என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது
திருப்பாடல் 57: 7 – 8, 9 – 11 ”என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது” இந்த திருப்பாடல் ஒரு வித்தியாசியமான திருப்பாடல். தாவீது அரசரின் வாழ்க்கையில் மிகப்பெரிய நெருக்கடி. ஒரு கலக்கமான நேரம். அது மட்டுமல்ல சோதனையான நேரமும் கூட. கலக்கத்தையும், சோதனையையும் ஒரே நேரத்தில் அவர் வெற்றி கொள்ள வேண்டும். அந்த வேதனையான நேரத்தில் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு, அவரது உதவிக்காக இந்த பாடலைப் பாடுகிறார். கடவுள் மிக விரைந்து தனக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற வேண்டுதல் தான், இந்த திருப்பாடல். தாவீது அரசர் உண்மையிலேயே கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்பதற்கு பலவிதமான எடுத்துக்காட்டுக்களை நாம் பார்க்கலாம். தாவீது அரசர் மிகப்பெரிய பலவீனர்தான். வெகு எளிதாக தவறு செய்யக்கூடியவர் தான். கடவுள் அவருக்குச் செய்திருக்கிற செயல்களையெல்லாம், மிக விரைவாக மறந்து விடக்கூடியவர் தான். ஆனாலும், எல்லாவிதமான சோதனை, இக்கட்டுக்கள் நிறைந்த தருணங்களில் அவர், கடவுளின் உதவியையும், ஆலோசனையையும்...