ஆறுதலின் இறைவன்
பிரிவிற்கும், நோன்பிற்குமான தொடர்பை இன்றைய வாசகம் விளக்கிக்காட்டுகிறது. பிரிவு என்பது பலவிதங்களில் நாம் வாழ்வில் அனுபவிக்கக்கூடிய ஒன்று. நமக்கென்று பல நண்பர்கள் இருப்பார்கள். அவர்களோடு நமக்கு ஒரு சில நேரங்களில், மனக்கசப்பு ஏற்படலாம். நமக்கும் அவர்களுக்குமான உறவில் விரிசல் ஏற்படலாம். அது தற்காலிகப் பிரிவை நிச்சயம் ஏற்படுத்தும். சில உறவுகள் நிரந்தரப் பிரிவுகளாக இருக்கும். இழப்பு மற்றும் இறப்பு நமக்கு ஆழாத்துயரை ஏற்படுத்தும் பிரிவாக இருக்கிறது. ஆக, பிரிவு என்பது நமக்கு வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கிறது. நோன்பு என்பது நம்மை இறைவன்பால் ஈடுபடுத்துவதற்கான முயற்சி ஆகும். இன்றைக்கு நோன்பிருந்து கால்நடையாக பல திருத்தலங்களுக்கு மக்கள் செல்கிறார்கள். நோன்பிருந்து செபிக்கிறார்கள். இவையனைத்துமே இறைவனை அடைவதற்கான ஒரு தேடலே ஆகும். இந்த நோன்பு, நம்மை கடவுள்பக்கம் ஈர்ப்பதாக அமைகிறது. அவரோடு நெருங்கி வருவதற்கு நமக்கு உறுதுணையாக இருக்கிறது. ஆக, நோன்பு என்பது கடவுளின் துணையை நாடுவதற்கான ஒரு செயல்பாடாக அமைகிறது. பிரிவில் நாம்...