Category: இன்றைய சிந்தனை

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்

திருப்பாடல் 106: 19 – 20, 21 – 22, 23 இறைவனை மறந்துவிட்ட, முற்றிலும் புறக்கணித்து விட்ட மக்களுக்கு விடுக்கப்படும் அறைகூவல் தான், இந்த திருப்பாடல். ஆண்டவருக்கு நன்றி செலுத்துவது அனைவருடைய கடமை. ஆனால், அதைக்கூட செய்யாமல், நன்றி உணர்வு இல்லாமல் வாழ்கிற மக்களுக்கு இந்த பாடல், திருந்தி வாழ அழைப்புவிடுக்கிறது. இறைவன் தொடக்கத்தில் இருந்து இஸ்ரயேல் மக்களுக்குச் செய்து வந்திருக்கிற எல்லா நன்மைகளையும் இந்த பாடல் நினைவுறுத்துகிறது. இஸ்ரயேல் மக்கள் சிலை வழிபாட்டில் தங்களையே முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்கிறவர்களாக இருந்தனர். சிலை வழிபாடு என்பது சிலைகளை வழிபடுவது என்பதாக மட்டும் அர்த்தம் கிடையாது. மாறாக, உண்மையான இறைவனை மறந்து, தவறான வழிபாட்டு முறைகளை கடைப்பிடிப்பது. தங்களுக்கு நன்மைகள் செய்த இறைவனை அவர்கள் மறந்தார்கள். வேற்றுத்தெய்வங்களை வழிபட்டார்கள். இவ்வளவு செய்தும் அவர்களை திரும்ப ஏற்றுக்கொண்ட, கடவுளின் நன்மைத்தனத்தைப் பார்க்காமல், அவர் செய்த நன்மைகளை பொருட்படுத்தாது, நினைவில் கொள்ளாது வாழ்ந்தனர். இந்த...

பதவிக்கான ஆசை உங்களை விரட்டுகிறதா?

யோவான் 6:1-15 திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர் (போப் பெனடிக்ட் XVI), உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 265வது திருத்தந்தையாக இருந்தவர் ஆவார். இவர் 1927 ஏப்ரல் திங்கள் 16 ஆம் நாள் பவேரியா, ஜெர்மனியில் பிறந்தார். இவரது இயற்பெயர் ஜோசப் ராட்ஸிங்கர் என்பதாகும். 2005 ஏப்பிரல் திங்கள் 19 ஆம் நாள் தனது 78 அகவையில் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றார். இவர் மூனிச் உயர் மறைமாவட்டத்தின் கர்தினால்-பேராயராக செயல்பட்டு வந்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 264 திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரின் மறைவினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பினார். இவர் தன் வாழ்வில் செய்த ஒரு சிறப்பான செயல் இன்றும் நம் மனக்கண் முன் நிற்கின்றது. ஒருபோதும் நாம் அதை மறக்க முடியாது. அது நம் அனைவருக்கான அழியா பாடம், அழகான பாடம். 2013 பிப்ரவரி மாதம் 28ம் தேதி திருத்தந்தை பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான விருப்பத்தை வெளியிட்டு அறிக்கை ஒன்றை 11 பிப்ரவரி 2013...

