Category: இன்றைய சிந்தனை

தம் சிறகுகளால் நம்மை அரவணைப்பார்

இறைவன் மீது நம்பிக்கை வைக்கிறவர்களுக்கு இறைவன் எப்படியெல்லாம் பாதுகாப்பாக இருப்பார் என்பதை, இந்த திருப்பாடல் (திருப்பாடல் 91: 1 – 2, 3 – 4, 14 – 15) நமக்கு எடுத்துக் கூறுகிறது. இங்கே இறைவனே பேசுவதாக, திருப்பாடல் ஆசிரியர் எழுதியிருக்கிறார். இறைவன் என்ன பேசுகிறார்? தன்னை அன்பு செய்கிறவர்களுக்கு தான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்பதுதான், இறைவனுடைய கூற்றாக இருக்கிறது. இறைவன் தன்னை முழுமையாக நம்புகிறவர்களுக்கும், தன்னை நோக்கி மன்றாடுகிறவர்களுக்கும் எப்படியெல்லாம் உதவி செய்யப்போகிறார் என்பதை, இந்த திருப்பாடல் நமக்கு விளக்கமாகக் கூறுகிறது. அதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகமும் (மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-26) நமக்கு அறிவிக்கிறது. இயேசு தொழுகைக்கூடத்தலைவரின் மகளையும், பல ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் அவதியுற்ற பெண்ணையும், அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையின் மிகுதியினால் காப்பாற்றினார் என்பது, இங்கே நமக்கு தெளிவாக விளக்கப்படுகிறது. ஆக, கடவுளை நம்பினோர் எப்போதுமே கைவிடப்பட மாட்டார்கள் என்பது, இங்கே தெளிவாகிறது....

துணிவும், நம்பிக்கையும்

எங்கே நம்பிக்கை இருக்கிறதோ, அங்கே துணிவு இருக்கிறது. நம்பிக்கை இருக்கிற இடத்தில் துணிவு இருக்கிறது. நம்முடைய அன்றாட வாழ்க்கையிலே, நாம் சந்திக்கின்ற சவால்களும், இன்னல்களும் ஏராளம். இத்தகைய தருணங்களில், அவற்றை நம்பிக்கையின் துணை கொண்டு துணிவோடு சந்திக்க நாம் அறிவுறுத்தப்படுகிறோம். அதாவது கடவுள் மட்டில் முழுமையாக நம்பிக்கை வைத்து, நம்முடைய பாரங்களை, துன்பங்களை அவர் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையோடு வாழ அழைக்கப்படுகிறோம். ஒரு குழந்தை, தன்னுடைய தாயிடமோ, தந்தையிடமோ இருக்கின்றபோது, தன்னை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என்கிற துணிச்சலோடு இருப்பதாக உளவியல் அறிஞர்கள் கூறுவார்கள். இதற்கு காரணம், தன்னுடைய பெற்றோரிடம் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கை. என்ன நடந்தாலும், என்னை, என் பெற்றோர் பார்த்துக்கொள்வார்கள் என்கிற, ஆணித்தரமான பிடிப்பு. அந்த குழந்தை கொண்டிருக்கக்கூடிய நம்பிக்கையை, ஆழமான எண்ணத்தை நமதாக்க அழைக்கப்படுகிறோம். நம்முடைய விண்ணகத்தந்தையின் மீது, நாம் உண்மையிலே நம்பிக்கை கொண்டிருந்தால், நம்முடைய வாழ்விலே ஏற்படுகின்ற எத்தகைய துன்பத்தையும் கண்டு அஞ்ச...

இயேசுவோடு இருக்கிற மகிழ்ச்சி

யூதர்களுக்கு தர்மம், செபம் மற்றும் நோன்பு ஆகிய மூன்றும் முக்கியமானவை. இயேசுவிடத்தில் யோவானின் சீடர்கள் நோன்பு பற்றி கேட்கும்போது, இயேசுவும் அவருடைய சீடர்களும் நோன்பிருக்கவில்லை. இயேசு நோன்பை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை என்பதல்ல இங்கே சுட்டிக்காட்டப்படு;ம் பொருள். மாறாக, இயேசுவின் பிரசன்னத்தை, இருப்பை வலியுறுத்துவதாக அமைவதுதான் இந்த நற்செய்திப்பகுதியின் மையம். இயேசு நம்மோடு இருக்கின்றபோது நாம் அதை மகிழ்வோடு கொண்டாட வேண்டும். இயேசு நம்மோடு இருப்பது நமக்கு மிகப்பெரிய ஆனந்தம் தருவதாக அமைகிறது. இயேசுவின் இருப்பு போற்றி மகிழ்வோடு இருக்கக்கூடிய நிகழ்வு. நாம் நோன்பு இருப்பது இயேசுவின் வருகைக்காகத்தான். கடவுளின் அருளைப்பெற்றுக்கொள்ளத்தான். அப்படியிருக்கின்றபோது, இயேசுவே நம்மோடு இருக்கின்றபோது நாம் ஏன் நோன்பு இருக்க வேண்டும்? என்பது இயேசுவின் கேள்வி. ஒவ்வொருநாளும் நற்கருணையில் இயேசு எழுந்தருளி வருகிறார். அவர் நம்மோடு இருக்கின்றபோது நமக்கு கவலைகள் இருக்கக்கூடாது. இயேசு நம்மோடு இருப்பது நமக்கு மகிழ்வைத்தர வேண்டும். அந்த மகிழ்ச்சி நிலைத்திருக்க இறைவனை மன்றாடுவோம். ~...

