ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்
திருப்பாடல் 149: 1b – 2, 3 – 4, 5 – 6a & 9 இந்த திருப்பாடல் ஒரு புகழ்ச்சிப்பாடல். இஸ்ரயேலின் கடவுளை ஆர்ப்பரிப்போடு வாழ்த்துகிற பாடல். போர்க்களத்தில் எதிரிநாட்டினரை அடிபணியச் செய்து தன்னுடைய வல்லமையை நிலைநாட்டிய யாவே இறைவனுக்கான பாராட்டுப்பாடல். இதனுடைய பிண்ணனி நிச்சயம் போர்க்களம். எதிரிநாட்டினருக்கு எதிராக, வெற்றியைப் பெற்றிருக்கிற தருணத்தில், தங்களது உள்ளக்கிடக்கைகளை மகிழ்ச்சியாக வெளிப்படுத்தியது தான் இந்த பாடல் என்று சொல்லலாம். அதிலும் சிறப்பாக சீயோனின் மீது தாவீது தன்னுடைய முழுமையான ஆளுமையை நிரூபித்த நேரத்தில் பாடப்பட்ட பாடலாகவும் நாம் கருதலாம். இஸ்ரயேல் மக்கள் எப்போதும் வாழ்க்கை நிகழ்வுகளோடு கடவுளைப் பொருத்திப் பார்த்தார்கள். தங்களுக்கு துன்பம் வந்தாலும் அது கடவுள் தான் அனுப்பியிருக்கிறார் என்று நினைத்து, அதற்கான காரணத்தை ஆராய்ந்தார்கள். அது போல வெற்றி வந்தாலும், தங்களுடைய பலத்தினால் அல்ல, மாறாக, யாவே இறைவனின் கொடையினால் தாங்கள் பெற்றது என்ற எண்ணம் அவர்களுக்கு...