Category: இன்றைய சிந்தனை

ஓசன்னா எனும் புகழ்ப் பாடல்!

இன்று குருத்து ஞாயிறு. ஆண்டவர் இயேசுவின் பாடுகளின் ஞாயிறு என்றும் அழைக்கப்படுகிறது. இன்றைய வாசகங்கள் குருத்தோலைப் பவனியைப் பற்றி மட்டும் பேசாமல், ஆண்டவர் இயேசுவின் பாடுகள், இறப்பைப் பற்றியும் பேசுகின்றன. எனவேதான், “பாடுகளின் ஞாயிறு” என்னும் பெயரும் உண்டு. இன்றைய நாளில் இயேசுவின் பாடுகள், துன்பங்களைப் பற்றிச் சிந்திப்போம். ஒரு மாற்றத்துக்காக, அவருடைய உடல் துன்பத்தை அல்லாது, உளவியல் துன்பங்களை, மன உளைச்சலை எண்ணிப் பார்ப்போம். இயேசு மெய்யான மனிதர் என்னும் உண்மையின் அடிப்படையில், இயேசு உண்மையான பாராட்டுதல்களை ஏற்றுக்கொண்டார், மகிழ்ச்சி அடைந்தார் என நாம் நம்பலாம். அதுபோல, அவரைப் பற்றித் தவறான செய்திகள், வதந்திகள் பேசப்பட்டபோது அவர் மனம் புண்பட்டார், தாம் அநியாயமாகக் குற்றம் சாட்டப்படுவதாக எதிர்வாதிட்டார் என்பதையும் நற்செய்தி ஏடுகள் பதிவு செய்திருக்கின்றன. எனவே, இயேசுவின் பாடுகளின் நாள்களில் அவருக்கு நேரிட்ட உச்ச கட்ட மன அழுத்தங்கள், உளைச்சல், தனிமை உணர்வு, அவமான உணர்வு… இவற்றையும் நாம் சற்று...

பலருக்காக ஒருவர்

யோவான் 11: 45-57 நேற்றைய நற்செய்தியின் இறுதியிலும், இன்றைய நற்செய்தியின் தொடக்கத்திலும் முக்கியமான ஒரு ஒற்றுமை இருப்பதை நம்மால் காண முடிகிறது. அதாவது அதிகார வர்க்கத்தினரான தலைமைக்குருக்களும், மறைநூல் அறிஞர்களும் அவரை எதிர்த்தாலும் சாதாரண பாட்டாளி மக்கள் அவரை நம்ப துவங்கினர். எளிய மக்கள் அவரை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் தான் கயப்பா, “இனம் முழுவதும் அழிந்து போவதை விட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது” என்றார். இங்கே அவர் யூத இனமக்களையும், அவரின் அதிகாரத்தையும் பாதுகாப்பதற்கே இவ்வாறு கூறினார். ஆனால் உண்மையிலேயே இது தான் கிறிஸ்துவின் வருகையின் நோக்கம். இதை நாம் பல இடங்களில் காணலாம். குறிப்பாக 3: 16 ல் அவர் இவ்வுலகிற்கு வந்ததே இறப்பதற்காக, அந்த இறப்பு நம்மை மீட்பதற்காகவே. எப்படி ஓர் ஆதாமினால் பாவம் இம்மண்ணுலகில் நுழைந்ததோ. இரண்டாம் ஆதாமினால் பாவம் முழுவதும் அகற்றப்பட்டது. எப்படி ஒரு மரத்தினால் முதல்...

கடவுள் எங்கோ இல்லை.

