Category: இன்றைய சிந்தனை

என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது

திருப்பாடல் 57: 7 – 8, 9 – 11 ”என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது” இந்த திருப்பாடல் ஒரு வித்தியாசியமான திருப்பாடல். தாவீது அரசரின் வாழ்க்கையில் மிகப்பெரிய நெருக்கடி. ஒரு கலக்கமான நேரம். அது மட்டுமல்ல சோதனையான நேரமும் கூட. கலக்கத்தையும், சோதனையையும் ஒரே நேரத்தில் அவர் வெற்றி கொள்ள வேண்டும். அந்த வேதனையான நேரத்தில் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு, அவரது உதவிக்காக இந்த பாடலைப் பாடுகிறார். கடவுள் மிக விரைந்து தனக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற வேண்டுதல் தான், இந்த திருப்பாடல். தாவீது அரசர் உண்மையிலேயே கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்பதற்கு பலவிதமான எடுத்துக்காட்டுக்களை நாம் பார்க்கலாம். தாவீது அரசர் மிகப்பெரிய பலவீனர்தான். வெகு எளிதாக தவறு செய்யக்கூடியவர் தான். கடவுள் அவருக்குச் செய்திருக்கிற செயல்களையெல்லாம், மிக விரைவாக மறந்து விடக்கூடியவர் தான். ஆனாலும், எல்லாவிதமான சோதனை, இக்கட்டுக்கள் நிறைந்த தருணங்களில் அவர், கடவுளின் உதவியையும், ஆலோசனையையும்...

படைப்புக்களின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகிறது

திருப்பாடல் 19: 2 – 3, 4 – 5 ”படைப்புக்களின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகிறது” கடவுள் இருக்கிறாரா? எங்கே இருக்கிறார்? கடவுள் உண்மையிலேயே இருக்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் என்ன? இவை போன்ற கேள்விகள், மனித உள்ளத்தில் அடிக்கடி எழக்கூடியவை. ஏனெனில், மனிதர்களாகிய நாம் எப்போதுமே, காரணங்களை, விளக்கங்களைத் தேடுகிறவர்களாக இருக்கிறோம். இன்றைய திருப்பாடல் கடவுளின் இருப்பை, அவருடைய மாட்சிமையை, மகிமையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இந்த திருப்பாடலில் வரக்கூடிய முதல் நான்கு இறைவார்த்தைகளுமே, கடவுளின் வல்லமையை பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது. நாம் காலை விழித்தெழுவதிலிருந்து பார்க்கக்கூடிய எல்லாவற்றிலும், கடவுளின் மகிமையைக் கண்டுனரலாம். காலையில் எழக்கூடிய சூரியன், எதையோ தேடி ஓடிக்கொண்டிருக்கிற மேகக்கூட்டங்கள், இரவு, பகல் மாற்றம் – இவையனைத்துமே தங்களைப் படைத்தவர் ஒருவர் இருக்கின்றார் என்பதை, வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. நாளை சூரியன் தோன்றுமா? தோன்றும் என்கிற நம்பிக்கையை, இயற்கை நமக்கு தந்துகொண்டே இருக்கிறது. அவையனைத்துமே கடவுளின் வேலைப்பாடுகள் தான். கடவுளை நாம்...

அகமகிழ்ந்து ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்

திருப்பாடல் 122: 1 – 2, 4 – 5 ”அகமகிழ்ந்து ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்” யெருசலேம் நகரத்தின் முக்கியத்துவத்தை தாவீது அரசர் காலத்தில் தான், மக்கள் அதிகமாக உணர்ந்தனர். அதற்கு தாவீதின் முயற்சியும் ஒரு காரணம், யெருசலேம் நகரை, கடவுளின் நகரமாக மாற்றியதில், தாவீதின் பங்கு மிக அதிகம் உண்டு என்பதில், மாற்றுக்கருத்து இல்லை. மக்களை ஒன்றிணைக்க, யெருசலேம் நகரத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் உணர வேண்டும் என்பதில், அவர் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இந்த திருப்பாடல் இந்த பிண்ணனியில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். இஸ்ரயேல் மக்கள் பல திருவிழாக்களை கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த திருவிழாக்களை எருசலேமில் கொண்டாடினர். திருவிழாக்களைக் கொண்டாடுவதற்காக அவர்கள் எருசலேம் வருகிறபோது பாடுகிற பாடலாக இந்த பாடல் அமைந்திருக்கிறது. எருசலேம் என்பதை, நம்முடைய புரிதலில் விண்ணக வீடாக எடுத்துக்கொள்ளலாம். விண்ணகம் தான் நமது நிலையான இல்லம். அந்த விண்ணக இல்லத்தில் நுழைவதைத்தான் நாம் நமது வாழ்வின் இலக்காகக்...

