Category: இன்றைய சிந்தனை

திருவிருந்தில் பிளவுகள் !

திருவிருந்தின்போது எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்னும் பவுலடியாரின் அறிவுரை அன்றைய கொரிந்து நகரக் கிறித்தவர்களுக்கு எவ்வளவு பொருந்தியதோ, அதே அளவு இன்றைக்கும் பொருத்தமானதாக, பொருளுள்ளதாக இருக்கிறது என்பது ஒரு வேதனையான உண்மை. அன்றைய நாள்களில் ஒற்றுமையின் விருந்தான திருவிருந்தில் பிளவுபட்ட மனதினராய், தகுதியற்ற உள்ளத்தினராய் கலந்துகொண்டனர். இன்றும்கூட சாதி உணர்வு, பகை உணர்வு, ஏற்றத்தாழ்வுகள் அத்தனை இருந்தும், எந்தவித உறுத்தல் உணர்வும் இன்றி ஆயிரக்கணக்கான கிறித்தவர்கள் திருவிருந்தில் பங்குபெற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். கடவுளின் திருச்சபையை இழிவுபடுத்தி, இல்லாதோரை இழிவுபடுத்தும் செயலில் இன்றும் நாம் ஈடுபட்டுவருகிறோம். இதை நாம் உணர்கிறோமா? பவுலின் கடினமான சாட்டையடிச் சொற்கள் நம்மைச் சுடட்டும். நற்கருணை அருள்சாதனத்தில் நமக்கு உண்மையான நம்பிக்கை இருந்தால், நமது தகுதியின்மையை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கோர வேண்டும். திருவிருந்தின் முரண்பாடுகளைக் களைய வேண்டும். மன்றாடுவோம்: வானக உணவாக உம்மையே எங்களுக்குத் தந்த இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது ஒற்றுமையின் விருந்தில் பிளவுபட்ட உள்ளத்தினராய், சாதி, சமத்துவமற்ற உணர்வுகளோடு...

காணாமல் போன நாம் !

இறைவனைவிட்டுப் பிரிந்து காணாமல் போய்விடுகின்ற இஸ்ரயேல் மக்களையும், அவர்களின் வழிமரபினரான நம்மையும் இறைவன் மீண்டும், மீண்டும் தேடிவருகிறார் என்பதை இன்றைய ஞாயிறு வழிபாட்டின் வாசகங்கள் நினைவுபடுத்துகின்றன. இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள்மீது இறைவன் கோபம் கொண்டு, அவர்களை அழிக்கத் திட்டமிடுவதையும், மோசே அவர்களுக்காகப் பரிந்துபேசும்போது, இறைவன் தம் மனத்தை மாற்றிக்கொண்டு தம் மக்களுக்கு செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார் என்று வாசிக்கிறோம். இறைமக்களின் மனநிலை, இறைவனின் மனநிலை இரண்டையும் அருமையாகச் சித்தரிக்கும் வாசகம் இது. இறைமக்களின் உள்ளம் கடினமானது. நன்றி மறந்தது. இறைவன் செய்த வியத்தகு செயல்கள் அனைத்தையும் மறந்து, வேற்று தெய்வங்கள்பால் செல்வது. எனவேதான், இறைவன் கூறுகிறார்: இம்மக்களை எனக்குத் தெரியும். வணங்காக் கழுத்துள்ள மக்கள் அவர்கள்?. இன்றைய நாள்களிலும் நாமும் வணங்காக் கழுத்துள்ளவர்களாக, இறைவனை மறந்து, உலக இன்பங்கள், உலகப் பொருள்கள், களியாட்டங்களில் ஆர்வம் கொண்டு, இறைவனை மறந்து, பிறதெய்வங்களை நாடிச் செல்லும் இனமாக இருக்கிறோம்....

உள்ளத்தின் நிறைவு !

