உயிரினங்களே! ஆண்டவரைப் போற்றுங்கள்
தானியேல் 1: 52, 53 – 54, 55 – 56, 57 – 58 இறைவனின் படைப்புக்களை அவரைப் போற்றுவதற்கு இந்த பாடல் அழைப்புவிடுக்கிறது. கடல் உயிரினங்கள், விலங்குகள் என்று ஒவ்வொன்றாக இந்த பாடல் இறைவனைப் புகழ்வதற்கு அழைப்புவிடுக்கிறது. இது ஒவ்வொரு உயிரினமும் இறைவனிடமிருந்து பல கொடைகளை, நன்மைகளைப் பெற்றிருப்பதையும், ஒவ்வொருவருக்கும் இருக்கும் கடமைகளை நினைவூட்டுவதாகவும் அமைகிறது. இறைவன் எல்லாரையும் அன்பு செய்கிறார். குறிப்பிட்ட இனத்தவரை மட்டுமல்ல, படைப்புக்களையும் அன்பு செய்கிறார். அவற்றிற்கு தலைவராக இருந்து அவைகளுக்குத் தேவையானவற்றையும் செய்து வருகிறார். அவற்றிற்கு கட்டளை தருகிறவரும் ஆண்டவரே. அவையும் இறைவனின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றன. இவ்வாறு பல்வேறு நன்மைகளைப் பெற்ற இயற்கையும், இறைவனைப் போற்றிப் புகழ்வதற்கான பொறுப்பை கொண்டிருப்பதை, இந்த பாடல் உறுதிப்படுத்துகிறது. இறைவன் உடனிருந்து எல்லாவற்றையும் இயக்குபவராக இந்த பாடல் பார்க்கிறது. எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமாக இறைவனை கருதுகிறது. இறைவனைப் போற்றுவது எல்லாருக்கும் மிகப்பெரிய பொறுப்பு என்பதை, இது உணர்த்தி...