Category: இன்றைய சிந்தனை

பணிவிடை செய்யவே வந்தேன்

தங்களுக்குள்ளாக யார் பெரியவர்? என்று சீடர்கள் சண்டையிட்டுக் கொள்வது, இன்னும் அவர்கள் இயேசுவையும், அவரது பணிவாழ்வையும், அவரது பணியின் நோக்கத்தையும் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை என்பதையும், தங்களது வாழ்வின் முக்கியத்துவத்தை அவர்கள் இன்னும் அறிந்து கொள்ளவில்லை என்பதையும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. எதற்காக இந்த சண்டை எழுந்தது? தொடக்கத்தில் ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்ட சீடர்கள், திடீரென்று தங்களுக்குள்ளாக ஏன் சண்டையிட்டுக்கொள்கின்றனர்? இயேசுவை பல சீடர்கள் பின்தொடர்ந்தார்கள். அவர்களுள் திருத்தூதர்கள் முதன்மையானவர்களாக இருந்தனர். இயேசுவிற்கு பணிவிடை செய்வதற்கு பெண் சீடர்களும் உடனிருந்தார்கள். இயேசு மூன்று சீடர்களை எப்போதுமே, உடன் அழைத்துச் செல்வதையும் நாம் நற்செய்தியின் ஆங்காங்கே பார்க்கலாம். பேதுரு, யோவான், யாக்கோபு ஆகிய மூன்று பேர் தான், அந்த சீடர்கள். அவர்களுக்கு இயேசு முக்கியத்துவம் கொடுக்கிறபோது, மற்றவர்கள் பொறாமைப்படுவதற்கும், அந்த மூன்றுபேரும் பெருமைப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், இயேசு அவர்களுக்குள்ளாக யார் பெரியவர்? என்ற கேள்விக்கே இடமில்லை, என்பதை ஆணித்தரமாக வலியுறுத்திக்கூறுகிறார். யார் அதிகமாக பணிவிடை செய்கிறார்களோ,...

திருந்துகின்ற காலம்

கடவுள் இரக்கமுள்ளவர். மன்னிப்பு வழங்குவதற்காக காத்துக்கொண்டிருக்கிறவர். நம்மை முழுமையாக அன்பு செய்யக்கூடியவர். நாம் திருந்துவதற்கான வாய்ப்புக்களை நமக்கு ஏற்படுத்தி தந்து கொண்டே இருக்கக்கூடியவர். ஆனால், அந்த காலங்களை, வாய்ப்புக்களை நாம் விட்டுவிட்ட பிறகு, நமக்கான தீர்ப்பு குறிக்கப்பட்ட பிறகு, கடவுள் நீதியை நிலைநாட்டக்கூடியவராக இருக்கிறார் என்பதைத்தான், இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு கற்றுத்தருகிறது. ஏழை இலாசர் மற்றும் செல்வந்தன் உவமையில், செல்வந்தன் இந்த உலகத்தில் வாழ்ந்தபோது, கடவுளை அவன் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. கடவுள் மட்டில் அவனுக்கு பயம் இருந்ததாக தெரியவில்லை. செல்வம் தான், தன்னுடைய கடவுள் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறான். மற்ற சிந்தனைகள் அவனுடைய மனதிற்குள்ளாக வரவேயில்லை. இதுதான் நிரந்தரமான வாழ்க்கை என்று நினைத்துக்கொண்டிருக்கிறான். தன்னுடைய வாழ்வை மாற்றுவதற்காக, அவனுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்களை, வசதிகளை அவன் உதறித்தள்ளவிடுகிறான். ஆனால், தீர்ப்பிற்கு பிறகு அவன் மனம் வருந்துகிறான். தான் செய்தது தவறு என்பது, அவனுக்குத் தெரிகிறது. இருந்தாலும், காலம் கடந்துவிட்ட அந்த...

ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்

எரேமியா 31: 10, 11 – 12 ஆ, 13 இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் கடவுள் பல்வேறு அதிசயங்களைச் செய்திருக்கிறார். இந்த அதிசயங்களை, ஆச்சரியங்களை நேரடியாக அனுபவித்தவர்கள் இஸ்ரயேல் மக்கள். ஆனாலும், அவர்கள் கடவுளுக்கு எதிராக தவறுகளுக்கு மேல் தவறு செய்கிறார்கள். அவர்கள் செய்த தவறுக்கெல்லாம் அடிப்படைக் காரணம், கடவுளின் வார்த்தைக்கு செவிமடுக்காது, தங்களது மனம்போனபோக்கில் வாழ்ந்த வாழ்க்கை. இந்த பிண்ணனியில் தான், இறைவாக்கினர் எரேமியா, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள் என்று அழைப்புவிடுக்கிறார். கடவுளின் வார்த்தையை எதற்காகக் கேட்க வேண்டும்? கடவுள் எல்லாருக்கும் பொதுவானவர். அவர் நியாயத்தின் பக்கத்தில் இருக்கிறவர். தவறு செய்கிறவர்களைத் தண்டிக்கிறார். நல்லது செய்கிறவர்களுக்கு கைம்மாறு செய்கிறார். ஆனால், மனிதர்கள் சுயநலத்தோடு சிந்திக்கிறார்கள். எது சரி? எது தவறு? என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தாலும், தவறையே அவர்கள் செய்கிறார்கள். கடவுளின் வார்த்தையைப் புறக்கணிக்கிறார்கள். இது அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடவை ஏற்படுத்துகிறது. கடவுளின் பார்வையில் தீயதைச் செய்ய தூண்டுகிறது. இதனால், அவர்கள்...

இயேசுவின் தலைமைப்பண்பு

இயேசு தன்னுடைய சீடர்களிடத்தில் தன்னைப்பற்றி மக்கள் யார்? என்று சொல்வதாகக் கேட்கிறார். சீடர்கள் அனைவருமே அவர்கள் மக்களிடமிருந்து கேட்ட பதில்களை, இயேசுவிடத்தில் சொல்கிறார். இங்கே சீடர்களின் திறந்த மனநிலையைப் பார்க்கிறோம். தெளிந்த மனநிலையைப்பார்க்கிறோம். திறந்த மனநிலை என்பது, வெளிப்படையாகப் பேசுவதைக் குறிக்கிறது. சீடர்கள், இப்படிச்சொன்னால் இயேசு என்ன நினைப்பார்? என்று நினைக்கவில்லை. மாறாக, தாங்கள் கேட்டதை அவர்கள் இயேசுவிடத்தில் சொல்கிறார்கள். தெளிந்த மனநிலை என்பது, துணிவோடு சொல்கிறார்கள். குற்ற உணர்வு இருக்கிறபோது, இறுகிய உள்ளத்தோடு இருக்கிறபோது, நமக்கு நாவில் வார்த்தைகள் வராது. ஆனால், உள்ளம் தெளிந்த சிந்தனையோடு இருக்கிறபோது, நம்மால் சிறப்பாக, நாம் நினைத்ததைப் பேச முடியும். இதில் இயேசுவின் பங்கும் இருக்கிறது. இயேசு இப்படியான சூழ்நிலையை தன்னுடைய சீடர்களுக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறார். ஒரு அடக்குமுறையான சூழலாக இல்லாமல், அனைவருடைய கருத்துக்களுக்கும் இடங்கொடுக்கக்கூடிய, ஒரு ஆரோக்யமான சூழல் அங்கே நிலவுவதற்கு காரணம், இயேசு தான். இன்றைக்கு நாம் ஒரு குழுவின் தலைவராகவோ,...

இயேசுவைக் காண வாய்ப்புத் தேடினான் !

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பல தரப்பட்ட மக்களும் இயேசுவைக் காண விரும்பினார்கள். ஆனால், அவர்களின் நோக்கம் வெவ்வேறாக இருந்தது. எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் அவருடைய ஆறுதல் மொழிகளைக் கேட்க விரும்பினர். நற்செய்தியில் மகிழ விரும்பினர். நோயாளர்கள் அவரிடமிருந்து நலம் பெற விரும்பினர். நல் மனம் படைத்தோர் அவரின் அருள்மொழி கேட்டு அவரைப் பின்பற்ற விரும்பினர். ஆனால், குறுநில மன்னன் ஏரோது இத்தகைய நோக்கத்தோடு இயேசுவைக் காண விரும்பவில்லை. அவன் மனம் குழம்பினான் என்று நற்செய்தி தெளிவுபடுத்துகிறது. திருமுழுக்கு யோவானின் தலையை வெட்டிய கொடூரன் அவன்! இயேசுவை ஒருசிலர் திருமுழுக்கு யோவானுடன் ஒப்பிட்டுப் பேசியதால், இயேசு யார், என்ன பணி செய்கிறார் என்ற குழப்பத்துக்கான விடை காணவே இயேசுவைக் காண விரும்பினானே அன்றி, அவரிடமிருந்து விடுதலையோ, நலவாழ்வோ, நிறைவாழ்வோ பெற விரும்பி அல்ல. எனவே, அவனுடைய தேடல், ஆர்வம் இறைவனுக்கு ஏற்புடைய தேடல் அல்ல. நாம் இறைவனை என்ன மனநிலையில் தேடுகிறோம் என்று கொஞ்சம்...