Category: தேவ செய்தி

முதன்மையானது அன்பு

யூதப்பாரம்பரியத்தில் எப்போதுமே இரட்டை மனநிலை காணப்பட்டது. திருச்சட்டத்தை இன்னும் பல சட்டங்களாக விளக்கமளிக்கும் மனநிலை, இரண்டாவது திருச்சட்டம் முழுவதையும் ஒரே வாக்கியத்தில் கூறும் மனநிலை. இந்த இரட்டை மனநிலை தான், இறைவாக்கினர்களின் போதனையிலும் வேற்றுமையைக் காட்டியது. ஒரு சில இறைவாக்கினர்கள் ஏராளமான எண்ணிக்கையில் கடவுளின் திருச்சட்டங்களைக் கொடுத்தனர். ஆனால், மற்றவர்கள், விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் கடவுளின் சட்டங்களைக் கொடுத்தனர். உதாரணமாக, மோசே 613 சட்டங்களைப் பெற்றதாக சொல்லப்படுகிறது. இந்த 613 சட்டங்களை, தாவீது தன்னுடைய திருப்பாடல் 15ல், 11 ஆக குறைக்கிறார். இறைவாக்கினர் எசாயா(33: 15), இதனை மிகச்சுருக்கமாக ஆறாக, குறைக்கிறார். மீக்கா இறைவாக்கினர்(6:8) அதனை மூன்றாக குறைக்கிறார். மீண்டும் எசாயா இறைவாக்கினர், இதனை அடிப்படையில் இரண்டு திருச்சட்டங்களாக (56: 1) பிரிக்கிறார். இறுதியில் அபகூக்கு இறைவாக்கினர்(2: 4) ஒரே வரியில், “நேர்மையுடையவரோ தன் நம்பிக்கையினால் வாழ்வடைவர்” என்று, நிறைவு செய்கிறார். இவ்வாறு பழைய ஏற்பாட்டில், இறைவாக்கினர்களின் பல்வேறு விளக்கங்களுக்கும்...

ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்

திருப்பாடல் 94: 12 – 13அ, 14 – 15, 17 – 18 இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையில் எல்லோரையும் போல ஏற்ற, இறக்கங்கள் நிறைந்திருந்தது. அவர்கள் வளமையிலும் வாழ்ந்தார்கள். அதேபோல துன்பங்களும் அவர்களுடைய வாழ்வை நிறைத்திருந்தது. இந்த துன்பமான நேரத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு எழுந்த மிக்ப்பெரிய கவலை, கடவுள் நம்மோடு இருக்கிறாரா? என்பது. கடவுள் நம்மைக் கைவிட்டு விட்டாரோ? கடவுள் நம்மை விட்டுவிட்டு சென்று விட்டாரோ? என்கிற கவலை அவர்களுடைய உள்ளத்தில் நிறைந்திருந்தது. இப்படிப்பட்ட கேள்விகளுக்கான விடை தான், இன்றைய திருப்பாடல். திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார்: கடவுள் ஒருபோதும் தன்னுடைய மக்களை தள்ளிவிட மாட்டார். அதற்கு இரண்டு காரங்களை அவர் தெரிவிக்கிறார். முதல் காரணம், இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரால் தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தெரிந்தெடுக்கப்பட்ட மக்கள். அவர்கள் வழியாக இந்த உலகத்தை மீட்பதற்கும் ஆசீர்வதிப்பதற்கும் பணி இருக்கிறது. எனவே, கடவுள் அவர்களை ஒருபோதும் தள்ளிவிட மாட்டார். இரண்டாவது, இஸ்ரயேல் மக்கள்...