கடவுள் தாமே நீதிபதியாக வருகிறார்

திருப்பாடல் 50: 1 – 2, 5 – 6, 14 – 15 கடவுள் இந்த உலகத்தைப் படைத்தவர் மட்டும் அல்ல. அதனை பராமரிக்கிறவரும் கூட. இந்த உலகத்தில் நடக்கிற அநீதிகளுக்கு ஏற்ப தண்டனை கொடுக்கக்கூடியவரும் அவரே. கடவுள் இல்லையென்றால், பலருக்கு வாழ்க்கை நிச்சயம் கடுமையானதாகத்தான் இருந்திருக்கும். நேர்மையாக வாழ வேண்டும் என்று நினைத்து பலர், அதற்காக பல்வேறு தியாகங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அநீதி செய்வோர், தங்களது பலத்தால், அதிகாரத்தால் நேர்மையாளர்களைச் சூறையாடிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த வாரத்தில் ரூபா என்கிற கர்நாடாகாவைச் சேர்ந்த நேர்மையான காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்திருக்கிற அவலம் இந்த நாடறியும். இப்படி அநீதிகளுக்கு மத்தியில் நேர்மையாளர்கள் வாழ முடியுமா? என்றால், முடியும் என்பதை, இந்த பல்லவி வார்த்தைகள் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. கடவுள் எப்போதும் நேர்மையாளர்களைக் காக்கின்றவராகவும், அநீதி செய்கிறவர்களை எதிர்த்து நிற்கிறவராகவும் இருக்கிறார். கடவுள் காலம் தாழ்த்தலாம். அது வெறுமனே காலம் தாழ்த்துவது அல்ல. மாறாக, அவர்கள்...

ஆண்டவரைப்பற்றிய அச்சம் தூயது

திபா 19: 9 ஆண்டவரைப்பற்றி நாம் அஞ்ச வேண்டுமா? கடவுள் நம்மை அன்பு செய்கிறார். நம்மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார். நம் அனைவர் மீதும் அதிக இரக்கம் காட்டி வருகிறார். அப்படியிருக்கிறபோது, ஏன் கடவுளுக்கு நாம் பயந்து வாழ வேண்டும்? அச்சம் என்கிற வார்த்தையின் உண்மையான பொருளை அறிந்து கொண்டால், இதுபற்றி கேள்விகள் நமக்கு வராது. இங்கு அச்சம் என்று பயன்படுத்தப்படுகிற வார்த்தை, வெறும் பயத்தைக் குறிக்கக்கூடிய சொல் அல்ல. மாறாக, இறைவன் மீது வைத்திருக்கிற தனிப்பட்ட மரியாதையையும், மதிப்பையும், இறைவன் மீது வைத்திருக்கிற உண்மையான அன்பையும் குறிப்பதாக இருக்கிறது. இறைவன் மீது நாம் வைத்திருக்கிற இந்த அச்சம் தான், நம்முடைய வாழ்க்கையில் பயன் தருவதற்கு உதவியாக இருக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகம், பல மடங்கு பலன் தரும் விதையாக மாறுவதற்கு நமக்கு அழைப்புவிடுக்கிறது. நம்முடைய வாழ்க்கையை விதைக்கு ஒப்பிடலாம். இந்த உலகத்தில் பிறக்கிற நாம் அனைவரும், விதைகளாக விதைக்கப்படுகிறோம்....

ஆண்டவரே! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது!

திருப்பாடல் 63: 1, 2 – 3, 4 – 5, 7 – 8 இந்த உலகத்தில் தாகம் எடுக்காதவர்கள் என யாருமே இருக்க முடியாது. இந்த உடலுக்கு தண்ணீர் தேவை. ஏனென்றால், நம்முடைய உடல் பஞ்சபூதங்களால் இணைந்த ஒன்று. இந்த உடல் தண்ணீராலும் நிரப்பப்பட்டிருக்கிறது. தண்ணீர் அருந்துகிறபோது, நம்முடைய தாகம் தணிகிறது. இந்த தாகம் என்பதை நாம் பல வழிகளில் அறிந்து கொள்ளலாம். அதிகார தாகம், செல்வம் சேர்க்கக்கூடிய தாகம், முதல் இடம் பெற வேண்டும் என்கிற தாகம் என்று, இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இப்போது நாம் பார்த்த தாகமெல்லாம், இந்த உலகம் சார்ந்த தாகம். இன்றைய திருப்பாடலில் இந்த உலகம் சார்ந்த தாகம் குறிப்பிடப்படவில்லை. மாறாக, ஆன்மா சார்ந்த தாகம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திருப்பாடல் ஆசிரியரின் தாகம், இந்த உலகம் சார்ந்த தாகமாக இருக்கவில்லை. அவருடைய தாகம் இறையனுபவத்தைப் பெறுவதற்கான தாகமாக இருக்கிறது. இது உயர பறக்க...