நல்ல சிந்தனைகளை வரவேற்போம்

தொழிலாளர் புனித யோசேப்பு இந்த உலகத்தில் பல மனிதர்களால் கொடுக்கப்பட்ட நல்ல கருத்துக்கள், நல்ல சிந்தனைகள், இருளையே ஒளியாக மாற்றக்கூடியப் போதனைகள் மண்ணோடு மண்ணாகப்புதைக்கப்பட்டிருக்கிறது. காரணம், கருத்துக்களைப்பார்க்காமல், யாரிடமிருந்து அந்த கருத்து வருகிறது? என்று ஒருவிதமான இறுகிய உள்ளத்தோடு இருக்கக்கூடிய நிலைமை. உண்மையை அறிய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், பகைமையையும், வெறுப்பையும் மட்டுமே அளவுகோலாகப் பார்க்கும் மனநிலை. இயேசுவின் போதனை படிக்காத பாமரர்களின் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏழைகளுக்கும் அடிமைப்படுத்தப்பட்டு நொறுக்கப்பட்ட மக்களுக்கும் விடுதலையைப்பெற்றுத் தருவதாகவும், வாழ்வின் அர்த்தத்தை அறிந்து கொள்வதற்கு உதவியது. ஆனால், படித்தவர்களுக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் அது எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. செய்தியை உள்வாங்காமல், இறுகிய மனத்தோடு அவர்கள் இருந்ததே காரணம். அவர்கள் இயேசுவின் கருத்துக்களையோ, அதில் பொதிந்திருக்கின்ற உண்மையையோப் பார்க்கவில்லை. இயேசுவின் கருத்துக்கள் தங்களின் வாழ்விலும் ஒளியேற்றும் என்றும் அவர்கள் பார்க்கவில்லை. அவர்கள் இயேசுவை மட்டுமே பார்த்தனர். அதுவும் அவரை விரோதியாக மட்டுமே பார்த்தனர்....

வாழ்க்கை என்னும் கொடை

திருத்தூதர் பணி 14: 5 – 18 வாழ்க்கை என்னும் கொடை தனி மனித வழிபாடு, நாம் வாழும் இந்த நவீன உலகத்தில் மட்டுமல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே இருந்திருக்கிறது என்பதற்கு, இன்றைய வாசகம் அருமையான எடுத்துக்காட்டு. பவுல் மற்றும் பர்னபா ஆகிய இருவரும், மக்கள் நடுவில் சென்று, நோய்களை குணமாக்குகின்றனர். முடவர்களை நடக்கச் செய்கின்றனர். அதனைக்கண்டு அவர்களை வழிபடுவதற்காக, அவர்களுக்கு பலி செலுத்துவதற்காக ஒரு கூட்டம் அவர்களிடத்தில் வருகிறது. அதனைப் பார்த்து, பவுலும், பர்னபாவும் அதனை புறக்கணித்துவிட்டு, அவர்களை கண்டிக்கின்ற விதமாக, கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். பணம் கொடுத்து விளம்பரங்களை தேடிக்கொள்ளும் இந்த உலகத்தில், இறைவன் ஒருவர் தான் மகிமைப்படுத்தப்பட வேண்டியவர் என்பதில், உறுதியாக இருந்து அதனை வாழ்ந்தும் காட்டியிருக்கிறார் பவுலடியார். உண்மைதான். இறைவனுக்காக அனைத்தையும் குப்பையென்று கருதுகிறேன் என்று வெறும் வார்த்தையில் மட்டுமல்ல. வாழ்க்கையிலும் நிறைவாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். புறவினத்து மக்களுக்கு நற்செய்தி அறிவிப்பதற்காக, தன்னுடைய வாழ்க்கை முழுவதையுமே...