சின்னச் சிட்டுக்களை இயேசுவிடம் சேர்ப்போம்
மத்தேயு 19:13-15 இறையேசுவில் இனியவா்களே! இன்றைய திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். “விளையும் பயிர் முளையிலே தெரியும்” என்ற பழமொழி நமக்கு நன்றாகத் தெரியும். இப்போது விளைந்துக்கொண்டிருக்கிற பயிர்களை அதவாது சிறுவர்களை பார்க்கின்ற போது துயரமாக இருக்கின்றது. பயிர்களிலே நச்சு மருந்து கலந்திருக்கிறது. சிறுவயதிலே அவர்களுடைய சிந்தனை, சொல், செயல் இவைகளிலே நஞ்சு இருக்கிறது. சிறியவா்கள் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சின்னச் சிட்டுக்களின் வருங்காலம் வறுமையாய் மாறிக்கொண்டிருக்கிறது. சின்ன சிட்டுக்களின் வாழ்வில் வறுமையயை போக்கி எப்படி வளமையை, சிறப்பை சேர்க்க வேண்டும் என்பதற்கு இன்றைய நற்செய்தி நலம் தரும் நல்வாக்காக வருகிறது. அவர்களை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வளர்க்க வேண்டியது நம் பொறுப்பு. எப்படி எல்லாம் அவர்கள் நஞ்சு படாமல் பஞ்சு போல மென்மையாகவும், பரிசுத்தமாகவும் வாழ நாம்...