Category: இன்றைய சிந்தனை

ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்

திருப்பாடல் 98: 2 – 3, 3 – 4, 5 – 6 மெசியாவின் வருகையை எடுத்துரைக்கக்கூடிய இறைவாக்குப் பாடல். மெசியா வருகையின் போது, எப்படி இந்த உலக மக்கள் அனைவரும் கடவுளின் விருந்தில் பங்குகொள்வார்கள் என அனைத்து மக்களையும் உள்ளடக்குகிற பரந்துபட்ட பாடல். கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு வாக்களித்திருந்தார். அவர்களை மீட்பதாக உறுதியளித்திருந்தார். அந்த வாக்குறுதியையும், உறுதிமொழியையும் எப்படி அவர் நிறைவேற்றப்போகிறார் என்பது இங்கு பாடலாக முன்னறிவிக்கப்படுகிறது. இந்த திருப்பாடலின் முக்கியமான செய்தி, அனைவருக்குமான மீட்பின் செய்தி. மீட்பு என்பது இஸ்ரயேல் மக்களுக்கானது மட்டுமல்ல. இந்த உலகத்திற்கானது. உலகம் முழுமைக்குமானது. இஸ்ரயேல் மீட்பைக் கொண்டு வருவதற்கான கருவி. அவ்வளவுதான். இஸ்ரயேல் மக்கள் மட்டுமல்ல,உலகத்தின் அனைத்து மக்களும் கடவுளின் பிள்ளைகள் என்பதை உரக்கச் சொல்லும் பாடலாக இது அமைவது தனிச்சிறப்பு. இந்த சிறப்பான செய்தியை கடவுள் மகிழ்ந்து கொண்டாடுவதற்கும் இந்த பாடல் அழைப்புவிடுக்கிறது. ஆக, இதனை மகிழ்ச்சியின் பாடலாகவும் பார்க்கலாம்....

கடவுளின் பேரன்பில் எப்போதும் நிலையாக நம்பிக்கை வைத்துள்ளேன்

திருப்பாடல் 52: 8, 9 சவுல் தாவீதைக் கொல்வதற்காகத் துடித்துக்கொண்டிருக்கிறார். தாவீதை மட்டுமல்ல, அவரோடு நெருக்கமானவர்களையும், குறிப்பாக குருக்களையும் கொலை செய்வதற்கு ஆணையிடுகிறார். அகிமலேக்கின் புதல்வர்களுள் ஒருவனான அபியத்தார் தாவீதிடம் வந்தடைகிறார். அவரிடத்தில் நடந்ததை விவரிக்கிறார். அப்போது தாவீது, ”உன் தந்தை வீட்டார் அனைவரும் இறப்பதற்கு நானே காரணம்” என்று குற்ற உணர்ச்சியில் கதறுகிறார். எனவே, அவரை தன்னோடு தங்குமாறு வேண்டுகிறார் (1சாமுவேல் 22: 22). இப்படிப்பட்ட துயரமான சூழ்நிலையிலிருந்து விடுபட, தன்னுடைய உள்ளத்தில் இருப்பதை எழுத்து வடிவத்தில் தாவீது எழுதுகிறார். அதுதான் இந்த திருப்பாடல். இந்த திருப்பாடலில் கடவுளின் பேரன்பில் எப்போதும் நிலையாக நம்பிக்கை வைத்துள்ளதாக தாவீது வெளிப்படுத்துகிறார். வாழ்க்கையில் எது நடந்தாலும், கடவுள் என்னோடு இருக்கிறார் என்பது தாவீதின் ஆழமான நம்பிக்கை. இக்கட்டான சூழ்நிலையிலும், நெருக்கடியான காலக்கட்டத்திலும் ஆண்டவரின் உடனிருப்பை உணர்ந்து வெளிப்படுத்துகிறார். அவருடைய உள்ளம் பதற்றமாக இருக்கிற வேளையில், தனக்கே நம்பிக்கை அளிக்கும் விதமாக, தன்னுடைய நம்பிக்கையை...

ஆண்டவரே! என் ஒளி!

