Category: இன்றைய சிந்தனை

தந்தை – மகன் ஒற்றுமை

யோவான் 17: 11 ”தூய தந்தையே, நான் ஒன்றாய் இருப்பது போல், அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்” என்று, தன்னுடைய சீடர்களுக்காக மன்றாடுகிறார். கிறிஸ்தவர்களுக்கு இடையேயான ஒற்றுமையை, தந்தை-உறவு ஒற்றுமையோடு ஒப்பிடுகிறார். எவ்வாறு கிறிஸ்துவும் இறைத்தந்தையும் ஒரே மனநிலையோடு இருக்கிறார்களோ, அவர்களைப் பிரிக்க முடியாதோ, அதேபோல கிறிஸ்தவர்களுக்கு இடையேயான மனநிலை இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். கிறிஸ்தவ வாழ்வின் முக்கியமான நோக்கமாக இந்த ஒற்றுமையை இயேசு குறிப்பிடுகிறார். நாம் வாழக்கூடிய வாழ்வில் அனைவருக்குமே ஒரு நோக்கம் இருக்கிறது. நாம் செய்யக்கூடிய செயல்பாடுகளிலும் இந்த நோக்கம் காணப்படுகிறது. அதேபோல, கிறிஸ்தவர்கள் அவர்களுக்கு நடுவில் இந்த ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்ற நோக்கத்தை உடையவர்களாக வாழ வேண்டும். எவ்வாறு தந்தையும், மகனும் ஒற்றுமையாக இருக்கிறார்களோ, அதே ஒற்றுமை கிறிஸ்தவ வாழ்விலும் வெளிப்பட வேண்டும். அந்த ஒற்றுமைக்கு ஆணிவேராக இருப்பது நாம் வெளிப்படுத்தக்கூடிய அன்பு....

இறைவனின் பார்வை

திருத்தூதர் பணி 11: 1 – 18 இறைவனின் பார்வை மனிதர்களின் பார்வையும், கடவுளின் எண்ணங்களும் எந்த அளவிற்கு வேறுபாடானதாக இருக்கிறது என்பதை, இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. பேதுரு ஒரு யூதர். அவருடைய பார்வை யூதப்பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கிறது. அந்த பாரம்பரியத்தின் பார்வையில் தான், எது தவறு? எது சரி? என்று அவர் முடிவெடுக்கிறார். யூதர்களுக்கு தங்களது இனம் தான் தூயது என்கிற எண்ணம் இயல்பாகவே இருந்தது. பேதுருவும் அந்த சிந்தனையில் தான் வளர்த்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் வேறு இனத்தவரோடு, அதாவது விருத்தசேதனம் செய்யாத இனத்தவரோடு உணவு உண்டது, மற்றவர்களுக்கு இடறலாக இருப்பதாக, அவரிடத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அதற்கான பதிலாக, தான் கண்ட காட்சியை பேதுரு வெளிப்படுத்துகிறார். ஒருவர் எந்த இனத்திலிருக்கிறார் என்பது முக்கியமல்ல. அவர் பெற்றிருக்கிற விசுவாசம் தான், அவரை கிறிஸ்துவுக்குள் இருக்கிறவராக காட்டுகிறது. உண்மையான கிறிஸ்தவர் என்பது, நாம் சார்ந்திருக்கிற இனத்தின் மூலமாக அல்ல,...

இறைவன் அனைவருக்கும் தந்தை

இஸ்ரயேல் மக்கள் தாங்கள் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்ற எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களின் இந்த எண்ணம் மற்றவர்களை ஏளனமாகப்பார்க்கக் காரணமாகியது. தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்கிற எண்ணம் பரந்துபட்ட பார்வையில் நல்லதுதான். ஆனால், அத்தகைய எண்ணம் தான், இஸ்ரயேல் மக்களின் அழிவுக்கும் காரணமாக அமைந்தது. தங்கள் வழியாக மற்றவர்களும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்ற பரந்துபட்ட எண்ணத்தைக்கொண்டிராமல், தங்கள் மூலம் இறைவன் மற்றவர்களை அழித்தொழிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். தொடக்கத்திலிருந்தே இறைவாக்கினர்கள் இந்த கருத்தை மெதுவாக மக்கள் மனதில் விதைத்துக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் மக்கள்தான் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலாத அளவுக்கு, அதனை மூடிவைத்திருந்தனர். நற்செய்தியாளர்கள் ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் நற்செய்தியை எழுதினாலும், ஒட்டுமொத்தத்தில், இந்த உலகம் முழுவதிற்கும் ஆண்டவர்தான் அரசர் என்ற கருத்தை ஒட்டுமொத்தமாக வலியுறுத்தினர். ஆண்டவர் அனைவருக்கும் பொதுவானவர். அனைவரையும் அன்பு செய்யக்கூடியவர். ஆண்டவரின் பார்வையில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இல்லை. வேற்றுமையை அகற்றி, அனைவரையும்...

