Category: இன்றைய சிந்தனை

இயேசுவின் மதிப்பீடுகள்

இயேசு தனது பணிவாழ்வில், சீடர்களை பயிற்றுவிப்பதில் சிறந்த ஆசானாக செயல்படுகிறார் என்பதை, இன்றைய நற்செய்தி நமக்கு சொல்கிறது. எப்படி? இயேசு தனது பயிற்சியை பல தளங்களாக செயல்படுத்துகிறார். அந்த வகையில், முதலில் தன்னுடைய சீடர்களுக்கு விசுவாசத்தின் அவசியத்தை விளக்குகிறார். அவர்களது விசுவாசத்தை அதிகப்படுத்த முயற்சி எடுக்கிறார். புதுமைகள் செய்கிறபோதும், மக்களிடம் போதிக்கிறபோதும், சீடர்கள் தன்னுடன் இருந்து, விசுவாசத்தை அதிகப்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கிறார். சீடர்கள் கற்றுக்கொள்ள கடினப்பட்டபோதிலும், இன்றைய நற்செய்தியில் அவர்கள் விசுவாசத்தைக் கற்றுக்கொண்டது தெளிவாகிறது. முதல் இலக்கில், தளத்தில் இயேசு வெற்றிபெறுகிறார். ஆனால், இது அடைய வேண்டிய இறுதி இலக்கு அல்ல. இன்னும் முன்னேற இலக்கு இருக்கிறது. அதை நோக்கி முன்னேற இயேசு முனைகிறார். சீடர்கள் விசுவாசத்தைக் கற்றுக்கொண்டவுடன், இயேசு அடுத்த தளத்திற்கு அவர்களை அழைத்துச் செல்கிறார். விசுவாசத்தோடு இருக்க வேண்டியவர்கள், எதிர்கொள்ள வேண்டிய சவால்களை அவர் முன்னெடுக்கிறார். விசுவாசத்தில் வாழ்கிறவர்களின் வாழ்க்கை எளிதானது அல்ல, அது ஒரு சவாலான பணி....

எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்

ஆண்டவரின் பிரசன்னம் என்றும் நம்மோடு இருக்கிறது என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் (+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 16-20)தெளிவாக எடுத்துரைக்கிறது. “இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொல்கிறார். பொதுவாக மற்ற சமயங்களில் கடவுள் என்கிறவர் எங்கோ இருந்துகொண்டு மக்களைப்பார்த்துக் கொண்டு இருக்கிறவர் போல சித்தரிக்கப்படுகிறார். ஆனால், கிறிஸ்தவ சமயத்தில் கடவுள் மக்களோடு இருக்கிறவராக தன்னை வெளிப்படுத்துகிறார். அவருடைய பிறப்பான ‘இம்மானுவேல்’ என்றால் கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பதே சிறந்த செய்தி. விவிலியம் முழுவதும் கடவுள் மக்களோடு, குறிப்பாக ஏழை, எளிய மக்களோடு, துன்பப்படுகிற, துயரத்தால் வாடுகிற மக்களோடு தன்னையே இணைத்துக்கொள்கிறார் என்பது திட்டவட்டமாகச் சொல்லப்படுகிறது. அவர் அவர்களோடு பயணித்திருக்கிறார். அவர்களோடு தங்கியிருக்கிறார். அவர்களை வழிநடத்தியிருக்கிறார். எகிப்திலே அடிமைத்தனத்தில் வீழ்ந்திருந்த இஸ்ரயேல் மக்களை, அவர்களோடு தங்கியிருந்து வழிநடத்தி அவர்களை பாலும் தேனும் பொழியும் கானான் தேசத்திற்கு வழிநடத்தினார். துன்பங்களைக்கண்டு...

