கிறிஸ்தரசர் பெருவிழா
இயேசு கிறிஸ்து – அனைத்துலகின் அரசர் அரசர் என்பவர் யார்? ஓர் அரசர் எப்படி இருக்க வேண்டும்? எப்படி ஆள வேண்டும்? எப்படி தனது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்? என்பதற்கு இயேசு சிறந்த உதாரணம். இந்த உலகம் ஏற்றுக்கொள்வது போன்ற அரசர் இயேசு அல்ல. காரணம், அவர் அரசரின் வாரிசு அல்ல. தச்சரின் மகன். போரில் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியவரும் அல்ல. ஆனால், மக்கள் அனைவரின் மனதிலும் குடிகொண்டு, குறிப்பாக, ஏழை, எளியவர்கள் நடுவில் தன்னை முழுமையாக ஒப்படைத்த ஒப்பற்ற அரசர். அவர்கள் வாழ்வை உயர்த்துவதற்காக முழுமையாக அர்ப்பணித்தவர். ஒருவர் நல்ல நிலையில் இருக்கிறபோது, மற்றவருக்கு உதவி செய்ய மனமிருக்கலாம். அப்படி இருப்பவர்கள் கூட இன்றைக்கு அரிதாகி விட்டார்கள். ஆனால், துன்பத்தில் இருக்கிறதுபோது, தனது உயிரே ஊசலாடிக்கொண்டிருக்கிறபோது, தனது நிலையே மற்றவர்களால் பரிதாபப்படுகிறதுபோல இருக்கிறபோது, ஒருவர் மற்றவர்க்கு உதவி செய்கிறார் என்றால், அதுதான் ஒரு அரசரின் உணர்வாக இருக்க...