வேறெந்த இனத்திற்கும் அவர் இப்படிச் செய்யவில்லை

திருப்பாடல் 147: 12 – 13, 14 – 15, 19 – 20 கடவுள் இஸ்ரயேல் மக்களை எந்த அளவிற்கு அன்பு செய்து வந்திருக்கிறார் என்பதை, அவர்களுடைய வாழ்க்கை அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். மற்ற நாட்டினர் இஸ்ரயேல் மக்களைப் பார்த்து பொறாமை கொள்ளக்கூடிய அளவிற்கு அவர்கள் இறைவனால் நிறைவாக ஆசீர்வதிக்கப்பட்டிருந்தார்கள். கடவுள் தன்னுடைய நீதிநெறிகளையும், நியமங்களையும் இஸ்ரயேல் மக்களுக்கு அறிவிக்கிறார். வேறெவர்க்கும் இந்த நியமங்கள் தெரியாது. ஒருவேளை அவர்களுக்குத் தெரிந்திருந்தால், அவர்கள் அதனைக் கடைப்பிடித்து கருத்தாய் கடவுள் முன்னிலையில் வாழ்ந்திருப்பார்கள். அவ்வளவுக்கு கடவுளின் நியமங்கள் நேர்மையானவை என்பது திருப்பாடல் ஆசிரியருடைய கருத்து. இஸ்ரயேல் மக்கள் கடவுளின் அன்பை வெகு எளிதானதாக எடுத்துக்கொண்டார்கள். அந்த அன்பின் ஆழத்தை அவர்களால் உணர முடியவில்லை. அவர்களால் உணரமுடியவில்லை என்பதை விட, உணரவில்லை என்பதுதான் உண்மை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் திருப்பாடல் ஆசிரியர் இஸ்ரயேல் மக்களைப் பார்த்து இந்த அறைகூவலை விடுக்கிறார். “எருசலேமே, ஆண்டவரைப் போற்றுவாயாக”....

சொல்லுமில்லை, பேச்சுமில்லை

திருப்பாடல் 19: 1 – 2, 3 – 4 அப்போஸ்தலர்களான புனித சீமோன், யூதா பெருவிழா இயற்கையின் சிறப்பை, கடவுளின் கைவண்ணத்தை திருப்பாடல் ஆசிரியர் புகழ்ந்து பாடுகிறார். மனிதர்கள் அதிகமாக பேசுகிறார்கள். தங்களை எப்போதும் உயர்வாகவே பேசுகிறார்கள். அவர்கள் தங்களுடைய வார்த்தைகளுக்கு அதிகமான முக்கியத்துவத்தைக் கொடுக்கிறார்கள். அவர்களுடைய செயல்பாடுகளை அவர்களின் பேச்சோடு ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, சொற்கள் தான் அதிகமாக இருக்கிறது, செயல்பாடுகள் சொல்லக்கூடிய அளவில் இல்லை. திருப்பாடல் ஆசிரியர் இயற்கையிடமிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடமாக நமக்கு மிகப்பெரிய செய்தியைத் தருகிறார். இயற்கைக்கு சொல்லுமில்லை, பேச்சுமில்லை. ஆனால், தங்களுடைய செயல்பாடுகளால் அவை கடவுளின் மாட்சிமையை பறைசாற்றுகின்றன. கடவுளுக்கு தங்களது நன்றியுணர்வை எடுத்துரைக்கின்றன. கடவுளைப் பற்றிப்பிடித்துக் கொண்டு, கடவுள் தங்களுக்கு கட்டளையிட்டவாறே பணிகளைச் செய்து முடிக்கின்றன. தாங்கள் செய்ய வேண்டிய பணிகளை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து முடிக்கின்றன. அவற்றைச் செய்து முடிப்பதில் மகிழ்ச்சி கொள்கின்றன. நம்முடைய வாழ்வில், நாம் பேசுகிற வார்த்தைகளைக் குறைத்துக்கொண்டு...

கடவுள் தரும் மீட்பு

யார் தான் மீட்புப் பெற முடியும்? என்பதுதான் இயேசுவிடம் கேட்கப்பட்ட கேள்வி. இந்த உலகத்தில் ஆன்மீகச்சிந்தனையோடு வாழும் அனைவருமே, தங்களது இலக்காகக் கொண்டிருப்பது, மீட்பு. அனைத்து மதங்களும் இந்த மீட்பைப் பற்றித்தான் வெளிப்படையாக பேசுகின்றன. மதங்களின் கோட்பாடுகளும், அனைவரும் மீட்பு பெற வேண்டும் என்கிற ஒற்றை இலக்கில் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கின்றன. மீட்பு பெறுவது என்பது, நாம் வாழும் உலகில் எளிதானது அல்ல. மீட்பு என்பது நிலைவாழ்வைக் குறிக்கக்கூடிய சொல்லாக இருக்கிறது. இந்த உலகம் நிலையானது அல்ல என்பதுதான், பெரும்பாலான மதங்களின் கருத்தாக இருக்கிறது. அந்த நிலையான வாழ்வு நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. அந்த நிலையான வாழ்வை, நாம் பெறுவதற்கு தகுதி பெற வேண்டும். அதற்கு நாம் கடுமையாக, கடினமாக உழைக்க வேண்டும். பல தடைகளைத் தாண்ட வேண்டும். சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அதுதான் நமது இலட்சியமாக இருக்க வேண்டும். இன்றைக்கு வாழும் மக்கள், சவால்களை சந்திப்பதற்கோ, தோல்விகளை வெற்றிப்படிகளாக மாற்றுவதற்கோ தயாராக...