Category: இன்றைய சிந்தனை

எதிர்பார்ப்பின் உலகம்

எதிர்பார்ப்பு என்பது இந்த உலகத்தின் மதிப்பீடு. நாம் ஒருவருடைய உதவியைப் பெறுகிறோம் என்றால், நிச்சயம் அவர் நம்மிடமிருந்து ஏதோ ஒன்றை எதிர்பார்ப்பார். சாதாரண அரசு அலுவலகங்கள் இதற்கு சிறந்த உதாரணம். அரசு என்பது மக்களுக்கு சேவை செய்வதற்காக, ஏற்படுத்தப்பட்டது. அரசு ஊழியர்கள் மக்களின் தேவைகளை சரிசெய்வதற்காக, மக்களிடமிருந்து பெறப்படும் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக்கொள்கிறவர்கள். ஆனால் நடப்பது என்ன? சாதாரணமான வேலைக்கும், நாகூசாமல் பெரும்பாலான அரசு ஊழியர்கள், எதையாவது கேட்டே பெற்றுக்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். ஆக, எதிர்பார்ப்பு என்பது, சாதாரண வாழ்க்கை நடைமுறையாகி விட்டது. இப்படிப்பட்ட காலப்பிண்ணனியில் வாழும் நமக்கு இயேசுவின் போதனை சற்று எச்சரிக்கையாக அமைகிறது. எதையும் எதிர்பார்ப்பு இல்லாமல் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். ஒன்றை நாம் செய்கிறபோது, அது நமக்கு திரும்பச் செய்ய முடியாத மனிதர்களுக்குச் செய்வதுதான், எதனையும் எதிர்பார்ப்பு இல்லாமல் செய்வதற்கு சமமானதாக இருக்கிறது. வறியவர்கள், ஏழைகள், சாதாரண நிலையில் இருக்கிறவர்களுக்கு நாம் எதைக்கொடுத்தாலும், அவர்களால் நமக்கு திரும்ப...

நம்பிக்கைக்குரியவர்

நம்பிக்கைக்குரியவர் யார்? என்ற கேள்விக்கு பதிலாக வருவதுதான் இன்றைய நற்செய்தி. நமது வாழ்வில் நாம் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க வேண்டும். யாருக்கு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க வேண்டும்? ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கிறோம் என்றால், அந்த அலுவலகத்தலைவரின் நம்பிக்கைக்கு எல்லாருமே உரியவர்களாக இருக்க மாட்டார்கள். ஒரு சிலர் மட்டும் தான். எது அவர்களை நம்பிக்கைக்கு உரியவர்களாக மாற்றுகிறது? அவர்கள் தலைவர் மீது வைத்திருக்கக்கூடிய மதிப்பு, அவர்களின் கீழ்ப்படிதல், உண்மை, தலைவர் சொல்லக்கூடிய பணியைச் சிறப்பாகச் செய்வது – இவைதான் ஒரு மனிதரை நம்பிக்கைக்கு உரியவராக வைத்திருக்கிறது. அந்த நம்பிக்கை ஏதோ ஒரு நாளில் பெற்றுவிடுவதல்ல. சின்ன காரியங்களில் உண்மையாக இருக்கிறபோது, அந்த மனிதர் மட்டில், நமது நம்பிக்கையும் பெறுகிறது. ஆக, சிறிய காரியத்தில் நாம் உண்மையாக, நேர்மையாக இருக்கிறபோது, மற்றவர்களின் நம்பிக்கைக்கு உகந்தவர்களாக மாறுகிறோம். இன்றைய நற்செய்தியில் (மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 14-30) தலைவர் தனது பணியாளர்களிடம் தாலந்து...

வாழ்வின் முக்கிய தருணங்கள்

ஒரு சில தருணங்கள் வாழ்வில் முக்கியமானவை, திருப்பங்களை ஏற்படுத்தக்கூடியவை. அந்த தருணங்களை இழந்துவிட்டால், அது மீண்டும் கிடைக்காது. நமது வாழ்வில் நாம் உயர்வடைய கொடுக்கப்பட்ட வாய்ப்பாகக் கூட அது இருந்திருக்கலாம். அந்த வாய்ப்பை இழந்ததால், நமது வாழ்க்கை துன்பங்களோடு முடிந்துவிட்ட ஒன்றாகக்கூட மாறலாம். எனவே, வாழ்வைப் பற்றிய அக்கறை, உயர வேண்டும் என்கிற எண்ணம், எப்போதும் நமது சிந்தனைகளை கூர்மையாக வைத்திருக்கக்கூடிய உணர்வு நமக்கு இருப்பதற்கு இன்றைய வாசகம் அழைப்புவிடுக்கிறது. மனிதர்களில் இரண்டுவிதமானவர்கள் இருப்பதை இந்த உவமை எடுத்துக்காட்டுகிறது. கிடைக்கிற சிறிய வாய்ப்பையும் பயன்படுத்தி, வாழ்வில் முன்னேறிக்கொண்டிருக்கிறவர்கள். பெரிதாக வாய்ப்பு கிடைத்தாலும் வீணடிக்கிறவர்கள். இரண்டுவிதமான மணமகளின் தோழியர் இதற்கு நல்ல எடுத்துக்காட்டாய் இருக்கிறார்கள். மணமகன் வருகிறபோது, அவர்கள் தயாராக இருக்க வேண்டும், எண்ணெய் குறைவில்லாமல் இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும், விழிப்பாக இருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாதது அல்ல. நிச்சயம் தெரியும். நிச்சயம் மணமகன் வந்தே தீருவார். ஆனால், விரைவில்...

