Category: இன்றைய சிந்தனை

என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்

திருப்பாடல் 18: 1 – 2a, 3, 4 – 5, 6 ”என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்” அழுகையின் இறைவாக்கினர்“ என்று எரேமியாவைச் சொல்வார்கள். தாவீதிற்கும் இந்த அடைமொழி முற்றிலுமாகப் பொருந்தும். ஏனென்றால், அவரது உள்ளத்துயரத்தின் வெளிப்பாடே, அவர் எழுதிய திருப்பாடல்கள். இந்த திருப்பாடலும், தாவீதின் கலக்கத்தை வெளிப்படுத்தக்கூடிய திருப்பாடல். தன்னுடைய கவலையை அவர் பாடலாக வடிக்கிறார். துயரத்தோடு தொடங்குகிற அவரது பாடல், மகிழ்ச்சியில் முடிவடைகிறது. இந்த பாடல், சாமுவேல் புத்தகத்தில் வருகிற அன்னாவின் பாடலோடு இணைந்த ஒன்றாக இருக்கிறது. அன்னாவும் தன்னுடைய வேதனையை, பாடலின் தொடக்கத்தில் குறிப்பிடுகிறார். நேரம் செல்லச்செல்ல அவரது வேதனை அதிகரிக்கிறது. இறுதியில் கடவுளின் மாட்சிமையை வலிமையாக உணர்த்தி அது நிறைவடைகிறது. அந்த பாணி, இந்த பாடலிலும் காணப்படுகிறது. இந்த உலகத்தில் நமக்கென்று இருக்கிற ஒரே ஆறுதல், ஆதரவு கடவுள் மட்டும்தான். நமக்கென்று ஏராளமான நண்பர்கள் இருந்தாலும், உயிர் நண்பர் என்று ஒருவர்...

“IMPELLED BY LOVE” (SEE 2 COR 5:14)

“Whom do You make Yourself out to be?” –John 8:53 Imagine that you are a present-day medical doctor transported back in time a thousand years. Impelled by love for the suffering people of the time, you use your knowledge to cure many people of malaria, smallpox, and other diseases. Your reputation as a healer spreads rapidly. Local doctors, spurred by jealousy, attack you viciously. Though you try your best to reveal the modern medical truth about sterility, hygiene, etc., these doctors angrily contest your every word. They ask you: “Whom do you make yourself out to be?” (Jn 8:53) Before...

ஆண்டவரையும், அவரது ஆற்றலையும் தேடுங்கள்

திருப்பாடல் 105: 4 – 5, 6 – 7, 8 – 9 ”ஆண்டவரையும், அவரது ஆற்றலையும் தேடுங்கள்” திருப்பாடல்களில் பெரும்பாலான பாடல்கள் கடவுளைப் போற்றுவதற்கும், புகழ்வதற்குமானது. இந்த புகழ்ச்சிப்பாடல்களில் ஒரு சில பாடல்கள் மிகச்சிறியதாகவும், ஒரு சில பாடல்கள் மிக நீண்டதாகவும் காணப்படுகிறது. இது எதனைக் குறிக்கிறது என்றால், கடவுளைப் புகழ்வதற்கு நீண்ட பாடல்கள் தேவையில்லை. மாறாக, நல்ல தூய்மையான மனநிலை தான் அவசியம். எவ்வளவு நீளமாக நாம் பாடுகிறோம், வாழ்த்துகிறோம் என்பது முக்கியமல்ல, எந்த மனநிலையோடு நாம் கடவுளைப் போற்றுகிறோம், புகழ்கிறோம் என்பதுதான், இங்கே நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடமாக இருக்கிறது. கடவுளையும், அவரது ஆற்றலையும் தேட வேண்டும் என்று திருப்பாடல் ஆசிரியர் அழைப்புவிடுக்கின்றார். எதற்காக கடவுளையும், அவரது ஆற்றலையும் நாம் தேட வேண்டும்? இந்த உலகம் வாழ்வதற்கு கடினமானது. இங்கே நாம் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் ஏராளமாக இருக்கிறது. ஒவ்வொருநாளும் நாம் விழித்தெழுகிறபோது, பிரச்சனைகள் இல்லாத நாளாக இருக்க...

