அலங்கரிப்போம்! அழகாக்குவோம்!
மாற்கு 7:1-8,14-15,21-23 இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 22ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். பொதுக்காலம் 22ம் ஞாயிறு மிக சிறப்பான அழைப்பைக் கொடுக்கிறது. உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் உடனடியாக தூய்மைப்படுத்த, அலங்கரிக்க அவரச அழைப்பு கொடுக்கின்றது. வாருங்கள் சுத்தமாக்குவோம். 1. வெளிப்புறத்தை அலங்கரிபோம் ‘நாட்டில் தூய்மையான நகரங்கள்’ குறித்து 434 நகரங்களில் புள்ளிவிவரம் எடுக்கப்பட்டது. இதில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாமை, திடக்கழிவுகள் மேலாண்மைக்கு (சாலைகளைச் சுத்தப்படுத்தல், குப்பை சேகரித்தல், அதை வேறு இடத்துக்கு வாகனங்களில் எடுத்துச் செல்லுதல், குப்பைகளைப் பிரித்து மறுசுழற்சி செய்தல் உட்பட) 45% மதிப்பெண் வழங்கப்பட்டது. நகரின் தூய்மையை தொடர்ந்து ஆய்வு செய்வதற்கு 25% மதிப்பெண் மற்றும் குடிமக்களின் கருத்துகளுக்கு 30% மதிப்பெண் என நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி நாடு முழுக்க 18...