Category: இன்றைய சிந்தனை

தொழுநோயாளியின் நம்பிக்கை

மத்தேயு 10: 8 ல் இயேசு பன்னிரு திருத்தூதர்களையும் பணிக்காக அனுப்பியபோது, தொழுநோயாளர்களைக் குணப்படுத்துங்கள், என்று பணிக்கிறார்.பொதுவாக, நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள் என்று சொன்ன இயேசு, தொழுநோயாளர்களைக் குறிப்பிட்டுச் சொல்வது இங்கே கவனிக்கத்தக்கது. இயேசுவின் இந்த குறிப்பிட்டு தொழுநோயாளிகளுக்குச் சொல்லும் வார்த்தைகள், யூத சமுதாயத்தில் நிலவிய, தொழுநோயாளிகளுக்கான கொடுமையை அறிவிப்பதாக அமைகிறது. தொழுநோயாளர்கள் உயிரோடு இருந்தும் இறந்தவர்களே, என்று சொன்னால், அது சரியான பார்வையாக இருக்கும். அந்த அளவுக்கு, யூத சமூகம் தொழுநோயாளிகளை நடத்தியது. தொழுநோயாளிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தது. அவர்கள் தங்களின் நிலையை நினைத்து, நினைத்து வருந்தக்கூடிய மிகப்பெரிய துயரமாக அவர்களின் வாழ்வு இருந்தது. அப்படி உருக்குலைந்த நிலையில் இருக்கக்கூடிய ஒரு தொழுநோயாளி, இயேசுவிடத்தில் “என்னைக் குணமாக்குங்கள்” என்று சொல்லாமல், ”நீர் விரும்பினால் என்னைக் குணமாக்கும்” என்று சொல்வது உண்மையிலே, அவரின் நம்பிக்கையின் ஆழத்தைக் குறிப்பதாக இருக்கிறது. தனது நிலை அவ்வளவுக்கு துர்பாக்கியமாக இருந்தாலும், கடவுளின் திருவுளம் எதுவாக இருந்தாலும்...

இயேசுவுடனான நமது நெருக்கம்

தொழுகைக்கூடத்தில் சுற்றியிருந்த அனைத்து மக்களும் இயேசுவை ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர். அவர்களின் ஆச்சரியத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை. இவ்வளவு காலம், தீய ஆவிகள் என்றாலே, போதகர்களே பயந்து நடுங்கிய நாட்களில், இவ்வளவு துணிச்சலாக, போதனைப்பணிக்கு வந்து சிலநாட்கள் கூட ஆகாத, தச்சரின் மகன், நமக்கெல்லாம் அறிமுகமானவர், இவ்வளவு துணிவோடு போதித்து, தீய ஆவியை விரட்டக்கூடிய வல்லமை பெற்றிருக்கிறாரே? நிச்சயமாக இது பாராட்டப்பட வேண்டும். அவரிடத்தில் இருக்கிற சக்தி, அளப்பரியதுதான். இது போன்ற எண்ண ஓட்டங்கள் மக்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருந்த நேரத்தில் தான், இயேசு தனது சீடரின் வீட்டிற்குச் செல்கிறார். இயேசு நிச்சயமாக, பேதுருவின் வீட்டிற்கு உரிமையோடு சென்றிருக்க வேண்டும். ஏனென்றால், அவர் தொழுகைக்கூடத்தில் போதித்திருக்கிறார். சற்று இளைப்பாற அவர் நினைத்திருக்கலாம். ஆனால், நிச்சயமாக, பேதுருவின் மாமியார் உடல்சுகவீனம் இல்லாமல் இருப்பது அவருக்குத் தெரிந்திருக்காது. ஏனென்றால், இயேசு வீட்டிற்குள் நுழைந்தபிறகுதான், அவருடைய சீடர்கள் பேதுருவின் மாமியார் உடல் சுகவீனம் இல்லாமல் இருப்பதை அறிவிக்கின்றனர். இயேசுவோடு...

