மாட்சிமிகு உம் பெயரை போற்றுகிறோம் ஆண்டவரே!
1குறிப்பேடு 29: 10, 11, 12 தாவீது கடவுளுக்கு ஓர் ஆலயம் கட்ட வேண்டுமென்று விரும்புகிறார். அதனை கடவுளிடத்தில் வேண்டுகோளாகவும் பணிக்கிறார். ஆனால், தாவீது பத்சேபாவுடன் செய்த தவறு, அவருடைய வாழ்க்கையில் நீங்காத கறையாக படிந்துவிடுகிறது. கடவுள் தனக்கு ஆலயம் ஒன்று, தாவீதால் கட்டப்படுவதை விரும்பவில்லை. ஏனெனில், அதற்கான தகுதியை அவர் இழந்துவிட்டார். ஆனால், தாவீது கடவுளுடைய பணிக்காக செய்த பல நல்ல பணிகளை அவர் மறக்கவில்லை. எனவே, அவருடைய மகன் சாலமோன் வழியாக, தனக்கு ஆலயம் கட்டுவதற்கு அனுமதி தருகிறார். இந்த பிண்ணனியில் தான், இந்த பாடல் பாடப்படுகிறது. ஆலயம் கட்டுவது தொடர்பான பணிகளைப் பற்றி, மக்களுக்கும், சபையோருக்கும் எடுத்துச்சொல்லிக் கொண்டிருக்கிற தாவீது அரசர், கடவுள் மீது தான் கொண்டிருக்கிற நம்பிக்கையை, தன்னுடைய ஆன்மீகத்தின் ஆழத்தை இந்த பாடல் வழியாக வெளிப்படுத்துகிறார். தாவீது கடவுளால் தண்டிக்கப்பட்டவர் தான். ஆனால், தாவீதின் உள்ளத்தில் தான், கடவுளால் தண்டிக்கப்பட்டோம் என்பதைக் காட்டிலும், கடவுளிடமிருந்து...