Category: இன்றைய சிந்தனை

என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு

திருப்பாடல் 146: 1 – 2, 5 – 6, 7, 8 – 9 மனிதன் கடவுளுக்கு எதிராக பல தவறுகளைச் செய்ததினால், அவனுடை கீழ்ப்படியாமையினால் அருள் வாழ்வை இழந்தான். தன்னுடைய நிலைக்கு தானே தான் பொறுப்பேற்க வேண்டிய நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டான். ஆனாலும், கடவுள் அவனை நிர்கதியாக விட்டுவிடவில்லை. அவன் மீது தான் இன்னும் அன்பாயிருக்கிறேன் என்பதை, பலவிதங்களில் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். கடவுளின் அன்பிற்கான வெளிப்பாடு தான், இன்றைய திருப்பாடல். இன்றைய திருப்பாடலில், கடவுள் இந்த உலகத்தை மீட்பதற்காக எடுக்கும் முயற்சியின் போது நிகழும், ஒரு சில அடையாளங்களை திருப்பாடல் ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். கடவுள் மெசியாவை நிச்சயம் அனுப்புவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்கிற வேளையில், மெசியா வந்தால், இதுதான் மெசியாவின் காலம் என்பதை எப்படி அறிந்து கொள்வது? என்பதற்கான விளக்கம், இந்த பாடலில், கொடுக்கப்படுகிறது. எதிர்காலத்தில் நிகழவிருப்பதை, முன்கூட்டியே வெளிப்படுத்துகின்ற இறைவாக்குப்பணியை, இந்த திருப்பாடல் அறிவிக்கிறது. மெசியா வருகிறபோது,...

உலகெங்குமுள அனைவரும் விடுதலையைக் கண்டனர்

திருப்பாடல் 98: 1, 2, 3, 3 – 4 இந்த உலகம் முழுவதையும் படைத்து பராமரித்துக்கொண்டிருக்கிறவர் நம் ஆண்டவராகிய கடவுள். அவருடைய பார்வையில் அனைவருமே விலையேறப்பெற்றவர்கள். அனைவருமே அவருடைய பிள்ளைகள். அவர் இஸ்ரயேல் மக்களைத் தேர்ந்தெடுத்தது பாரபட்சம் காட்டுவதற்காக அல்ல. மாறாக, அவர்கள் வழியாக இந்த உலகத்திற்கு மீட்பு கொண்டு வருவதற்காக. இஸ்ரயேல் மக்களையும் ஆண்டவர் தண்டித்தார். எப்போதெல்லாம் அவர்கள், கடவுள் விரோதச் செயல்களில் ஈடுபட்டார்களோ அப்போதெல்லாம், அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனையை வருவித்தார். கடவுள் இஸ்ரயேலம் மக்களைத் தேர்ந்தெடுத்தது, அவர்கள் ஒடுக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள் என்பதற்காகத்தான். நாம் வாழும் இந்த உலகில் மிகப்பெரிய பொறுப்புக்கள் யாருக்கு கொடுக்கப்படுகிறது? வலிமையானவர்கள், அதிகாரம் படைத்தவர்கள், பணபலம் மிக்கவர்கள். ஆனால், கடவுளின் பார்வையில் இஸ்ரயேல் மக்கள் தயவு பெற்றிருந்தனர். அவர்கள் கடவுளின் விலைமதிப்பில்லா பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டனர். அவர்கள் மீட்பின் வரலாற்றில், மிகப்பெரிய பொறுப்பை சுமந்து கொண்டிருந்தனர். அந்த பொறுப்பை ஒரு சில வேளைகளில் அவர்கள் சரிவரச்...

