ஆண்டவர் அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார்
திருப்பாடல் 78: 18 – 19, 23 – 24, 25 – 26, 27 – 28 “இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பான்” என்று சொல்வது பழமொழி. ஒட்டகத்திற்கு இடம் கொடுத்த கதையைக் கேட்டிருப்போம். இன்றைய திருப்பாடலை வாசிக்கிறபோது, இதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருக்கிறார்கள். அவர்கள் கண்ணீரோடு கடவுளிடம் முறையிடுகிறார்கள். அவர்களது முறையீடு எப்படி அமைந்திருக்கும்? எப்படியாவது இந்த இன்னல்களிலிருந்து கடவுள் தங்களை மீட்க வேண்டும் என்பதாகத்தான் அவர்களது மன்றாட்டு அமைந்திருக்கும். கடவுள் அவர்களை விடுவிக்கிறார். விடுதலை என்பது எளிதானது அல்ல. ஒரே இரவில் பெறக்கூடியது அல்ல. அதற்கு பலவாறு நாம் உழைக்க வேண்டும். இஸ்ரயேல் மக்களை கடவுள் விடுவிக்கக்கூடிய நிகழ்வு எவ்வளவு சவாலானது என்பது ஒவ்வொருவருக்கும் நன்றாக தெரியும். இவ்வளவு செய்த கடவுள் அவர்களை பாலைநிலத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வருகிறார். இறைவன் செய்திருக்கிற இவ்வளவு காரியங்களுக்கே இஸ்ரயேல் மக்கள் நன்றி...