நல்ல ஆயன் இயேசு
பழைய ஏற்பாட்டில் கடவுள் ஓர் ஆயனாக சித்தரிக்கப்படுகிறார். திருப்பாடல் 23: 1 சொல்கிறது: “ஆண்டவரே என் ஆயர்: எனக்கேதும் குறையில்லை”. திருப்பாடல் 77: 20 “மோசே, ஆரோன் ஆகியோரைக்கொண்டு உம் மக்களை மந்தையென அழைத்துச்செல்கின்றீர்” ஆண்டவரால் அபிஷேகம் செய்யப்பட்ட மெசியாவும் ஆயனாக உருவகப்படுத்தப்படுகிறார். இறைவாக்கினர் எசாயா 40: 11 ல் பார்க்கிறோம்: “ஆயனைப்போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார். ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார். அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார். சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்”. பழைய ஏற்பாட்டில் நாம் பார்க்கின்ற இந்த உவமை புதிய ஏற்பாட்டிலும் தொடர்வதை இன்றை நற்செய்தி எடுத்தியம்புகிறது. பாலஸ்தீனத்தில் வாழ்ந்த இடையர்களின் வாழ்வு மற்ற நாடுகளில் வாழ்ந்த இடையர்களை விட சற்று வித்தியாசமானதாக இருந்தது. அவர்கள் தங்களோடு தோல்ப்பையை கொண்டு சென்றனர். அதில் உணவுக்காக காய்ந்த ரொட்டிகளும் உலர்ந்த பழங்களும் வைத்திருந்தார்கள். பாதுகாப்புக்காக கவண் ஒன்றையும் வைத்திருந்தார்கள். எதிரி விலங்குகளிடமிருந்து மந்தையைக் காப்பாற்றவும்,...