வாழ்வின் மகத்துவம்

மண்ணகத்தில் நாம் வாழக்கூடிய வாழ்வு சாதாரணமானது அல்ல. அது ஒரு கடமை. மிகப்பெரிய பொறுப்பு. பெற்றுக்கொண்ட வாழ்விற்கான பயனை நாம் கொடுத்தே ஆக வேண்டும். அப்படி இல்லையென்றால், அதற்கான பலனையும் நாம் அனுபவித்தே ஆக வேண்டும். அதற்கு நமது வாழ்வை ஒவ்வொரு நிமிடமும் விழிப்போடு வாழ வேண்டும். நமது கடமையில் நாம் தவறுகிறபோது, மற்றவர்களால் நாம் புறக்கணிக்கப்படுகிறோம். மற்றவர்கள் நம்மை அருவருப்பாகப் பார்க்கிறார்கள். நம்மைப்பார்த்து சிரிக்கிறார்கள். நம்மை ஏளனத்தோடும் இகழ்ச்சியோடும் நோக்குகிறார்கள். அதே கடமையை நாம் முழு ஈடுபாட்டுடன் செய்கிறபோது, நாம் பாராட்டப்படுகிறோம். அதற்கான முழு வெகுமதியையும் பெற்றுக்கொள்கிறோம். வெகுமதிக்காக இல்லையென்றாலும், நமது கடமையின் பொருட்டாவது நாம் நமது பணியை முழுமையோடு செய்ய வேண்டும். வாழ்வை ஏனோ தானோவென்று வாழ்கிறவர்கள் நம்மில் அதிகமாகிவிட்டார்கள். வாழ்வின் உண்மையான பயனை அவர்கள் பொருட்படுத்துவதும் கிடையாது. வாழ்வை அர்த்தமுள்ளதாக வாழ நாம் முயற்சி எடுப்போம், எல்லாச்சூழ்நிலைகளிலும் வாழ்வை மகத்துவத்தை, மகிமையை உணர்ந்து வாழ்வோம். ~ அருட்பணி....

கள்ளங்கபடற்ற வாழ்வு

இன்றைக்கு தாய்த்திருச்சபை திருத்தூதர்களுள் ஒருவரான பர்த்திலேமேயுவின் திருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகிறது. இவருடைய இயற்பெயர் நத்தனியேலாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இவர் பர்த்திலேமேயு என்று அழைக்கப்படுவதற்கு, இவர் தால்மேயுவின் மகன் என்பதான அர்த்தம் காரணமாகும். தால்மேயு என்பவன் கி.மு.10ம் நூற்றாண்டின் ஜெஸ்ஸே என்கிற பகுதிக்கு அரசனாவான். அவரது மகளை பேரரசர் மணந்திருந்தார். எனவே, பர்த்திலேமேயு அரசர் வழிவந்த குடும்பம் என்பதற்கு, நற்செய்தியாளர்கள் இந்த பெயரைப் பயன்படுத்தியிருக்கலாம் என்பது, விவிலிய அறிஞர்களின் கருத்து. இவர் இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்பதும், நமக்கு கொடுக்கப்படுகிற ஊகச்செய்தி. இவரை இயேசு கள்ளம், கபடற்றவர் என்று சொல்வதிலிருந்து, இவரை இயேசு எந்த அளவுக்கு அறிந்து வைத்திருந்தார் என்பது தெளிவாகத் தெரிந்திருந்தது. இது பர்த்திமேலேயு-க்கு மிகப்பெரிய ஆச்சரியம். அதேவேளையில் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கும். காரணம், தான் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை, இந்த உலகம் ஒரு பொருட்டாக எடுக்கவில்லை என்றாலும், இயேசு அவரை அங்கீகரித்திருக்கிறார் என்பது, நிச்சயம் அவருக்கு மிகப்பெரிய தூண்டுகோலாக இருந்திருக்கும்....