யோவான் 10.31-42 கடவுள் எங்கோ இல்லை. பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே இயேசு தன் பணியைச் செய்து வந்தார். “இதோ இக்குழந்தை இஸ்ராயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும். எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்” என்ற இறைவாக்கினர் சிமியோனின் வாக்கு (லூக் 2:24) செயல்பட தொடங்கியது. தன் சொந்த ஊரிலேயே அவருக்கு எதிர்ப்பு, அவரைக்கல்லால் எரிந்து கொல்லவும், கேள்விகள் கேட்டு அவமானப்படுத்தவும், வாதம் புரிந்து தோற்கடிக்கவும், சூழ்ச்சிகள் செய்து உரோமையர்களிடம் மாட்டி விடவும் பல முயற்சிகள். இவை அனைத்திற்குமான காரணம் அவர் கடவுளை தந்தை என்று அழைத்தும், என்னைக் காண்கின்றவன் தந்தையைக் காணலாம் என்றும், தந்தையின் செயலினையே நான் செய்கிறேன் என்றும், கடவுளை நம்மோடு ஐக்கியப்படுத்தியதற்காகவே, கடவுளை நம் மத்தியில் கொண்டு வந்ததற்காகவே, அவரை மத்தியில் விட்டு அனைவரும் ஏளனம் செய்தனர். யூதர்களைப் பொறுத்தவரை கடவுளை எங்கோ இருப்பவராகவேப் பார்த்தனர். அவரை தம்மில் ஒருவராக அவர்களால் பார்க்க முடியவில்லை. அவர் இப்படி, அப்படியென்று...

அடிமைத்தனமே விடுதலை

லூக் 1: 26 -38 பல அடிமைத்தனத்தை இந்த பூவுலகு கண்டுள்ளது. பல புரட்சிகளை இம்மானிடர்கள் கடந்து வந்துள்ளனர். எத்தனைப் புரட்சிகளும் வந்தாலும் மீண்டும் மீண்டும் மனிதகுலம் எதற்காகவாது அல்லது யாருக்காவது இன்றுவரை அடிமையாக இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் அடிமையாகத்தான் இருக்கிறோம் என்பதை மறக்க, மறைக்க இயலாது. அப்படியென்றால் அடிமைத்தனம் இவ்வுலகில் நிரந்தரமா? நம்மை நாம் விடுவிக்க இயலாதா? இத்தகைய கேள்விகளுக்கு விடையும், மாதிரியும் தான் இந்த பெருவிழா. சாலையோரத்தில் நாயினைச் சங்கிலியில் பிடித்துக் கொண்டு செல்பவர்களைப் பார்த்து கேட்டால் அவர் நான் தான் என் நாயினை இழுத்துச் செல்கிறேன் என்றும், இந்த நாயினைத்தான் கழுத்தில் கட்டி என் கைக்குள் வைத்திருக்கிறேன் என்றும் கூறுவார். ஆனால், பல நேரங்களில் அவரைத்தான் அந்த நாய் தான் விருப்பட்ட இடத்திற்கெல்லாம் இழுத்து செல்கிறது. இதனைப் போலதான் நம் வாழ்வில் நாம் நினைக்கின்ற ஆசைகள், கனவுகள், திட்டங்கள், எல்லாம் நம் வாழ்வை அதனதன் வழிகள் இழுத்துச்...

உண்மையா?

யோவான் 8: 31-42 “உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்” -இதை இன்றைய தேர்தல் நெருங்குகிற சூழலில் சொன்னால் கண்டிப்பாக அனைவரும் சிரித்துவிடுவர். “உண்மையா அது என்ன” என்று பிலாத்து கேட்டதுப் போலதான் நாம் அனைவரும் கேட்போம். காரணம் யார் அதிகமாக பொய்க்கூறி ஏமாற்றுவார்களோ அவர்களே சிறந்தவர்கள், தலைவர்கள் ஆகுகிறார்கள். காரணம் இன்றைய உலகம் உண்மைப் பேசுபவர்களைவிட பொய் பேசுபவர்களுக்கே அதிகம் முக்கியத்துவம் தருகிறது. மசாலா தடவிப் பேசுபவர்களை உடனடியாக நம்புகிறது. பல வருடங்களாக மாற்றாத, பொய்யான தேர்வு வரைவினை இன்றுவரை கட்சிகள் வெளியிடுவது நாம் எவ்வளவு பொய்யானாலும் நம்புவோம் என்பதை அவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள். உண்மை ஊனமாகி விட்டது இவ்வுலகினில். ஆனால் இவ்வுலகில் இயேசுவின் வார்த்தையில் நிலைத்திருப்பவன் உண்மையை உணர்கின்றான். அது அவனுக்கு விடுதலை அளிக்கும், எதையும் தனது இயல்பான நாட்டத்தின் வழியே, செய்ய வேண்டியதை மனத்திடத்துடன் செய்வதே உண்மையான விடுதலையாகும். அத்தகைய உரிமை வாழ்வுக்கே இயேசு நம்மை அழைக்கிறார். அதையம்...