என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்
திருப்பாடல் 18: 1 – 2a, 3, 4 – 5, 6 ”என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்” அழுகையின் இறைவாக்கினர்“ என்று எரேமியாவைச் சொல்வார்கள். தாவீதிற்கும் இந்த அடைமொழி முற்றிலுமாகப் பொருந்தும். ஏனென்றால், அவரது உள்ளத்துயரத்தின் வெளிப்பாடே, அவர் எழுதிய திருப்பாடல்கள். இந்த திருப்பாடலும், தாவீதின் கலக்கத்தை வெளிப்படுத்தக்கூடிய திருப்பாடல். தன்னுடைய கவலையை அவர் பாடலாக வடிக்கிறார். துயரத்தோடு தொடங்குகிற அவரது பாடல், மகிழ்ச்சியில் முடிவடைகிறது. இந்த பாடல், சாமுவேல் புத்தகத்தில் வருகிற அன்னாவின் பாடலோடு இணைந்த ஒன்றாக இருக்கிறது. அன்னாவும் தன்னுடைய வேதனையை, பாடலின் தொடக்கத்தில் குறிப்பிடுகிறார். நேரம் செல்லச்செல்ல அவரது வேதனை அதிகரிக்கிறது. இறுதியில் கடவுளின் மாட்சிமையை வலிமையாக உணர்த்தி அது நிறைவடைகிறது. அந்த பாணி, இந்த பாடலிலும் காணப்படுகிறது. இந்த உலகத்தில் நமக்கென்று இருக்கிற ஒரே ஆறுதல், ஆதரவு கடவுள் மட்டும்தான். நமக்கென்று ஏராளமான நண்பர்கள் இருந்தாலும், உயிர் நண்பர் என்று ஒருவர்...