இயேசுவின் வல்லமை

இயேசுவின் வார்த்தைகள் மட்டுமல்ல, அவருடைய செயல்பாடுகளும் மக்களை வியப்பில் ஆழ்த்தின. தொழுகைக்கூடத்தில் தீய ஆவியால் பிடிக்கப்பட்டிருந்த மனிதன், அங்கிருந்தவர்களுக்கு பெருத்த துன்பத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தான். அவனை இயேசு நலமாக்குகிறார். நற்செய்தி நூல்கள் அனைத்திலும் தீய ஆவிகளைப்பற்றியும், அவற்றிலிருந்து இயேசு மக்களுக்கு விடுதலை கொடுத்த நிகழ்வுகளையும் பல இடங்களில் பார்க்கிறோம். இதன் பிண்ணனி என்ன? என்பதை நாம் பார்ப்போம். யூத மக்கள் பேய்களையும், தீய ஆவிகளையும் இருப்பதாக நம்பினர். இந்த உலகத்தின் மூலைமுடுக்கெல்லாம் தீய ஆவிகள் ஆக்கிரமித்து இருப்பதாக நினைத்தனர். அரச அரியணையிலிருந்து, குழந்தைகளின் தொட்டில் வரை, இந்த தீய ஆவிகள் ஆக்கிரமித்திருந்தன. கல்லறைகளுக்கு நடுவில் ஏராளமான மண்டை ஓடுகள் காணப்பட்டன. இந்த மண்டை ஓடுகளின் நடுவில், சிறிய அளவிலான துவாரங்கள் இடப்பட்டிருந்தன. இது எதைக்குறிக்கிறது என்றால், அறுவைச்சிகிச்சை வளர்ச்சியடையாத அந்த காலக்கட்டத்திலேயே, இந்த சிறிய துவாரத்தை மருத்துவர்கள் செய்திருக்கிறார்கள். இதன் மூலமாக அவர்களின் நம்பிக்கை, தீய ஆவி அந்த துவாரத்தின் வழியாக, வெளியே...

நமது திருமுழுக்கை நினைவுகூர்வோம் !

இன்று ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்கு விழா. இவ்விழாவில் தந்தை இறைவனாலும், தூய ஆவியாலும் வலிமைப்படுத்தப்பட்டார். அவரது பணிவாழ்வின் தொடக்கமாக அவரது திருமுழுக்கு அமைந்தது. இந்த நாளில் நாம் நமது திருமுழுக்கைக் கொஞ்சம் நினைவுகூர்வோமா? நாம் திருமுழுக்கு பெற்ற அன்று பின்வருவன நடைபெற்றன: 1. தந்தை இறைவன் நம்மை ஆண்டவர் இயேசு வழியாகத் தமது சொந்தப் பிள்ளைகளாக்கிக் கொண்டார். அன்றிலிருந்து நாம் இறைவனின் பிள்ளைகள். இந்த உணர்வோடு நான் வாழ்கிறேனா? இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேனா? 2. நாம் திருச்சபையின் உறுப்பினர்களானோம். தாய்த் திருச்சபையின் அன்புப் பிள்ளையாக நான் வாழ்கிறேனா? திருச்சபைக்குரிய கடமைகளை நான் நிறைவேற்றுகிறேனா? 3. திருமுழுக்கால் நற்செய்தி அறிவிக்கும் கடமையைப் பெற்றோம். அந்தக் கடமையை நான் ஆற்றுகிறேனா? எனது நற்செய்தி அறிவிக்கும் பணி என்ன என்பது பற்றிச் சிந்தித்து, ஏதாவது செய்கிறேனா? ஆண்டவரின் திருமுழுக்கு நாளில் நமது திருமுழுக்கை நினைவுகூர்ந்து, நமது கடமைகளை ஆற்ற முன்வருவோம். மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா,...

திருக்காட்சிப் பெருவிழா

திருக்காட்சி விழா கொண்டாடப்படுவதன் பிண்ணனி நீண்ட நெடியது. இதற்கு மற்ற சமயங்களில் இருந்த பழக்கவழக்கங்கள் அடிப்படையானது. குறிப்பாக எகிப்தில் இருந்த மற்ற மதங்களின் பழக்கங்களில் இருந்து, அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் பலவற்றைப் புகுத்தினர். அந்த நீண்ட நெடிய பயணம் தான், திருக்காட்சி விழா. தொடக்கத்தில் கிறிஸ்து பிறப்பு விழா, திருக்காட்சி திருவிழா மற்றும் ஆண்டவரின் திருமுழுக்கு ஆகிய மூன்று விழாக்களும் ஒரு சேர கொண்டாடப்பட்டது என்று சொல்லப்படுகிறது. பின்னாட்களில் ஜனவரி முதல் தேதிக்குப்பிறகு வரக்கூடிய ஞாயிறு மற்றும் அதனைத்தொடர்ந்த ஞாயிற்றுக்கிழமையில், திருக்காட்சி விழாவும், ஆண்டவரின் திருமுழுக்கு விழாவும் கொண்டாடப்பட, வழிபாட்டு ஒழுங்குகள் பணித்தது. இன்றைக்கு திருக்காட்சி விழா, மூன்று அரசர்களின் விழாவாக மக்களால் அறியப்படுகிறது. இது ஆண்டவரின் விழாவாகும். நற்செய்தியில் அரசர்கள் குழந்தை இயேசுவை காணவந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இருந்தாலும், பாரம்பரியப்படி ஒன்பதாம் நூற்றாண்டில் கஸ்பார், மெல்கியோர், பல்தசார் என்ற பெயர்கள் சொல்லப்பட்டன. விண்மீனின் வழிகாட்டுதல், அவர்கள்...