ஆண்டவர் தம் அன்பர்களின் சாவு அவரின் பார்வையில் விலைமதிப்புக்குரியது

திருப்பாடல் 116: 12 – 13, 14 – 15, 16 – 17 ”ஆண்டவர் தம் அன்பர்களின் சாவு அவரின் பார்வையில் விலைமதிப்புக்குரியது” இந்த உலகத்தில் பிறந்திருக்கிற ஒவ்வொருவருமே கண்டிப்பாக இறந்தே ஆக வேண்டும். ஒரு சிலர் இயற்கையாக இறக்கலாம். ஒரு சிலர் விபத்தில் இறக்கலாம். ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்ளலாம். ஒரு சிலர் கொலை செய்யப்படலாம். மனிதர்கள் எல்லாருமே ஒருநாள் இறப்பது உறுதி என்றாலும், யாரும் சாவையே நினைத்துக்கொண்டிருப்பதில்லை. ஒருவேளை நாம் உடல் சுகவீனப்பட்டிருந்தால், நாம் சாவை நினைத்துப் பயந்து கொண்டிருக்கலாம். ஆனால், பெரும்பாலும், நாம் வாழ்க்கையை வாழத்தான் விரும்புவோம். இந்த உலகத்தில் வாழக்கூடிய ஒரு சிலருக்கு சாவு எப்போது வரும் என்பது தெரியாமல் இருந்தாலும், தாங்கள் சாவுக்கு அருகில் இருக்கிறோம், சாவு எப்போதும் தழுவலாம் என்பதை அறிந்தே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தான் கடவுளின் பார்வையில் விலைமதிப்புக்குரியவர்கள் என்று ஆசிரியர் கூறுகிறார். யார் இவர்கள்? எதற்காக...

திறந்த உள்ளத்தினராக வாழ்வோம்

திருத்தூதர் பணி 9: 1 – 20 திறந்த உள்ளத்தினராக வாழ்வோம் சவுலுடைய மனமாற்றம் பற்றிய சிந்தனைகளை இன்றைய முதல் வாசகம் நமக்குக் கற்றுத்தருகிறது. சவுல் திருச்சபையை அழித்தொழிக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டு செயல்பட்டவர். யூதப் பாரம்பரியத்தில் வளர்ந்தவர். கிறிஸ்தவம் யூத மறையை அழித்துவிடும். எனவே, அதனை எப்படியாவது தடை செய்ய வேண்டும் என்று, விரோத மனப்பான்மையோடு செயல்பட்டவர். மற்றவர்களால் அவர் இயக்கப்பட்டார் என்று சொன்னாலும், அவருடைய உள்ளத்திலும் கிறிஸ்தவர்களை அழிக்க வேண்டும் என்கிற எண்ணம் இயல்பாகவே இருந்தது. ஆனால், அனைவரும் ஆச்சரியப்படக்கூடிய வகையில் அவர் ஒரே ஒரு காட்சியினால் மனமாற்றம் அடைகிறார். இது எப்படி சாத்தியம்? சவுல் உயிர்த்த இயேசு அவருக்கு கொடுத்த காட்சியினால் மனம்மாறினால் என்று ஒரு வரியில் சொன்னாலும், சவுலின் மனமாற்றம் எப்போது தொடங்கியிருக்கும் என்பது தான் உண்மை. அந்த தொடக்கத்தின் நிறைவு தான், இந்த மனமாற்றம். எது சவுலின் மனமாற்றத்திற்கு காரணமாக இருந்திருக்கும்? நிச்சயம்...