Category: இன்றைய சிந்தனை

மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர்

இனிய சுவையுடன் கனிந்த கனி இருக்க கள்ளிக் காயைக் கடிக்கும் கடின மனத்தினர் சிலர். ஊரெல்லாம் ஒளி வெள்ளமாக இருந்தாலும் சிலர் ஒதுங்கியே இருப்பர். ஊரெல்லாம் ஒன்று கூடி தேரிளுக்கும். ஆனால் அவர்கள் மட்டும் வேரெதையோ நோட்டமிட்டிருப்பார்கள். கலகலப்பாக கலக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு சிலர் கல்லாகி மூலையில் முடங்கிக்கிடப்பர். இப்படி இயல்பானதை விட்டு விட்டு,முரணான முறையில் செயல்படும்போது அவனில் ஏதோ ஒரு குறை உள்ளது என்று பொருள். ஒளியில் வந்தால் தன் அழுக்கு, அசிங்கம், குறை. குற்றம் தனக்குத் தெறிய வரும். பிறர் தெறிய நேரிடும். தன்போக்கினை மாற்ற வேண்டும் என்ற தயக்கம். கோயிலுக்கு வந்தால் தன் பாவ வாழ்வு தனக்குத் தெறிய வரும். மனமாற்ற வாழ்வுக்கு தயாராக வேண்டுமே என்ற பயம். இருளில் இருப்பது இப்படிப்பட்டவர்களுக்கு வசதியானது; சுகமானது; சௌகரியமானது. ஒளிக்குள் வருவதற்கு உடலை வளைக்க வேண்டும். உள்ளத்தை ஒடுக்கவேண்டும். நாலுபேரோடு கூடி கலகலப்பாக நல்லதைச் செய்ய...

செபிக்கும் மனநிலை

பரிசேயர் மற்றும் வரி தண்டுபவரின் செபத்தைப்பற்றிய ஓர் ஆய்வை இயேசு மேற்கொள்கிறார். இந்த நிகழ்ச்சி வாயிலாக, நமது செபம் எப்படி இருக்கக்கூடாது? மற்றும் எப்படி இருக்க வேண்டும்? என்கிற செய்தியையும் அவர் நமக்குத்தருகிறார். பரிசேயன் ஆலயத்திற்குச் சென்றது செபிப்பதற்காக அல்ல, மாறாக தன்னைப்பற்றிப் புகழ்வதற்காகத்தான் என்பது அவனுடைய வார்த்தைகளில் வெளிப்படுகிறது. ஒருவன் எப்படி? என்பது அவன் சொல்லித்தான் கடவுளுக்குத் தெரியவேண்டும் என்பதில்லை. பரிசேயன் சொன்னது அனைத்தும் உண்மைதான். அவன் சொல்லாவிட்டாலும் கடவுளுக்குத் தெரியும். எனவே, நம்மைப்பற்றிப் பெருமைபாராட்டுவதில் நாம் நேரத்தைச் செலவழிக்கத் தேவையில்லை. வரிவசூலிக்கிறவர் தனது நிலையை எண்ணிப்பார்க்கிறார். தனது வாழ்வைச் சிந்தித்துப்பார்க்கிறார். தான் இதுநாள் வரை நடந்துவந்த அந்தப் பாதையை பின்னோக்கிப்பார்க்கிறார். தான் பாவி என்பதை உணர்கிறார். கடவுளுக்கேற்ற வாழ்வு தான் வாழவில்லை என்பதை அறிகிறார். தனது தவறுக்காக மனம்வருந்துகிறார். நேர்மையான முறையில் வாழ, அவர் இறைவனின் மன்னிப்பிற்காக, அருளுக்காகக் காத்திருக்கிறார். செபம் என்பது நமது வாழ்வை கடவுள் முன்னிலையில்...

