செபம் செயலாகட்டும்
JESUS TODAY என்ற நூலின் ஆசிரியர் இவ்வாறு கூறுவார். மனிதனுக்குள் மூன்று வகையான ஆற்றல் உள்ளது. உடல் ஆற்றல், உள்ள ஆற்றல் மற்றும் ஆன்ம ஆற்றல் எல்லாருமே முதல் இரண்டு வகை ஆற்றலில் மிகச் சிறந்தவர்களாக விளங்குகின்றார்கள். ஆனால் மூன்றாவது வகை ஆற்றலை பெற தடுமாறுகின்றார்கள். ஆனால் ஒரே ஒரு மனிதன் மட்டுந்தான் இந்த மூன்றாவது வகை ஆற்றலில் சிறந்தவராக விளங்குகின்றார். அவர் தாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. அதனால் தான் அவரால் பல புதுமைகளும், வல்ல செயல்களும் செய்ய முடிந்தது. அவர் எப்படி இந்த ஆற்றலைப் பெற்றார் என்ற கேள்விக்கு விடையையும் ஆசிரியர் அந்த நூலின் இறுதி பக்கத்தில் தருகின்றார். அதாவது செபத்தின் வழியாக அவர் அந்த ஆற்றலை பெற்றதாக கூறுவார். அத்தகைய ஆற்றலின் விளைவைத் தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் பார்க்கின்றோம், இயேசு நோயாளர்களைக் குணப்படுத்துவதை. விவிலிய அறிஞர்கள் இயேசுவின் புதுமைகளை நான்கு வகைகளாகப் பிரித்துக்...