உவமை வாயிலாகப்பேசும் இயேசு

இயேசு இதுவரை மக்களிடம் பேசுகிறபோது உவமைகள் வாயிலாக, உருவகங்கள் வாயிலாகப் பேசுகிறார். உவமை என்பது புதிர் போன்றது. விடைக்கான செய்தி தரப்படுகிறது. அதை கேட்கிறவர் தனது அறிவைப்பயன்படுத்தி கண்டுபிடிக்க வேண்டும். சற்று ஆழமாகச் சிந்திக்க ஆரம்பித்தால், நிச்சயம் அவர்களால், உவமை வாயிலாக இறையாட்சித்தத்துவத்தை அறிந்து கொள்ள முடியும். அதுதான் உவமை. அதைத்தான் இயேசு தனது போதனையில் மக்களுக்கு அறிவிக்கிறார். மக்களாகவே உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்று, அவர் உவமை வாயிலாகப் பேசுகிறார். இயேசு இவ்வளவுகாலம் மறைமுகமாக, உவமை வாயிலாகப்பேசியவர், தனது கருத்துக்களை மறைமுகமாகப் பேசியவர் இன்றைய நற்செய்தியில், இதுநாள் வரை தான், மறைமுகமாக சொல்லி வந்த கருத்துக்களை நேரடியாக, வெளிப்படையாகச்சொல்கிறார். ”தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன்” என்பதுதான் அந்த செய்தி. இந்த செய்தியைத்தான், போதனைகள் வாயிலாக, தனது வாழ்வு மூலமாக மக்களுக்கு மறைமுகமாக வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தது, தந்தையின் அன்பை எடுத்துரைப்பதற்காக. தந்தையின் இரக்கக்குணத்தை வெளிப்படுத்துவதற்காக. தந்தையைப்பற்றி அனைவரும் அறிந்துகொள்ள...

நிலையான, நிறைவான மகிழ்ச்சி

இயேசு கிறிஸ்து ”உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்” என்று சொல்கிறார். கிறிஸ்தவர்களாக இருக்கக்கூடிய நமக்கு எப்படிப்பட்ட மகிழ்ச்சி பரிசாகக் கிடைக்கும் என்பதை இன்றைய வாசகங்கள் வாயிலாக நாம் பார்ப்போம். 1. கிறிஸ்து தருகிற மகிழ்ச்சி நம்மிடமிருந்து எடுக்கப்படாது. உதாரணமாக, ஒரு பொருள் வாங்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். அந்த பொருளை வாங்கியும் விடுகிறோம். நமக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. அந்த மகிழ்ச்சி எத்தனை காலம் இருக்கும்? ஒருநாள் இருக்கும். ஒரு வாரம் இருக்கும். அவ்வளவுதான். அந்த மகிழ்ச்சி காலப்போக்கில் மறைந்துவிடும். ஆனால், இயேசு தரக்கூடிய மகிழ்ச்சி காலத்திற்கும் நிலைத்து நிற்கும். இயேசு தரக்கூடிய மகிழ்ச்சியின் இரண்டாவது பண்பு 2. நிறைவான மகிழ்ச்சி. முழுமையான மகிழ்ச்சி. ஒரு பொருளை நாம் வாங்குகிறபோது கிடைக்கக்கூடிய மகிழ்ச்சி நிறைவான மகிழ்ச்சி அல்ல. அதைவிட சிறந்த பொருளைப் பார்க்கிறபோது, அதை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதை வாங்கினாலும், நமது மகிழ்ச்சி நிறைவு கொள்வதில்லை. இன்னும்...

இயேசுவில் நமது நம்பிக்கை

வாழ்வைப்பற்றி பலவிதமான சிந்தனைகளை, பல காலகட்டங்களில் மக்கள் கொடுத்திருக்கிறார்கள். அதிலே குறிப்பிடத்தகுந்த சிந்தனை, இந்த உலகத்தில் வாழுகிறபோது, எதிர்காலத்தை நினைத்தோ, அடுத்த உலகத்தை நினைத்தோ கவலை கொள்ளத்தேவையில்லை. இந்த உலகம் உண்மையானது. இந்த நிமிடம் உண்மையானது. அதில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். எதிர்காலத்தைப்பற்றி நினைத்து, வீணாகக் கவலைக் கொள்ளக்கூடாது என்று சொல்வார்கள். இன்றைய நற்செய்தியில் இயேசுவின் வார்த்தைகளை சற்று தியானிக்கிறபோது, யூதர்களின் மனநிலை தான் நினைவுக்கு வருகிறது. யூதர்களைப் பொறுத்தவரையில் இந்த உலகத்தைப்பற்றிய பார்வை இரண்டு கட்டங்களை உடையது. இந்த உலகம் தீய ஆவிகளின் பிடியில் இருக்கிறது என்றும், நாம் மகிழ்ச்சியாக வாழக்கூடிய எதிர்காலம் ஒன்று இருக்கிறது என்றும் நம்பினர். அந்த எதிர்கால வாழ்விற்கான தயாரிப்பு தான், நாம் வாழக்கூடிய வாழ்வு. எனவே, நிகழ்காலத்தில் துன்பங்கள், பாடுகள் இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல், எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ள இருக்கிற பேரின்பத்தை மனதில் நிறுத்தி வாழ, இது நமக்கு அழைப்புவிடுக்கிறது. இது நிகழ்காலத்தை தவிர்ப்பதாக...