கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்ந்து போற்றிடுவர்
திருப்பாடல் 67: 1 – 2, 4, 6 – 7 இறைவனின் ஆசீரை முழுமையாகப் பெற்றுவிட வேண்டும் என்று எண்ணுகிற ஒரு தாகமுள்ள மனிதனின் குரல் தான் இந்த திருப்பாடல். இறைவனின் ஆற்றலைக்கொண்டு எதையும் செய்ய முடியும் என்று, இறைவல்லமையின் மீது ஒரு மனிதன் வைத்திருக்கிற, அசைக்க முடியாத நம்பிக்கையை இந்த திருப்பாடல் வெளிப்படுத்துகிறது. இறைவனை அறியாத, அனுபவிக்காத இந்த உலகத்திற்கு ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்கிற தீராத ஆசையையும் இந்த பாடல் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இறைவனுடைய ஆசீர் கிடைத்தால் என்ன செய்யவிருப்பதாக ஆசிரியர் கூறுகிறார்? இறைவனுடைய ஆசீரை திருப்பாடல் ஆசிரியர் தன்னுடை சுயநலத்திற்காகக் கேட்கவில்லை. மாறாக, அவர் இறைவனின் வல்லமையை மற்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டுமென்று கேட்கிறார். ஒருவரை மற்றவர் மதிக்க வேண்டுமென்றால், அவர் தன்னுடைய வலிமையை நிரூபிக்க வேண்டும் என்கிற பார்வையைக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், இது புரிந்து கொள்ளக்கூடியது. மனித உணர்வுகளில் ஆசிரியர் பேசுகிறார். இதனை...