நிறைவோடு வாழ…
பாரசீகர்கள் மத்தியில் செய்திகளைச்சுமந்து செல்வதற்கு வசதியாக ஒரு பழக்கம் இருந்தது. அனைத்து சாலைகளும், பல இலக்குகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. செய்தியைச் சுமந்து செல்கிறவர் குறிப்பிட்ட தூரத்திற்குச் சென்று, அதை அந்த இலக்கில் காத்துக்கொண்டிருக்கிறவரிடம் கொடுக்க வேண்டும். அதை அவர் அடுத்த இலக்கிற்கு சுமந்து செல்வார். செய்தியைக் கொண்டுவருகிறவருக்கும், அவருடைய குதிரைக்கும் தேவையான உணவு மற்றும் தங்கிச்செல்ல வசதி, குறிப்பிட்ட இலக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அப்படி இல்லையென்றால், அங்கே இருக்கிறவர்கள் அனைத்தையும் அவருக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும். இதேமுறை, உரோமையர்களுக்கு அடிமைப்படுத்தப்பட்டிருந்த, பாலஸ்தீனத்திலும் கடைப்பிடிக்கப்பட்டது. உரோமை காவலர்கள் தனது ஈட்டியால் யாரையாவது தொட்டால், அதனுடைய பொருள், அவர் உடனடியாக உதவி செய்ய வேண்டும். இயேசு சிலுவை சுமந்து சென்றபோது, சீமோன் உதவி செய்ய வந்தது இப்படித்தான். அதை மீறினால், அவர்கள் தண்டிக்கப்படுவர். இந்த பிண்ணனியில் தான், இயேசு இந்த செய்தியை நமக்குச்சொல்கிறார். இயேசுவின் செய்தி இதுதான்: மற்றவர்கள் நம்மைக் கட்டாயப்படுத்திச் செய்யச்சொல்லும் செயலை,...