என்றென்றும் அவரைப் புகழ்ந்து போற்றுங்கள்

தானியேல்(இ) 1: 29, 30 – 31, 32 – 33 ”என்றென்றும் அவரைப் புகழ்ந்து போற்றுங்கள்” தானியேல் இணைப்புப் புத்தகத்தில் மூன்று இளைஞர்களைப் பற்றிய நிகழ்வை முதல் அதிகாரத்தில் வாசிக்கிறோம். அந்த மூன்று இளைஞர்கள் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபெத்நெகோ. இவர்கள் உண்மையான தெய்வமாகிய “யாவே“ இறைவனை வணங்கிக்கொண்டிருக்கிறவர்கள். வேற்றுத்தெய்வத்திற்கு ஆராதனை செலுத்த, அரசரால் வற்புறுத்தப்படுகின்றனர். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் இந்த இளைஞர்கள், கடவுளின் மாட்சியையும், மகிமையையும் புகழ்ந்து பாடுகிறார்கள். அதைத்தான் இந்த பாடல் நமக்கு உணர்த்துகிறது. கடவுள் இன்றோ, நேற்றோ கண்டுபிடித்து வழிபடக்கூடியவர் அல்ல. மாறாக, பல தலைமுறைகளாக வழிபட்டு வரக்கூடிய கடவுள். இந்த கடவுள் அவர்களின் மூதாதையரின் கடவுள். அவர்களை பல தலைமுறைகளாக வழிநடத்தி வந்த கடவுள். இன்றைக்கு இஸ்ரயேல் மக்களின் உயர்வுக்கு அவர் தான் காரணமானவராக இருக்கிறார். கடவுளின் அன்பையும், அருளையும் பெற, இஸ்ரயேல் மக்கள் தகுதியற்றவர்களாக இருந்தும், கடவுள் அந்த தகுதியை அவர்களுக்கு வழங்கியிருக்கிறார். கடவுள்...

அவனது வழிமரபு என்றென்றும் நிலைத்திருக்கும்

திருப்பாடல் 89: 1 – 2, 3 – 4, 26 – 28 ”அவனது வழிமரபு என்றென்றும் நிலைத்திருக்கும்” பொதுவாக, திருப்பாடல்கள் வேண்டுதல்களோடும், விண்ணப்பங்களோடும் தொடங்கும். இறுதியில் கடவுள் புகழ்ச்சியோடு முடிவடையும். ஆனால், இந்த திருப்பாடல் சற்று வித்தியாசமானது. புகழ்ச்சியோடு தொடங்குகிறது. வேண்டுதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து முடிவடைகிறது. தாவீதோடு கடவுள் கொண்டிருந்த உடன்படிக்கையை இது நினைவுபடுத்துவதாக அமைகிறது. கடவுள் தாவீதோடு என்ன உடன்படிக்கையை ஏற்படுத்தினார்? 2சாமுவேல் 7 வது அதிகாரத்தில், கடவுள் தாவீதோடு செய்து கொண்ட உடன்படிக்கைப் பற்றி தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அதில் தாவீதின் வழிமரபு என்றென்றும் நிலைத்திருக்கும் என்கிற வாக்குறுதி வழங்கப்படுகிறது. அந்த உடன்படிக்கையைக் கேட்டவுடன் நிச்சயம் தாவீது கடவுளின் அன்பை எண்ணி உள்ளம் மகிழ்ந்திருப்பார். ஏனென்றால், கடவுள் தாவீதை உயர்வான இடத்தில் வைத்திருந்தார். ஆடு மேய்க்கிற சாதாரண இடையனை, இஸ்ரயேல் மக்களை வழிநடத்தக்கூடிய அளவுக்கு உயர்த்தியிருந்தார். ஆனால், தாவீதோ அந்த நன்றியுணர்வு இல்லாமல், தவறு செய்தான். கடவுளுக்கு...