Category: இன்றைய சிந்தனை

கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவோம்!

கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுகிறவரே என் தாயும், சகோதரியும், சகோதரரும் ஆவார் என்று இயேசு சொல்கிறார். இந்த உலகத்திலே நாம் நமக்கென்று ஒரு திட்டம் வைத்திருக்கிறோம், நம்முடைய பெற்றோரும் நமக்கென்று ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள். கடவுளும் நமக்கென்று ஒரு திட்டம் வைத்திருக்கிறார். அந்த திட்டத்தை அறிந்து செயல்படுத்துவதுதான் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவது ஆகும். தாயின் கருவறையில் உருவாவதற்கு முன்பே நம்மை முன்குறித்து வைத்திருக்கிற நமது இறைவன், நாம் செய்ய வேண்டிய பணி என்று ஒன்றை, நமக்காக வைத்திருக்கிறார். நம்முடைய வாழ்வின் நோக்கம் அந்தப்பணியைச்செய்து முடிப்பது தான். நம்மைத்தவிர, வேறு யாரும் அந்தப்பணியைச்செய்ய முடியாது. ஆனால், அதே வேளையிலே, கடவுள் யாரையும் வற்புறுத்துவதில்லை. முழுச்சுதந்திரம் கொடுத்திருக்கிறார். நமக்காக கடவுள் வைத்திருக்கிற அந்தப்பணியை அடையாளம் கண்டுகொண்டு, அதைத்திறமையாக செய்து முடிக்கும்போது, இறைத்ருவுளத்திற்கு பணிந்து நடக்கிறவர்களாக நாம் வாழ்கிறோம். இயேசுவின் குடும்பத்தில் ஒருவராக நாம் மாறுகிறோம். கடவுளின் திருவுளத்தை அறிந்துகொள்ள நமக்கு உதவி செய்வது, நம்முடைய செபம்....

பொறுமை – வாழ்வின் வெற்றிக்கு அடித்தளம்

எப்படியாவது இயேசுவை ஒழித்துக்கட்ட வேண்டுமென்ற வேட்கை, மறைநூல் அறிஞர்களின் அறிவுக்கண்களை மறைத்துவிடுகிறது. அடிப்படை இல்லாத ஒரு குற்றச்சாட்டை இயேசுவின் மேல் சுமத்துகிறார்கள். இயேசு இதை அறியாதவரல்ல. அதற்காக, நிதானம் இழந்து அவர்கள் மீது கோபப்படுகிறவரும் அல்ல. நிதானம் இழக்காமல் பொறுமையோடு, அதேநேரம் துணிவோடு அவர்களின் கூற்றைப்பொய்யாக்குகிறார். இயேசு வாழ்ந்த காலத்தில் பேய்களை ஓட்டக்கூடிய மந்திரவாதிகள் எத்தனையோ பேர் இருந்தனர். பேய் பிடித்திருந்தால் இவர்களை மக்கள் நாடிச்செல்வது சாதாரணமான செயல். இயேசுவிடமும் அந்த நம்பிக்கையோடு தான் மக்கள் பேய்பிடித்தவர்களை அழைத்து வந்திருந்தனர். ஆனால், அவர் மீது சமத்தப்பட்ட ‘பேய்களின் தலைவன் பெயல்செபுலைக்கொண்டே பேய்களை ஓட்டுகிறான்’ என்ற குற்றச்சாட்டு கவனிக்கத்தக்கது. இயேசுவின் பதில் மக்களுக்கு அவர்மீதுள்ள குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. ஒரு அரசன் தன்னுடைய வீரர்களைப்பயன்படுத்தி தன்னுடைய அரசை விரிவுபடுத்தத்தான் முயற்சி எடுப்பான். தன்னுடைய வீரர்களைக்கொல்வது தன்னையே அழிப்பதற்கு சமம் என்பதைப்புரியாதவன் பைத்தியக்காரனாகத்தான் இருக்க முடியும். அப்படி இருக்கும்போது பேய்களின் அரசை ஏற்படுத்த...

மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்

இன்றைய நற்செய்தியில்(மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:14-20) மூன்று முக்கியமான வார்த்தைகள் இயேசுவின் பணிவாழ்வின் மையமாகக் கருதப்படுகிறது. மனம்மாற்றம், நற்செய்தி மற்றும் நம்பிக்கை என்பதுதான் அந்த மூன்று வார்த்தைகள். மனம்மாற்றம் என்பது பாவத்தை வெறுப்பது. இதுவரை பாவத்திலே வாழ்ந்தவன், பாவத்தோடு வாழ்ந்தவன், பாவியாக இருந்தவன், இப்போது பாவத்தை வெறுக்கிற நிலைதான் மனமாற்றம். இயேசுவின் இரண்டாம் செய்தி நற்செய்தி. இயேசு நற்செய்தி அறிவிப்பதற்காக வந்திருக்கிறார். அது என்ன நற்செய்தி? நம்பிக்கை தரும் நற்செய்தி. முற்காலத்தில், வாழ்வே நம்பிக்கையின்மையினால் நிறைந்திருந்தது. அனைத்தையும் எதிர்மறையாக சிந்திக்கும் எண்ணம் இருந்தது. ஆனால், இயேசுவின் மண்ணக வாழ்வு நம்பிக்கை தரும் நற்செய்தியாக இருக்கிறது. அவரது போதனைகளும், அவர் செய்த புதுமைகளும் நம்பிக்கையிழந்திருந்த மக்களுக்கு, புதிய ஒளியைத்தருவதாக இருக்கிறது. இயேசு தரும் மூன்றாவது செய்தி நம்பிக்கை. நம்பிக்கை எதை வெளிப்படுத்துகிறது? நம்பிக்கை கடவுளின் அன்பை, இரக்கத்தை, மன்னிப்பை, பராமரிப்பை உணர்த்துகிறது. கடவுள் எல்லாம் வல்லவராக இருக்கிறார் என்பதையும், அவரிடத்திலே நாம்...

போற்றவும் தூற்றவும் கடந்து பணியில் நிலைப்போம்

இயேசு தம் வாழ்நாளில் எந்த அளவுக்குப் பாராட்டும் புகழ்ச்சியும் வணக்கமும் பெற்றாரோ, அந்த அளவுக்கு இகழ்ச்சியும், புரிந்துணர்வின்மையும், அவதூறும் பெற்றுக்கொண்டார் என்பது உண்மை. அந்த உண்மையெ மாற்கு அச்சமின்றி எழுதிவைத்திருக்கிறார். என்ன காரணம்? 1. நற்செய்தி அறிவிப்பாளரின், இறைவாக்கினரின், பேராளியின் பணியில் எதிர்ப்புகளும், ஏளன விமர்சனங்களும் எழத்தான் செய்யும். அதையெல்லாம் தூசு எனப் பறந்கள்ளிவிட்டு பணியைச் தொடரவேண்டும். யாராவது உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால், எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுறோம் (லூக் 10:11) என்று சொல்லித் தம் பணியைச் தொடரச் சீடரைப் பணித்தார் அல்லவா! அந்த மனநிலையை இயேசுவும் கொண்டிருந்தார் என்று காட்ட. 2. பச்சை மரத்துக்கோ இவ்வாறு செய்கின்றார்கள் என்றால், பட்ட மரத்துக்கு என்னதால் செய்யமாட்டார்கள்? (லூக்கப 23:31) என இயேசுவே உரைக்கவில்லையா? எனவே நம் வாழ்வில் நாம் சந்திக்கின்ற அவதூறுகள் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம் என்று நமக்குச் சுட்டிக்காட்ட. எனவே யாராவது நம்மைப்...

விசுவாசம் – கடவுளின் கொடை

இயேசு கடவுளின் நற்செய்தியை உலகெங்கும் எடுத்துச்செல்ல திருத்தூதர்களை தேர்ந்தெடுக்கிறார். இயேசுவின் இந்த செயல், விசுவாசம் என்பது போற்றிப்பாதுகாக்க வேண்டியது மட்டுமல்ல, அது பறைசாற்றப்பட வேண்டியது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. கத்தோலிக்க திரு அவை இரண்டாயிரம் வருடத்திற்கும் மேலான பாரம்பரியத்தைகொண்டு இருக்கிறது. இந்த இரண்டாயிரம் வருட பாரம்பரியத்தின் வெற்றி, ஒவ்வொரு தலைமுறையினரின் அர்ப்பணத்திலே இருந்திருக்கிறது. அன்றைக்கு சீடர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட விசுவாசத்தை அர்ப்பண உணர்வோடு தலைமுறையினர் தோறும் அடுத்த தலைமுறையினர்க்கு மிகுந்த பாதுகாப்போடு, மகிச்சியோடு, தியாக உள்ளத்தோடு பரிமாறியிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் சந்தித்த துன்பங்கள், துயரங்கள், கொடுமைகள் எண்ணிலடங்காதவை. ஆனாலும், தாங்கள் பெற்றுக்கொண்ட அந்த மாட்சிமையை, உண்மையை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக தாங்கள் சந்தித்த இன்னல்களை பொறுமையோடு ஏற்றுக்கொண்டார்கள். இதற்கு சிறந்த உதாரணம் திருத்தூதர்கள். திருத்தூதர்கள் அனைவரும் இயேசுவுக்காக சிந்திய இரத்தம் அதற்கு சாட்சி. இன்றைக்கும் நாம் பெற்றிருக்கிற இந்த பாரம்பரியமான விசுவாசத்தை சிதைக்காமல் எந்தச்சேதாரமும் இல்லாமல் அடுத்த தலைமுறையினருக்குக் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய பொறுப்பு...