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது தமிழ்ப் பொன்மொழி. அகத்தின் அழகு நம் வாய் பேசும் சொற்களில் இருக்கிறது என்கிறது விவிலியம். நல்ல மரம் நல்ல கனி கொடுக்கும். கெட்ட மரம் கெட்ட கனி கொடுக்கும். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும் என்கிறார் ஆண்டவர். நமது வாயிலிருந்து வரும் சொற்கள்தான் நமது உள்ளத்தின் நிறைவை, அல்லது குறைவைச் சுட்டிக்காட்டுகின்றன. நமது சொற்கள் குறைவுள்ளவையாக, கண்ணியம் குறைந்தவையாக, இழிவானவையாக, புண்படுத்துவனவாக இருக்கின்றனவா? அப்படியென்றால், அது நம் உள்ளத்தின் குறைவைத்தான் காட்டுகிறது. எனவே, நமது சொற்களின்மீது ஒரு கண் வைப்போமா? நல்ல சொற்களைப் பேசி நமது உள்ளத்தின் நிறைவை வெளிப்படுத்துவோம். நமது உள்ளத்தையும் நல்ல எண்ணங்களால் நிரப்பி, நிறைவு செய்வோம். மன்றாடுவோம்: உள்ளத்தின் ஆழத்தைக் காண்கிறவரான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். நல்ல மரம் நல்ல கனி கொடுக்கும் என்று மொழிந்தீரே. எங்கள் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும். அந்த உள்ளத்திலிருந்து நாங்கள் பிறரைப் பாராட்டுகின்ற, ஊக்குவிக்கின்ற, வளர்த்துவிடுகின்ற...

பகிர்வு வாழ்வு வாழுவோம்

”கற்றது கையளவு, கல்லாதது உலகளவு” – இதனுடைய அர்த்தத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த உலகத்தில் நாம் கற்றது சிறிதளவு தான். நமக்குத் தெரியாதவை இந்த உலகத்தில் எவ்வளவோ இருக்கிறது. இந்த உண்மையை நாம் உணர்கிறபோதுதான், நமது உண்மைநிலையை அறிந்து கொள்ள முடியும். “எனக்குத் தெரியாதது இந்த உலகத்திலே எதுவும் இல்லை“ என்ற எண்ணம் நமக்கு இருக்குமேயென்றால், அது நமது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும். அது நமது வாழ்வு என்னும் பயணத்தில் தடைக்கற்களாக அமைந்துவிடும். அத்தகைய தடைக்கற்களை இன்று சிந்திப்போம். 1. முதலாவது, நமது வளர்ச்சியை இந்த எண்ணம் தடுத்துவிடும். “எனக்கு எல்லாம் தெரியும்“ என்ற எண்ணம் நமக்குள்ளாக இருப்பது எந்தவிதத்திலும் நம்மை வளரவிடாது. கிணற்றுத்தவளையாகவே நமது வாழ்வு அமைந்துவிடும். நமது அறிவுவளர்ச்சி குறிப்பிட்ட எல்லையைத்தாண்டாது. 2. அடுத்தவருடனான நமது உறவு சீர்குலைந்துவிடும். நமக்கு தெரிந்ததை மற்றவரோடு பகிர்ந்துகொள்வதும், தெரியாததை மற்றவரிடமிருந்து கற்றுக்கொள்வதும் உறவு வளர காரணியாக இருக்கும். அடுத்தவர்...

தூய கன்னி மரியாவின் பிறப்பு (ஆரோக்கிய அன்னை) விழா

அன்னை மரியாளின் பிறப்பு விழா – தாயின் அன்பு   மரியாளின் பிறப்பு விழாவானது முதன்முதலாக கீழை திருச்சபையில் கொண்டாடப்பட்ட ஒரு விழாவாகும். இதன் தொடக்கம் எருசலேமில் உள்ள புனித அன்னாள் ஆலயத்தின் நோ்ந்தளிப்பிலிருந்து வந்ததாகும். ஐந்தாம் நூற்றாண்டில் கட்டியெழுப்பப்பட்ட இவ்வாலயமானது மரியாள் பிறந்த வீட்டின் மீது கட்டியெழுப்பப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க கவிஞரும் கான்ஸ்டான்டிநோபிள் நகர திருத்தொண்டருமான ரோமானுஸ் (500) தனது பாடலில் மரியாளின் பிறப்பைப் புகழ்ந்து பாடியிருப்பது அவர் காலத்தில் இத்திருவிழா பெற்றிருந்த முக்கியத்துவத்தையும், இதன் பெருமையையும் சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. உரோமையில் இத்திருவிழாவானது 7 ம் நூற்றாண்டில் கொண்டாடப்பட்டது. மரியாளின் விண்ணேற்பு பெருவிழாவைப் போன்று இப்பிறப்பு விழாவும் திருத்தந்தை முதலாம் செர்ஜியுஸ் என்பவரால், திருச்சபைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பிறப்பு திருவிழா திருப்பலியானது, மரியாளின் இறைத்தாய்மை பண்பையும், அவளின் தெய்வ மகன் கிறிஸ்துவை பற்றியதுமாக அமைந்துள்ளது. இந்தியாவில் வேளாங்கண்ணி மாதாவின் திருவிழாவானது செப்டம்பர் 8 ம் நாள்,...