இறைவன் வழங்கும் அன்பு

எசேக்கியேல் 17: 22 – 24 உரிமை இழந்துபோயிருக்கிற மக்களுக்கு, அடிமைத்தனத்தின் ஆக்ரோஷத்தை அனுபவித்திருக்கிற மக்களுக்கு, வாழ்வே இவ்வளவு தானா? என்று வேதனைப்பட்டிருக்கிற மக்களுக்கு ஆறுதல் செய்தியாக வருவதுதான் இன்றைய வாசகம். தளர்ந்து போயிருக்கிற மக்களை நம்பிக்கை நிறைந்த சொற்களால், இறைவாக்கினர் வழியாக உறுதிப்படுத்துகிறார் இறைவாக்கினர். நடப்பது ஒவ்வொன்றும் இறைவனின் திட்டத்தின்படியே நடக்கிறது என்பது இங்கு நமக்குத் தரப்படுகிற செய்தியாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்கள் இறைவனின் அன்பை உணராதவர்களாக வேற்றுத்தெய்வங்களை நாடிச்சென்றதற்கு, இறைவன் அவர்களை எதிரிகளிடம் கையளிக்கிறார். எதிரிகளிடம் கையளிப்பது, அவர்களைத் துன்பப்படுத்துவதற்காக அல்ல. மாறாக, தங்கள் தவறை அவர்கள் உணர வேண்டும் என்பதற்காக. மீண்டும் அதே தவறை செய்யக்கூடாது என்பதற்காக. மக்கள் எந்நாளும் உண்மையுள்ளவர்களாக வாழ வேண்டும் என்பதற்காக. ஒருவருக்கொருவர் சகோதர மனப்பான்மையோடு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக. எனவே தான், மக்கள் திருந்திய உடனே, இறைவன் அவர்களுக்குத் தேவையான காரியங்கள் அனைத்தையும் உடனிருந்து செய்கிறார். ஏற்கெனவே ஆசீர்வதித்ததை விட,...

ஆண்டவர் எப்பொழுதும் சினம் கொள்பவரல்லர்

திருப்பாடல் 103: 1 – 2, 3 – 4, 8 – 9, 11 – 12 கோபப்படக்கூடிய மனிதர்களை பல வகைகளாக நாம் பிரிக்கலாம். எதற்கெடுத்தாலும் கோபப்படக்கூடிய மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தொட்டதெற்கெல்லாம் கோபப்படக்கூடியவர்கள். இது ஒரு வகையான உளவியல் நோய். அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சில நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு, இந்த உளவியல் நோய்க்கு ஆளாகி இருக்கிறார்கள். இரண்டாவது வகையான மனிதர்கள், தங்களை மறந்து கோபப்படக்கூடியவர்கள். அவர்களை அறியாமலேயே, இயல்பாகவே கோபத்தை வெளிப்படுத்தக்கூடியவர்கள். தாங்கள் செய்வது சரியா, தவறா என்கிற சிந்திக்கிற திறன் இல்லாமல், கோபப்படக்கூடியவர்கள். இதுவும் ஓர் உளவியல் சிக்கல் தான். என்றாலும், விழிப்புணர்வோடு இருந்து முயற்சி எடுக்கிறபோது, இந்த சிக்கலிலிருந்து நாம் மீள முடியும். கடவுள் சினம் கொள்கிறார் என்பது இதுபோன்ற மனிதர்களோடு ஒப்பிட்டுக்கூறக்கூடியது அல்ல. அது நீதி அவமதிக்கப்படுகிறபோது எழுகிற கோபம். நேர்மையாளர்கள் அநியாயமாக தண்டிக்கப்படுகிறபோது உண்டாகிற கோபம். வலியவன் எளியவனை சுரண்டுகிறபோது...

இறைவன் நம்மீது காட்டும் அன்பு

ஓசேயா 11: 1, 3 – 4, 8 – 9 முற்காலத்தில் பாரசீகம் மற்றும் கிரேக்க நாடுகள் அவ்வப்போது, கடுமையான போர்களில், ஒருவருக்கு எதிராக ஈடுபட்டனர். எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், கிரேக்க வீரர்களே எப்போதும் வெற்றி பெற்றனர். இதுஎப்படி சாத்தியம்? பாரசீக வீரர்களில் பெரும்பாலானவர்கள் அடிமைகள். அந்த போரில் ஈடுபடும்படி கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டனர். வேறு வழியில்லாமல் அந்த போரில் அவர்கள் ஈடுபட்டனர். ஆனால், கிரேக்க வீரர்களோ தங்கள் நாட்டிற்காக, தங்கள் நாட்டு மக்களை காப்பாற்றுகிறோம் என்கிற, உணர்வோடு போரிட்டனர். எனவே தான், எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், அவர்கள் வெற்றி பெற்றனர். தங்கள் தாய்நாட்டின் மீது கொண்டிருந்த பாசம், அந்த போரில் எப்படியும் வெற்றி பெற்று தங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தை அவர்களுக்குள் ஏற்படுத்தியது. இந்த உவமையை நாம் இஸ்ரயேல் மக்களுக்கும், கடவுளுக்கும் இடையேயான உறவிற்கு பொருத்திப் பார்க்கலாம். கடவுள் தன்னை இஸ்ரயேல் மக்களோடு அன்புறவில்...