மரபா? மனிதனா?
மாற்கு 3: 1 – 6 மரபு மனிதனின் வாழ்வை நெறிப்படுத்த உதவுகின்றது. ஏனென்றால் அதன் வழியாகத் தான் நாம் நம்முடைய பண்பாட்டை அறிந்து கொள்ள முடியும். ஒரு வீடு என்றால் அதற்கு வாயில் என்பது மிகவும் இன்றியமையாதது. வீட்டிற்குள் செல்ல வேண்டுமென்றால் வாயிலின் வழியாகத் தான் செல்ல முடியும். மரபு என்பது மனிதன் இந்த மண்ணில் வாழ வாயிலாக இருக்கின்றது. ஆனால் மரபே வாழ்க்கையாக மாறும் போது அங்கு குழப்பம் ஏற்படுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இத்தகைய ஒரு நிலையைத்தான் நாம் பார்க்கின்றோம். ஓய்வுநாள் என்பது மக்களின் வாழ்வை நெறிப்படுத்துதற்காகத் தான் என்று விவிலியம் கூறுகிறது. இது கடவுளின் படைப்பின் பிண்ணனியிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பரிசேயர்கள் மனிதன் ஓய்வு நாளுக்காகத்தான் என்ற எண்ணத்தில் வாழ துவங்குகினார்கள். ஆனால் இயேசு ஓய்வு நாளை விட ஒருவனின் வாழ்வு முக்கியம் என எண்ணுகின்றார். அதனால் தான் கை சூம்பிய மனிதனுக்கு...