்த மதமே. கிறிஸ்துவர்கள் என்று பெயர்...

நம் பொக்கிஷம் எது ?

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! உங்கள் யாவருக்கும் நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த உலகத்தில் வாழும் அனைவருக்கும் விலையுயர்ந்த பொக்கிஷம் என்றால் அது நம்முடைய வேதமே! ஏனெனில் வேதத்தின் மூலம் நாம் நல்லது எது? கெட்டது எது? வாழ்வா,சாவா? அனுதின வாழ்க்கையின் போராட்டத்தில் இருந்து எப்படி நம்மை பாதுகாத்துக்கொள்ளவேண்டும், ஆசீர்வாதமா? சாபமா? எல்லாவற்றுக்கும் பதில் அதில் இருக்கிறது. அனுதினமும் வேதத்தை வாசித்து தியானித்து அதன்படி நடந்தோமானால் நம்மை யாராலும் எதுவும் செய்ய முடியாது. பயத்திலிருந்து விடுதலை, ஆபத்திலிருந்து பாதுக்காப்பு, நோயிலிருந்து சுகம், கடன் பிரச்சனையிலிருந்து சுதந்திரம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் நமக்கு கிடைக்க வேண்டுமானால் அதற்கு நாம் செய்ய வேண்டிய வேலை தினமும் காலையில் எழுந்து வேதத்தை வாசித்து ஆண்டவரை நோக்கி ஜெபித்துவிட்டு அந்த நாளுக்குரிய எல்லா காரியத்தையும் அவர் பாதபடியில் வைத்துவிட்டு அவர் சித்தப்படி நடந்துக்கொண்டால் இந்த உலகத்திலே நாம்தான் சிறந்தவர்கள். எல்லாம் நமக்கு கூட்டியே  கிடைக்கும். மத்தேயு 6 :33. ஆனால் நாமோ அப்படிப்பட்ட விலையுயர்ந்த பொக்கிஷத்தை ஏதோ ஒரு மூலையில்...

பழிவாங்கும் எண்ணம் நமக்கு வேண்டாமே!

அன்பும்,பாசமும்,நிறைந்த சகோதர,சகோதரிகளே!உங்கள் ஒவ்வொருவருக்கும் நம் கிறிஸ்துஇயேசுவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். போட்டியும், பொறாமையும் நிறைந்த இந்த உலகத்தில் ஒவ்வொருவரும் நம் தேவைகளை சந்திக்க அநேக காரியங்களில் ஈடுபடுகிறோம். பணம் இல்லாமல் இந்த உலகத்தில் வாழ முடியாது என்பது உண்மைதான்.  ஆனால் பணமே வாழ்க்கை ஆகிவிடாது. பணத்தை வைத்து எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்று சொல்வார்கள்.நம் இதயத்தில் தோன்றும் சந்தோஷத்தை, மகிழ்ச்சியை எந்த பணத்தாலும் வாங்க முடியாது. அதை கடவுளால் மட்டுமே கொடுக்கமுடியும். நாம் நல்ல நண்பர்களாய் அல்லது நல்ல உறவினர்களாய் இருப்போம். ஆனால் பணம் என்கிற பிசாசு நம் உள்ளத்தில் வந்துவிட்டால் நண்பர்களும், உறவினர்களும் நமக்கு எதிரியாக மாறிவிடுவார்கள். அங்கே போட்டியும், பொறாமையும் தலைவிரித்து ஆடும். அப்பொழுது நம்மை அறியாமல் அவர்களை எப்படியாவது வீழ்த்த வேண்டும், பழிவாங்கவேண்டும் என்ற எண்ணத்தை பிசாசு நம் உள்ளத்தில் விதைப்பான்.  கடவுளுடைய பிள்ளைகளாகிய நாம் பிசாசுக்கு அடிமையாகிவிடுவோம். நம் சந்தோஷம் சமானாதம் எல்லாவற்றையும் இழந்து தவிப்போம். நம்முடைய அனைத்து காரியங்களையும் நம் ஆண்டவர் அறிந்திருக்கிறார்....

வாழ்க பாரதம், வளர்க இந்தியா

இன்று 66 வது குடியரசு  தின விழா கொண்டாடும் இந்தியர் ஒவ்வொருவருக்கும் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்தியாவைப்பற்றி நாம் வேதத்தில் எஸ்தர் 1: 1 மற்றும் எஸ்தர்8:9 ல்  இந்தியா தேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்கும் ஆட்சி செய்த மன்னர் அகாஸ்வேரு காலத்திலேயே நமது இந்தியாவைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா என்பது ஒரு நாடு, அது ஒரு தேசம். இங்கு வாழும் மக்களுக்கு அதனால்தான் இந்தியர்கள் என்ற பெயர் வந்தது. அதுவே காலப்போக்கில் சுருங்கி இந்து என்று ஆகியது. இந்து என்றாலும் இந்தியா என்றாலும் அது தேசமே! ஒரு நாடே! தவிர அது ஒரு மதம் இல்லை. வேண்டுமானால் வரலாற்றை ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்கே உண்மை புரியும். உண்மை ஒருநாளும் தோற்காது. வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும், நீரூற்றுகளையும், ஆறுகளையும் உண்டாக்கிய தேவனாகிய கடவுள் ஆதாம் என்ற மனிதனை மண்ணின் மூலம் உருவாக்கி அவர் மூலமாகவே இந்த மனுக்குலம் முழுவதையும் படைத்தார். பிறகு நோவா காலத்தில் வெள்ளம் ஏற்பட்டு உலகத்தை அழிக்க நினைத்த இறைவன் அவர் நல்லவராக இருந்ததால்...