தம்மைத் தாமே மீட்டுக் கொள்ள எவராலும் இயலாது
திருப்பாடல் 49: 5 – 6, 7 – 9, 16 – 17, 18 – 19 செல்வத்தைக் கொண்டு எல்லாவற்றையும் வாங்கி விடலாம் என்கிற மனப்பான்மை மத்திய கிழக்குப் பகுதியில் அதிகமாக காணப்பட்டது. ஏனென்றால், செல்வம் என்பது வெறுமனே உழைத்துப் பெறுவது மட்டுமன்று, அது கடவுளின் கொடை. கடவுளின் கொடை ஒரு மனிதனுக்கு கிடைப்பதால், யாரும் அவனை அழிக்க முடியாது என்று நினைக்கிறான். அந்த நினைப்பு தற்பெருமையாக மாறுகிறது. இப்படிப்பட்ட மனநிலை உள்ள பிண்ணனியில் திருப்பாடல் ஆசிரியர் இந்த வரிகளை எழுதுகிறார். இந்த உலகத்தில் வாழ்கிற எல்லாருமே மீட்பைப் பெற வேண்டும் என்று தான் விரும்புகிறோம். அந்த மீட்பை, கடவுள் நமக்கு வாக்களித்திருக்கிற நிலைவாழ்வை பெறுவதுதான் நம்முடைய வாழ்வின் இலக்காகக் கொண்டு வாழ்கிறோம். ஆனால், அந்த இலக்கை வெகு எளிதாக செல்வத்தைக் கொண்டு அடைந்து விடலாம் என்று தப்புக்கணக்கு போடுகிறோம். ஆனால், கடவுளின் பார்வையில் நல்ல செயல்களைச் செய்வோர்...