வாழ்வை மாற்றாத வழிபாடுகள்

மதம் என்பது இயேசுவைப் பொறுத்தவரையில் கடவுளையும், மனிதர்களையும் அன்பு செய்வதாகும். கடவுளை அன்பு செய்ய வேண்டுமென்றால், அதற்கான எளிதான வழி, சக மனிதர்களை அன்பு செய்வது. இங்கே அன்புதான் அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கிறது. மறைநூல் அறிஞர்களும், அன்பு என்கிற இந்த மதிப்பீட்டை முழுமையாக ஏற்றுக்கொள்கின்றனர். 1சாமுவேல் 15: 22 சொல்கிறது: ”ஆண்டவருக்கு மகிழ்ச்சி தருவது எரிபலிகள், பிறபலிகள் செலுத்துவதா? அவரது குரலுக்குக் கீழ்ப்படிவதா? கீழ்ப்படிதல் எரிபலியை விட சிறந்தது, கீழ்ப்படிதல் ஆட்டுக்கிடாய்களின் கொழுப்பை விட மேலானது”. ஓசேயா 6: 6 ”உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்”. ஆனால், நமது வாழ்க்கையில் வழிபாடுகளும், பக்திமுயற்சிகளும் தான் அதிகமாக இருக்கிறதே தவிர, அது காட்டும் நெறிமுறைகளை யாரும் பின்பற்றுவதும் கிடையாது. அதைப்பற்றிய கவலையும் கிடையாது. அன்பு இருக்க வேண்டிய இடத்தில் நாம் வெறும் பக்திமுயற்சிகளை வைத்திருக்கிறோம். வாழ்வு மாற்ற வேண்டிய வழிபாடுகள், வெறும் சடங்கு, சம்பிரதாயங்களாக நின்றுவிடுகிறது. உண்மையான மாற்றத்தை...

உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்

திருப்பாடல் 95: 1 – 2, 6 – 7, 7b– 9 ”உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்” விடுதலைப்பயணம் 17 வது அதிகாரத்தில் இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து திரும்பி வந்த பயணத்தைப் பார்க்கிறோம். இஸ்ரயேல் மக்கள் இரபிதீம் என்கிற இடத்தில் பாளையம் இறங்கினர். அங்கே அவர்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை. எங்கும் வறண்ட பாலைநிலம். மக்கள் மோசேக்கு எதிராகவும், கடவுளுக்கு எதிராகவும் முணுமுணுக்கத் தொடங்கினர். ஆண்டவர் அந்த பாலைநிலத்திலும் அற்புதமாக அவர்கள் தண்ணீர் பருகச்செய்தார். இந்த நிகழ்ச்சியில், இஸ்ரயேல் மக்களைச் சோதனைக்குள்ளாக்கியதாக நாம் பார்க்கிறோம். அது என்ன சோதனை? கடவுள் இவ்வளவுக்கு இஸ்ரயேல் மக்களுக்கு நன்மைகளைச் செய்திருக்கிறார். ஆனால், இஸ்ரயேல் மக்கள் அதனை கருத்தில் கொள்ளாமல், அற்ப காரணங்களுக்காக கடவுளையே சோதித்தனர். கடலை அற்புதமாக இரண்டாகப் பிளக்கச்செய்த கடவுளுக்கு, எகிப்திய நாட்டையே கதிகலங்க வைத்த இறைவனுக்கு, அவர்களின் தாகத்தைத் தணிப்பது பெரிய காரியமா என்ன? அவர்கள் பொறுமையாக, கடவுளின் வல்லமையை...

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக

திருப்பாடல் 147: 12 – 13, 15 – 16, 19 – 20 ”எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக” எருசலேம் என்று சொல்லப்படுகிற வார்த்தை, இஸ்ரயேல் மக்களைக் குறிக்கக்கூடியதாக இருக்கிறது. எருசலேமில் அமைந்துள்ள ஆலயம் தான், கடவுள் வாழும் இல்லமாகக் கருதப்பட்டது. எருசலேமை யாரும் அழித்துவிட முடியாது என்கிற நம்பிக்கை, இஸ்ரயேல் மக்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்திருந்தது. எருசலேம் படைகளின் ஆண்டவர் வாழும் கூடாரமாக அமைந்திருந்தது. அதுதான் பாதுகாப்பான இடமாக கருதப்பட்டது. எருசலேம் நகரம் வழிபாட்டின் மையமாகவும் விளங்கியது. இப்படி பல சிறப்புக்கள் வாய்ந்த எருசலேம் நகரம், ஆண்டவரைப் போற்ற வேண்டும் என்று திருப்பாடல் ஆசிரியர் வேண்டுகோள் விடுக்கிறார். அதாவது, இஸ்ரயேல் மக்கள் கடவுளைப் போற்ற வேண்டும் என்பதுதான் இதனுடைய மையப்பொருளாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்கள் கடவுளைப் போற்றுவதற்கு என்ன இருக்கிறது? எதற்காக அவர்கள் கடவுளைப் போற்ற வேண்டும்? கடவுள் இஸ்ரயேல் மக்களை முழுமையாக அன்பு செய்கிறார். மற்ற இனத்தவரை விட,...