திருப்பாடல் 27: 1, 4, 13 – 14 இந்த திருப்பாடல் தாவீது அரசர் அரியணை ஏறுவதற்கு முன்னதாக எழுதப்பட்ட திருப்பாடலாகவும், அந்த வேளையில் அவர் சந்தித்த துன்பங்களுக்கு மத்தியில் எழுதப்பட்ட திருப்பாடலாகவும் பார்க்கப்படுகிறது. தாவீதின் பெற்றோர் இறந்த நேரத்தில் பாடப்பட்ட பாடலாகவும் ஒரு சிலரால் சொல்லப்படுகிறது. ஆனால், பெரும்பான்மையான யூதர்களின் எண்ணப்படி, இந்த பாடல் பெலிஸ்தியருடனான போரின் போது, தாவீது இந்த பாடலை எழுதினார் என்பது தான் அவர்களின் நம்பிக்கை. 2சாமுவேல் 21வது அதிகாரம் இஸ்ரயேலருக்கும், பெலிஸ்தியருக்கும் இடையே நடந்த போரைக் குறிப்பதாக இருக்கிறது. 17 இறைவார்த்தையில் சொல்லப்படுகிற செய்தி: இஸ்பிபெனோபு என்னும் அரக்கர் இனத்தவன் ஒருவன் தாவீதை தாக்கவிருந்ததாகவும், செரூயாவின் மகன் அபிசாய் அவருடைய உதவிக்கு வந்து அப்பெலிஸ்தியனை வெட்டிக் கொன்றான் என்றும், இறுதியில் இஸ்ரயேல் மக்கள் தாவீதிடம் வந்து, ”இஸ்ரயேலின் விளக்கு அணைந்து போகாதவண்ணம் நீர் இனி எங்களோடு போருக்கு வரக்கூடாது” என்றும் சொன்னதாகவும் இந்த அதிகாரத்தில்...

பிற இனத்தாருக்கு ஆண்டவரது மாட்சியை எடுத்துரையுங்கள்

திருப்பாடல் 96: 1, 3, 4 – 5, 11 – 12, 13 பிற இனத்தவர்க்கு எதற்காக ஆண்டவரைப்பற்றிய செய்தியினை எடுத்துரைக்க வேண்டும்? இது கடவுளின் புகழை அனைத்து உலகினரும் அறிய வேண்டும் என்பதற்காகவா? கடவுளின் பலத்தை அறியச் செய்வதற்காகவா? நிச்சயமாக இது காரணமாக இருக்க முடியாது. கடவுளைப் பற்றி வெறும் புகழையும், வல்லமையையும் மற்றவர்கள் அறியச்செய்து, அவர்களை பயமுறுத்துவதற்காகவோ, அடிமைப்படுத்துவதற்காகவோ இதனை ஆசிரியர் சொல்கிறார். பின் எதற்கு ஆண்டவரது மாட்சியை அறிவிக்கச் சொல்கிறார்? ஆண்டவரது மாட்சியை அறிவிக்கச் சொல்வது, மற்றவர்களும் உண்மையான கடவுளை அறிந்து மீட்பு பெற வேண்டும் என்பதற்காக. இது சுயநலத்திற்கானது அல்ல. பொதுநலத்திற்கானது. அனைவரும் மீட்பு பெற வேண்டும் என்கிற பரந்த நோக்கத்தைக் கொண்டது. இறைவனின் அருமை பெருமைகளை அறிய வருகிறபோது, மற்றவர்களும் கடவுளிடத்தில் வருகிறார்கள். அவரின் அன்பைப் பெற்றுக்கொள்கிறார்கள். இவ்வாறு, பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியை நாம் மட்டும் அனுபவிக்கலாகாது. மாறாக, இந்த உலகத்தில் இருக்கிற அனைத்து...

எதிர்பார்ப்பின் உலகம்

எதிர்பார்ப்பு என்பது இந்த உலகத்தின் மதிப்பீடு. நாம் ஒருவருடைய உதவியைப் பெறுகிறோம் என்றால், நிச்சயம் அவர் நம்மிடமிருந்து ஏதோ ஒன்றை எதிர்பார்ப்பார். சாதாரண அரசு அலுவலகங்கள் இதற்கு சிறந்த உதாரணம். அரசு என்பது மக்களுக்கு சேவை செய்வதற்காக, ஏற்படுத்தப்பட்டது. அரசு ஊழியர்கள் மக்களின் தேவைகளை சரிசெய்வதற்காக, மக்களிடமிருந்து பெறப்படும் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக்கொள்கிறவர்கள். ஆனால் நடப்பது என்ன? சாதாரணமான வேலைக்கும், நாகூசாமல் பெரும்பாலான அரசு ஊழியர்கள், எதையாவது கேட்டே பெற்றுக்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். ஆக, எதிர்பார்ப்பு என்பது, சாதாரண வாழ்க்கை நடைமுறையாகி விட்டது. இப்படிப்பட்ட காலப்பிண்ணனியில் வாழும் நமக்கு இயேசுவின் போதனை சற்று எச்சரிக்கையாக அமைகிறது. எதையும் எதிர்பார்ப்பு இல்லாமல் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். ஒன்றை நாம் செய்கிறபோது, அது நமக்கு திரும்பச் செய்ய முடியாத மனிதர்களுக்குச் செய்வதுதான், எதனையும் எதிர்பார்ப்பு இல்லாமல் செய்வதற்கு சமமானதாக இருக்கிறது. வறியவர்கள், ஏழைகள், சாதாரண நிலையில் இருக்கிறவர்களுக்கு நாம் எதைக்கொடுத்தாலும், அவர்களால் நமக்கு திரும்ப...