உண்மையான மகிழ்ச்சி
பாரம்பரிய யூதர்கள் நோன்பு இருக்கிறபோது, தாங்கள் நோன்பு இருப்பது மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக, முகத்தில் வெள்ளை பூசிக்கொள்வார்கள். நோன்பு ஒன்றும் அவ்வளவ கடினமான ஒன்று அல்ல தான். காலையில் சூரியன் தோன்றுவதற்கு முன்பிலிருந்து, சூரியன் மறையும் வரை நோன்பு இருப்பது அவ்வளவு கடினமான ஒன்றல்ல. ஆனாலும், நோன்பு மூலமாக தங்கள் உடலையே கடவுளுக்கு காணிக்கை அளிப்பதாக, அவர்கள் நம்பினர். நோன்பு இருப்பதையோ, அவற்றில் குற்றம் கண்டுபிடிப்பதிலோ இயேசு குறை காணவில்லை, குறைகாணவும் விரும்பவில்லை. ஆனால், அவர் வலியுறுத்திச்சொல்வது, கிறிஸ்தவ வாழ்வு மகிழ்ச்சியான வாழ்வு என்பதைத்தான். கிறிஸ்தவ வாழ்வு என்பது நமக்கு துன்பங்களைக்கொடுக்கிற வாழ்வு அல்ல, நம்மை எப்போதும் கஷ்டத்தில் வைத்து பார்க்க வேண்டும் என்ற வாழ்வு. மாறாக, நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்ற வாழ்வுதான். ஆனால், அது உண்மையான, ஆழமான மகிழ்ச்சி. போலித்தனமான மகிழ்ச்சி அல்ல. பரிசேயர்களின் மகிழ்ச்சி சட்டங்களை பிற்போக்காக கடைப்பிடிக்கிற போலித்தனமான...