மனநிலையும் வழிபாடும்
மத் 5 : 20 -26 கண்ணால் காணமுடியாத கடவுளை அன்பு செய்கிறேன். அவருக்குப் பலி செலுத்துகிறேன் என்று அவருக்கும் நமக்கும் உள்ள உறவினை சரிசெய்வதற்கு முன்பாக, முதலில் கண்ணால் நீ காண்கின்ற உன் அயலானோடு உள்ள உறவுச் சிக்கலை சரிசெய்ய வேண்டும் என்பதே இன்றைய நற்செய்தி நமக்கு முன் படைக்கின்ற பாடமாகும். இதற்கு பரிசேயர்களின் அறநெறியைக் காட்டிலும் இயேசுவைப் பின்பற்றுகிறவர்களின் அறநெறி சிறந்ததாக இருக்க வேண்டும். பரிசேயர்களின் அறநெறி என்பது சட்டத்தை மட்டுமே சார்ந்தது. இரக்கம், அன்பு, மன்னிப்பு இவற்றிற்குச் சட்டத்தில் வேலையில்லை. ஆனால் இயேசு ‘நான் பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்று சொல்லி அவர்களின் சட்டத்திற்கு புதிய பொருளும், அழுத்தமும் கொடுக்கிறார். அவர்களின் சட்டங்கள் அனைத்தும் ஒருவரின் செயலினை மட்டும் கொண்டே மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால் ஆண்டவர் கூறும் புதிய நெறியில் செயலுக்குக் காரணமான மனநிலையையும் (யுவவவைரனந) நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்கிறார். எடுத்துக்காட்டாக, கொலை...