நற்செய்தியாளர் மத்தேயு

மத்தேயுவின் இயற்பெயர் லேவி என்று அழைக்கப்படுகிறது. இதனுடைய அர்த்தம் “சேர்க்கை” என்பதாகும். எபிரேய மொழியில் மத்தேயு என்றால் “கடவுளின் கொடை“ என்று அர்த்தம் சொல்கிறார்கள். திருத்தூதர்களில் ஒருவரான அந்திரேயா வழியாக, இவர் அறிமுகமாகிறார். மற்ற திருத்தூதர்கள் சாதாரணமானவர்கள். ஆனால், அவர்களை விட செல்வத்திலும், அதிகாரத்திலும் உயா்ந்த வரிவசூலிக்கக்கூடியவராக மத்தேயு இருக்கிறார். கப்பாநாகும் அருகில் இருக்கிற கலிலேயா கடற்கரை அருகில் தான், வரிவசூலித்துக்கொண்டிருந்தார். உரோமையர்களுக்காகப் பணிசெய்து கொண்டிருந்ததாலும், வரிவசூலிக்கக்கூடிய தொழிலைச் செய்து வந்ததாலும், மக்களின் கோபத்திற்கும், வெறுப்பிற்கும் ஆளானவர். ஆனாலும், இயேசுவின் அழைப்பை ஏற்று, அந்த மக்களுக்கே பணிபுரிவதற்கு முன்வருகிறார். இவர் எத்தியோப்பியா, பெர்ஷியா, பார்த்தியா, எகிப்து நாடுகளுக்குச் சென்று, வேதம் போதித்ததாக பாரம்பரியம் கூறுகிறது. எகிப்து நாட்டில் அரசாண்ட அரசனின் மகனை உயிருடன் எழுப்பினார். தொழுநோயால் தாக்கப்பட்ட அந்த நாட்டு இளவரசி இபிஜினாவையும் குணப்படுத்தினார். மத்தேயு தனது நற்செய்தியை யூதர்களுக்கு எழுதுகிறார். பழைய ஏற்பாடு நூலை முழுமையாகக் கற்றுக்கொண்டதை, அவர் எழுதுகிற...

ஆண்டவர் எனக்குச் செவிசாய்த்தார்

ஆண்டவர் இரக்கமுள்ளவர். எவ்வளவு பெரிய தவறு செய்தாலும், உண்மையான மனமாற்றத்தோடு திரும்பி வந்தால், நிச்சயம் கடவுள் நம்மை ஏற்றுக்கொள்வார் என்பதை, அனுபவப்பூர்வமாக வெளிப்படுத்தக்கூடிய ஒரு பாடல் தான் இந்த திருப்பாடல் (திருப்பாடல் 116: 1 – 2, 3 – 4, 5 – 6, 8 – 9). இறைவனிடத்தில் நம்பிக்கை உணர்வோடு நாம் மன்றாடுகிறபோது, இறைவனின் அருளும், ஆசீரும் நமக்கு நிறைவாகக் கிடைக்கும் என்பதை, இந்த திருப்பாடல் நமக்கு வெளிக்காட்டுவதாக அமைகிறது. துன்பத்திலும், துயரத்திலும், குற்ற உணர்ச்சியிலும் சாவை எதிர்நோக்கியிருக்கிற மனிதன் என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறான். சாவை எதிர்கொள்ளவும் பயந்து குழப்பமான நிலையில் புலம்பிக் கொண்டிருக்கிறான். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அவன் கடவுளைத் தேடுகிறான். அவனிடத்தில் இப்போது இருப்பது தான் செய்த தவறுகளுக்காக மனம் வருந்திய நிலை. ஆனால், அவன் ஆச்சரியப்படக்கூடிய அளவுக்கு கடவுள் அவனை ஏற்றுக்கொள்கிறார். அவனுக்கு தன்னுடை மன்னிப்பை வழங்கி, அவனுக்கு பிரச்சனைகளிலிருந்து விடுதலை கொடுக்கிறார்....