எனக்கு நான் பகைவனா?
லூக்கா 11:15-26 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் அடுத்தவரோடு நட்புறவில் அன்புறவில் வாழ்வதற்கு முன் நம்மோடு நட்புறவில் அன்புறவில் வாழ வேண்டும். நான் என்னோடு நட்புறவில் அன்புறவில் வாழவில்லை என்றால் வளர்ச்சி என்பது இருக்காது. வருத்தம் என்பது வந்து சோ்ந்துக்கொண்டே இருக்கும். நான் எனக்கு பகைவனாக இருக்கும்போது என்ன நடக்கும் என்பதை எடுத்து வைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். 1. அரசு கவிழும் நான் நல்ல பாதையில் நடக்கவில்லை என்றால் என் அரசு கவிழும். இங்கு அரசு என்பது என் வாழ்க்கை. தீமையின் ஆட்சி எனக்குள்ளே நடக்கும் போது என் அரசை சரியாக என்னால் நடத்த முடியாது. ஆகவே நானே எனக்கு பகைவனாக மாறுகிறேன். என்...