கடவுள் தம் நீதியை வெளிப்படுத்தினார்
திருப்பாடல் 98: 1, 2 – 3b, 3c – 4 ”கடவுள் தம் நீதியை வெளிப்படுத்தினார்” நீதி என்பது ஒருவருக்கு உரியதை ஒருவருக்குக் கொடுப்பது. அநீதி என்பது ஒருவருடைய உடைமையை அவரிடமிருந்து பறிப்பது. நீதி மற்றும் அநீதி என்பதை நாம் தெரிந்து கொள்வதற்கான அடிப்படை அளவுகோல் இதுதான். கடவுள் நீதியை வெளிப்படுத்தினார் என்பது ஒருவருக்கு உரியதை ஒருவருக்கு கொடுப்பது. இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டது. இந்த உலகத்தை அவர் படைத்தபோது, குறிப்பிட்ட மனிதர்களுக்காக இந்த உலகத்தைப் படைக்கவில்லை. இந்த உலகத்தை எல்லாருக்குமாகப் படைத்தார். ஆனால், மனிதன் தன்னுடைய பேராசையினால், மற்றவா்களுக்கு உரியதை, தன்னுடைய தேவைக்கும் அதிகமானதை அபகரிக்கத் தொடங்கினான். இங்கே தான், அநீதி தொடங்குகிறது. ஒரு குழுவை மற்றொரு குழு அடக்கி வைக்கத் தொடங்குகிறது. அடிமைப்படுத்த தொடங்குகிறது. இங்கு தான் கடவுள் தன்னுடைய நீதியை வெளிப்படுத்துகிறார். சமுதாயத்தின் தாழ்த்தப்பட்ட மக்களை, அடிமைப்படுத்தப்பட்ட மக்களை அவர் கைதூக்கி விடுகிறார். தான் நீதியுள்ள...